புதன் 01 2015

அவர்கள் சொன்ன..பத்து பயன்கள்...........!!!!!!.

படம்-www.thamizhil.com

தமிழ் நியூஸ்.தண்ணீர் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுகிறது என்று நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் வெந்நீரில் உள்ள பயன்கனை அறிந்திருக்கின்றோமா?

1. அளவுக்கு அதிகமான உணவோ அல்லது ஏதாவது எண்ணெய் உணவுகள் மற்றும் இனிப்புப்பண்டங்கள் உண்ட பின் சிலருக்கு ஒருவாறு நெஞ்சு எரிச்சல் இருந்தக்கொண்டிருக்கும் அச்சமயத்தில் வெந்நீரை பருகினால் நெஞ்சு எரிச்சல் போய்விடுவதோடு மற்றும் உணவும் செரித்துவிடும்.

2. காலையிலேயே வெந்நீர் அருந்தினால் மலப்பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைத்துவிடலாம்.

3. வெந்நீர் குடித்தால் உடலில் போடும் அதிகப்படி சதை குறைக்கலாம்.

4.உணவு உண்ட பின்பு வெந்நீரை பருகினால் இதயத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில் கொழுப்புகளை சேரவிடாமல் கரைத்துவிடும் சக்தி வெந்நீருக்கு உண்டு.

5. பாத்திரம் தேய்த்து, துணி துவைக்கும் பெண்கள் வாரத்திற்கு ஒரு முறையேனும் தங்களின் கைகளை வெந்நீரில் கொஞ்ச நேரம் வைத்திருந்தால் நக இடுக்கில் இருக்கும் அழுக்குகள் நீங்கி கைகள் சுத்தமானதாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

6. உடம்பு அசதியாகவுள்ளவர்கள் நன்றாக வெந்நீரில் குளித்தால் நன்றாகத் தூக்கம் வருவதோடு வலியும் பறந்துவிடும்

7. வெளியில் சென்று அலைந்துவிட்டு வருபவர்கள் வெந்நீரில் உப்புக்கற்கள் சிறிதளவு இட்டு அதில் சிறிது நேரம் பாதத்தை வைத்து எடுத்தால் கால் வலி குறைவதோடு கால்களில் உள்ள அழுக்கு நீங்கி பாதமும் சுத்தமாகிவிடும்.

8. மூக்கு அடைப்புக்கு சிறந்த மருத்துவர் வெந்நீர்தான். வெந்நீரில் முகத்தைக் காண்பித்தால் மூக்கடைப்பு குணமாகும்.

9. வெயிலில் அலைந்து விட்டு வருபவர்கள் குளிர்ந்த நீரை குடிப்பதை விட சற்றே வெதுவெதுப்பான வெந்நீர் அருந்துவது தாகம் தீர்க்கும் நல்ல வழியாகும்.

10. ஆஸ்துமா போன்ற நோய் இருப்போர் தங்களுக்கு தாகம் எடுக்கும் போதெல்லாம் கண்டிப்பாக வெதுவெதுப்பான வெந்நீர் குடித்து வர வேண்டும் மற்றும் தடிமன், காய்ச்சல் இருப்பவர்கள் வெந்நீர் குடித்து வந்தால் இதமாக இருப்பதோடு விரைவில் குணமாகி விடும்.

20 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி ! திரு.கில்லர்ஜீ அவர்களுக்கு...

      நீக்கு
  2. பயனுள்ள மருத்துவப் பகிர்விற்கு நன்றி அய்யா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துகளுக்கு நன்றி! திரு. ஊமைக்கனவுகள் அவர்களுக்கு....

      நீக்கு
  3. என்ன ஜி ,திடீர்ன்னு உடலில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர் ஆயிட்டீங்க :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வைத்தியர் அல்லாத என்னிடம் ,ஒரு நண்பர் கேட்டதற்க்காக இப்படியும் சில பதிவுகள் திரு் . பகவான்ஜீ அவர்களே!!...

      நீக்கு
  4. சிறந்த உளநல வழிகாட்டல்
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி! திரு. யாழ்பாவணன் காசிராஜலிங்கம் அவர்களுக்கு....

      நீக்கு
  5. பயனுள்ள பதிவு தோழரே...

    வெந்நீர் வைத்தியம் என்ற தனி வைத்திய முறையே உள்ளது. இன்று அதனை மேலை நாட்டவர் வெந்நீர் தெராபி என பார்லர்கள் அமைத்து பெரும் காசு பண்ணிக்கொண்டிருக்கிறார்கள் !

    இதனை அதிகம் கடைபிடித்த பிரபலங்களில் ஒருவர் காந்தி !

    எனது புதிய பதிவு : " த்ரோ தேம்பெர்மாசியோன் துய் லேம்பெர்மாசியோன் ! "
    http://saamaaniyan.blogspot.fr/2015/03/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
  6. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!! திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு........

      நீக்கு
  7. மூன்றாம் உலகப் போருக்கு
    சான்றாக திகழ இருக்கும்
    தண்ணிரின் மகத்துவம் மெகா சிறப்பு தோழரே!
    சுடு நீரின் பயன் சுகம்! சுகம் தேவ சுகம்!
    ஜெகம் போற்றும் சூப்பர் பதிவு!
    வாழ்த்துகள் வலிப் போகக்கரே!
    த ம + 1
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி! திரு. யாதவன் நம்பி (எ) புதுவை வேலு அவர்களுக்கு........

      நீக்கு
  8. அன்புள்ள அய்யா,

    வெந்நீரில் உள்ள பத்துப் பயனுள்ள பயன்களைச் சுட்டிக் காட்டியது அருமை.

    நன்றி.
    த.ம. 6.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துகளுக்கும் கருத்துரைக்கும் நன்றி! திரு. மனவை ஜேம்ஸ் அவர்களுக்கு...........

      நீக்கு
  9. ஆரோக்கியத்துக்கானதொரு பதிவு. உடல் நலம் மகிழ்ச்சியான வாழ்க்கையில் பெரும் பங்கு வகிக்கிறது. இல்லாத சொர்க்கத்திற்கு இறந்த பின்பு போக கற்பனை பண்ணி ஏங்காமல்,வாழும் உலகில் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உதவும் பதிவு இது.

    பதிலளிநீக்கு
  10. பயனுள்ள பத்து. முடிந்தவரை கடைபிடிக்க முயற்சிப்போம்.

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...