சனி 04 2015

நாடாண்ட முதல் பிரதமரின் முதல் நம்பிக்கை துரோகம்...!!!


Bundesarchiv Bild 183-61849-0001, Indien, Otto Grotewohl bei Ministerpräsident Nehru cropped.jpg
நாடாண்ட முதல் இந்தியப் பிரதமர்
http://ta.wikipedia.org/s/72


தனது வாழ்நாளில் சோதிடத் சூதுகளையும், மதச் சடங்குகளையும் பழித்துரைத்து வந்தும்  மதச் சார்பற்ற அரசு பற்றி வாய் கிழிய பேசியும் வந்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் இந்தியக் குழந்தைகளின் மாமாவாகவும் அழைக்கப்பட்டு வந்தவர் பண்டித  ஜவகர்லால் நேரு.

இந்த நேரு மாமா.. அதிகாரத்தை கையில் பெற்றவுடன் செய்த முதல் நம்பிக்கை துரோகம்தான் நேரு மாமாவின் பிரதமர் பதவி ஏற்பு விழா...

பார்ப்பன சோதிடர்கள் நல்ல நேரம் என்று குறித்து கொடுத்த காரணத்தால்தான். 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15 தேதியில் நட்ட நடு நிசியில் இந்து மத சடங்கு முறைப்படி, வேத மந்திரங்கள் ஓலமிட, பண்டித ஜவகர்லால் நேரு. இந்திய நாட்டின் முதல் பிரதமராக, நாடாளும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

அன்று தொடங்கிய , நாடாளும் பிரதமர்களின் நம்பிக்கை துரோகம், வாழையடி வாழையாக தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது.

18 கருத்துகள்:

  1. ஊருக்கும், உலகுக்கும்தான்டி அறிவுரை உனக்கும், எனக்கும் இல்லை போர்த்திக்கிட்டுபடுடீ பொன்னாத்தானானாம்.

    பதிலளிநீக்கு
  2. ஊருக்கும், உலகுக்கும்தானா..அறிவுரை?????????

    பதிலளிநீக்கு
  3. What is wrong in following good prinviples as per Hindu scriptures and epics? They help people purify their life. Even today there are sacred organizations like RSS that generate many selfless, honest, and mature leaders for he country. The thought that religion means people are against India should change. India will be more stronger and clean with Hinduism at its core

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழில் படிக்கத் தெரிந்த தாங்கள் தமிழில் கருத்துரை வழங்கலாமே...திரு.taruada அவர்களே!!

      நீக்கு
  4. பதில்கள்
    1. இந்த செய்தி முன்னமே தெரிந்திருந்தாலும் தற்போதுதான் பதிவிட்டுள்ளேன் அய்யா....

      நீக்கு
  5. குல இச்சை கல்லாமல் பாகம் படும் என்று ஒரு பழமொழி உண்டு வலிப்போக்கரே!

    த ம 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த பழமொாழி உண்மைதான் திரு.ஊமைக்கனவுகள் அவர்களே......

      நீக்கு
  6. மாமா காட்டிய அந்த வழியில்தான் நம்ம விஞ்ஞானிகள் pslv ராக்கெட் மாடலை கோவிலில் பூஜை செய்து பறக்க விடுகிறார்களா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாமா ஒரு கோடுதான் போட்டார்..ஜீ இவர்கள் அதுக்கு மேலே......

      நீக்கு
  7. நாடாண்ட முதல் இந்திய பிரதமருக்கு பலித்த( குறித்த) ஜோதிடம்
    அவரது வம்ச வழியில் வருபருக்கு இன்று பலிக்க வில்லையே ஏன்?
    வலிப் போக்கரே?
    த ம 7
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  8. அவர்களுக்கு பதிலாகத்தான், அவர்களது வழியிலே சூப்பர் பாஸ்டாக செயல்படும் இன்னொரு பிரதமருக்கு பலித்துக் கொண்டு இருக்கிறது திரு. புதுவை வேலு அவர்களே!!!

    பதிலளிநீக்கு
  9. அன்புள்ள அய்யா,

    1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15 தேதியில் நட்ட நடு நிசியில் இந்து மதச் சடங்கு முறைப்படி, வேத மந்திரங்கள் ஓலமிடப், பண்டித ஜவகர்லால் நேரு. இந்திய நாட்டின் முதல் பிரதமராக, நாடாளும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

    மதவாதிகள்... ஜோஸ்யர்களின் பிடியில் சிக்கித் தவிப்பது அன்று முதல் இன்று வரை தொடர் கதையாகிப் போனதே! விஞ்ஞானிகள்கூடத் தேங்காய் உடைத்துக் கடவுள் என்று சொலலப்படுகினறவரை நினைத்து... நல்ல நேரம் பார்த்து இராக்கெட்கூட விண்ணில் ஏவப்படுகின்ற இழிநிலை இன்னும் இருக்கின்றதே!

    நன்றி.

    த.ம.8.

    பதிலளிநீக்கு
  10. நல்ல நேரம் பார்த்து இராக்கெட்கூட விண்ணில் ஏவப்படுகின்ற இழிநிலை இன்னும் இருக்கின்றது..-- வாழையடி வாழையாக தொடர்ந்து கொண்டும் இருக்கும்.அய்யா....

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....