பக்கங்கள்

Thursday, March 26, 2015

நல்லாயிருந்த நடிகர்களை நாசமாக்கிய பிரமாண்ட இயக்குநர்


மேலும்-பிரமாண்ட இயக்குநரின் பிரமாண்ட படத்தின் விபரங்களுக்கு

காப்பி அடிப்பதிலும் தன் பிரமாண்டத்தை வெளிப்படுத்திய பிரமாண்ட இயக்குநரின் “ஐ”படத்தை சமீபத்தில் அந்தப் படத்தை நண்பரின் உதவிக்காக ஒப்புக்கு பார்க்க நேரிட்டது. அந்தப் படத்தை பார்த்துக் கொண்டு இருக்கும் பொழுதே..“ நல்லாயிருந்த நடிகர்களை நாசமாக்கிய பிரமாண்ட இயக்குநர்” என்ற கருத்துதான் எனக்கு  ஏற்ப்பட்டது. அந்த பிரமாண்ட இயக்குநாரின் வசனத்தை பேசும் சந்தானத்திடமிருந்தே அந்தத் தலைப்பு தோன்றியதற்கு இதுதான் காரிய  காரணம்.

பிரமாண்ட இயக்குநர், பிரமாண்டமாக இயக்கிய “ஐ” படத்திற்கு முன் பிரமாண்டமாக இயக்கிய படம் “எந்திரன்” அந்தப் படத்தின் மூலம் எல்லோரும் நல்ல லாபம் பெற்றனர். பேரும் புகழும் பெற்றனர். ஆனால் அதில் நடித்த நடிகர் , நோயாளி ஆகி..  அந்த நடிகரை சிங்கப்பூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்று. அந்த மருத்துவமனையில் சம்பாரித்த பணத்தையெல்லாம் கொட்டியதால்தான்  சிகிச்சையில் தேறி ஒரு வழியாக மீண்டு வந்தார்.

இதற்கு அடுத்து அந்த பிரமாண்டம் இயக்கிய பிரமாண்ட படமான்“ஐ”-யில் வழக்கம் போலவே எல்லோரும் நல்ல வருமானமும் பேரும் புகழும் பெற்றனர். ஆனால் வழக்கம் போலவே..அந்தப் படத்தில் நடித்த நடிகர். “ஐ” படத்திற்க்காக பல்வேறு கெட்டப்புகளில் தன் தோற்றத்தை குறைத்து கூட்டி நடித்ததால்..அந்த நடிகரும் நோயாளி ஆகி அவதிப்பட்டுக் கொண்டு இருக்கிறார்.

சர்வதேச தரத்தினாலான கார்ப்பரேட் மருத்துவ மனைக்குச் சென்று “,தான் சம்பாரித்த பணத்தையெல்லாம் கொட்டி தீர்த்தால்தான் சிகிச்சையில் தேறி மீண்டு வர முடியும்.”

ஆக. அடுத்து பிரமாண்டம் இயக்கும் பிரமாண்ட படத்தில் நடிக்கும் நோயில்லா நடிகர்கள்,  பேரும் புகழும் பணமும் பெற்றாலும் நோயாளியாகி நாசமாகுவது தவிர வேறு வழியே  இல்லை

22 comments :

 1. சினிமாவிலே இதெல்லாம் சகஜமப்பா :)

  ReplyDelete
 2. அப்படியா...? எனக்கு தெரியாமபோச்சே......

  ReplyDelete
 3. நல்லவேளை எல்லாவற்றையும் விபரமாக சொல்லிட்டீங்க நானும் இனிமேல் உஷாராகி விடுவேன்.

  ReplyDelete
  Replies
  1. எனக்கு தெரியும் நீங்க உஷாராகி விடுவிங்கன்னு....?

   Delete
 4. Replies
  1. பாவம் பன்னிக்குட்டி லாபம்ன்னு ஒரு பழமொழி வேறு இருக்குதுங்க.....

   Delete
 5. ஹி ஹி ஹி . அதெல்லாம் யோசிச்சிதாங்ணா நடிக்கவே சம்மதிப்பாங்க ..

  ReplyDelete
  Replies
  1. அப்படி சம்பாரிச்சதையும் ஆஸ்பத்திரியிலே கொட்டனுமுன்னும் யோசிக்கனுமில்ல......

   Delete
 6. இதுதான் பிழைப்பு.

  ReplyDelete
  Replies
  1. மருத்துவமனைக்கும் கொட்டி அழுவதும் அவர்கள் பிழைப்பு தானோ...ஐயா...

   Delete
 7. நண்பரே..

  மேல்நாட்டு படங்களின் காட்சி அமைப்புகளையும், ஒப்பனைகளையும் இவர் அப்பட்டமாய் உருவுவார்.... ஏன் மைக்கேல் ஜாக்சனின் பழைய ஆல்பங்களை கூட விட்டுவைக்கவில்லை இவர் ! ஆனால் மனது முன்னணி ஊடகங்களோ " உலக சினிமாவில் முதல் முறையாக " என பிரமிப்பார்கள்...

  சினிமாவிலும் இதெல்லாம் சகஜமப்பா !

  நன்றி
  சாமானியன்

  ReplyDelete
  Replies
  1. மேல்நாட்டு படங்களை பாரத்தவர்களுக்கு பிரமாண்டத்தின் வண்ட வாளம் தெரியும் பார்க்காதவர்களுக்கு “ பிரமிப்பாகதானே இருக்கும். திரு. சாமானியன் அவர்களே!!

   Delete
 8. உங்களுக்கு என்னப்பா, சாவ அவுங்க தயாரா இருக்கும் போது, பிரமாண்ட இயக்குநர் தங்களைத் தேடி வருகிறார்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்துரைப்படியே சாக தயாராக இருப்பவர்களை ஏன்? தற்கொலைக்கு முயற்சித்தார் என்றும், தற்கொலைக்கு தூண்டியதாகவும் வழக்கு பதிவு செய்கிறார்கள். செய்கிறார்கள் திரு.mageswari balachandran அவர்களே!!

   Delete
 9. எந்திரன் நடிகர் நோயாளி ஆகி சிங்கப்பூர் மருத்துவமனைக்கு தன் பணத்தையெல்லாம் கொட்டி தேறிய செய்தி தெரியும். ஆனா அவரை தேற்றியவர் என்ற பெயர் எடுத்தது கடவுள்.
  ஐ பட நடிகரும் நோயாளி ஆகியது உங்க பதிவின் மூலம் இப்போ தான் தெரிந்து கொண்டேன்.

  ReplyDelete
  Replies
  1. உண்மையை யாரும் அவ்வளவு எளிதில் சொல்ல மாட்டார்கள். சிலர் சொன்னாலும் ஒத்துக்கொள்ளமாட்டார்கள்...எந்தவித துறும்பு உதவியும் செய்யாமல் பெயர் எடுப்பது கடவுள்தான் திரு.வேகநரி அவர்களே!!

   Delete
 10. Replies
  1. ஆமாம் ஐயா..பிரமாண்ட இயக்குநர் இயக்கிய பிரமாண்ட படம் ஐயா.....

   Delete
 11. நடிகர்கள் இயக்குனர்களின் பொறுப்பற்றதனத்துக்கு பலியாகிவிடுகின்றார்கள். இயக்குனர்களின் திறமையால் சாதரணமானவன் நடிகனாகி நட்சத்திர அந்தஸ்தையும் அடைகின்றான். ஐ போன்ற படங்களின் பில்ட் அப் செலவுல மட்டும் 2 சின்ன பட்ஜெட் படம் எடுத்துடலாம். ஓவர் பில்ட் அப்பும் ஓவர் கான்பிடன்சும் உடம்புக்கு ஆகாது ஏன்னா என்னதான் முக்கினாலும் இந்த விசயத்துல முடிவ நாங்கதான் அதாவது ரசிகர்கள் தான் எடுப்பாங்க. ஐ படம் ஒரு பாடமாக இருக்கட்டும்.

  ReplyDelete
 12. எத்தனை தடவைகள் ஆனாலும் .. சுட்டு பொட்டாலும் பாடமாக மட்டும் இருக்காது அய்யா...

  ReplyDelete
 13. பாவம் நடிகர் கஸ்ரப்பட்டும் சொதப்பிவிட்டார் இயக்குனர்.

  ReplyDelete
  Replies
  1. சொதப்பி விட்டாலும் பரவாயில்லையே.. நாசமாக்கில விட்டார் இயக்குநர்

   Delete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com