சனி 28 2015

அழகான சாவுக்கு அடைக்கலம் தந்த தெரசா...

தெரசா - ஜெயலலிதா
படம்-வினவு.

மேட்டுக்குடிப் பெண்களுக்கு ‘சமூக சேவை’ என்பதும் ஒரு பொழுது போக்கு. சினிமா நடிகைகள் கூடச் சேரிகளுக்கும், அனாதை இல்லங்குளுக்கும் சென்று சேவை செய்வதும், இதனால்தான்.

“தொண்டு செய்து பழுத்தபழமான தெரசாவுக்குக் கிடைத்த நன்கொடைகளைக் கொண்டு அவர் ஒர் ஐந்து நட்சத்திர மருத்துவமனையை ஏழைகளுக்காக கட்டியிருக்க முடியும். ஆனால் அதற்கு அவர் ஒரு போதும் முயற்சித்ததில்லை .’பாவப்பட்ட’ நோயாளிகள் ஆண்டவனுக்குப் பதிலாக விஞ்ஞானிகள் மீது நம்பிக்கை வைத்துவிடுவார்கள் என்ற அச்சம்தான் காரணம். அதனால்தான், இன்னும் மருந்து கண்டறியப்படாத எய்ட்ஸ் நோயாளிகளுக்கு கூடுதலாக அடைக்கலம் அளித்தார்.

“நீங்கள் ஏன் எயிட்ஸ் நோயாளிகளுக்கு அடைக்கலம் தருகிறீர்கள்?” என்று இங்கிலாந்து வந்த தெரசாவிடம் பத்திரிகையாளர்கள் கேட்ட போது. “எயிட்ஸ்-க்கு மருந்தில்லை. இருப்பினும் எயிட்ஸ் நோயாளிகளை எங்களுடன் வைத்துக் கொள்கிறோம். எங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அன்பைச் செலுத்துகிறோம். அவர்கள் மிக அழகாக மரணமடைவார்கள்” என்று பதிலுரைத்தார் தெரசா .
‘அழகான’ சாவுக்கு அடைக்கலம் தருவதும். நோயாளிகளைப் பரமண்டலத்துக்கு விரைவாக அனுப்பி வைப்பதும்தான் அவரது சமூக சேவையின் நோக்கம் என்பதை இது மெய்ப்பித்துக் காட்டுகிறது. 
இந்தியச் சமுதாயம் தெரசாவை மட்டுமல்ல; பாசிச எம்.ஜி. ஆரைக் கூட வள்ளலாகப் போற்றுகிறது. பாசிச இந்திராவை அன்னையாக்குகிறது. பாசிச ஜெயாவை அம்மாவாக்கித் துதிக்கின்றது.

13 கருத்துகள்:

  1. கிறிஸ்டோபர் ஹிட்சென்ஸ்.அவர்கள் தன் குறும்படத்தில் தெரசாவைப் பற்றி சொல்லி இருப்பது முற்றிலும் உண்மை !

    பதிலளிநீக்கு
  2. தகவல்களுக்கு நன்றி.
    நானும் அறிந்தேன்,டயனா இறந்ததிற்கு தமிழக பத்திரிக்கைகள் எழுதுபவங்க பலர் துடித்து போனார்களாம்.

    பதிலளிநீக்கு
  3. அழகான மரணம் ......
    என்ன முரண்பட்ட சொல்லாட்சி...!
    புனிதங்களைப் பற்றி உங்களுக்கே உரித்தான மாற்றுச் சிந்தனை.
    இது இந்நாள் தேவை..!
    தொடருங்கள் அய்யா!
    நன்றி. த ம கூடுதல் 1

    பதிலளிநீக்கு
  4. நோக்கம் எதுவானாலும் செயலின் பயனை போற்றுவதே நன்று!
    என்பதே என் கருத்து

    பதிலளிநீக்கு
  5. ஆதரிக்காமல் விடப்படும் மனங்களுக்கு அவரின் சேவை பெரிதுதானே,,,,,,,,,,,,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த சேவையிலும் ஒரு உள் நோக்கம் இருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதான் பதிவின் நோக்கம்..திரு.. mageswari balachandran அவரக்ளே!!!

      நீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....