பக்கங்கள்

Wednesday, May 20, 2015

ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து நிறுவிய சிலை..நன்றி!  தோழர் Kalaiy Arasan அவர்களுக்கு

Shared publicly  -  01:08
"ஸ்டாலின் ஒரு கொடுங்கோலன். பல இலட்சம் மக்களை படுகொலை செய்தவன். பஞ்சம் உண்டாக்கி வருத்தியவன். சிறுபான்மை இனங்களை ஒடுக்கியவன்..." என்றெல்லாம் சொல்கிறார்கள். காசகஸ்தானில் துருக்கி மொழி பேசும் மக்கள் வாழும் கிராமம் ஒன்றில், உலகில் மிக அரிதாகக் காணக் கூடிய ஸ்டாலினின் சிலை ஒன்றுள்ளது. கடந்த வருடம், சூறாவளிக் காற்றால் விழுத்தப் பட்ட ஸ்டாலின் சிலையை, ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து மீண்டும் எழுப்பி இருக்கிறார்கள்.


முதலில் காசகஸ்தான் பற்றி ஒரு சிறு விளக்கம். "ஸ்டாலினிச கொடுங்கோன்மை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட நாடு" என்று மேற்கத்திய சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றனர்.   துருக்கி மொழி பேசும் முஸ்லிம்கள் ஒடுக்கப் பட்டனர், பஞ்சம் காரணமாக பல இலட்சம் பேர் பலியானதாக கணக்குக் காட்டுகின்றனர். 


"ஸ்டாலினிச கொடுங்கோன்மையால் பாதிக்கப்பட்ட" காசகஸ்தானில் தான், ஸ்டாலின் சிலைகள் மிக அரிதாகக் காணக் கிடைக்கின்றன. அதற்குக் காரணம், ஸ்டாலினின் மறைவுக்குப் பின்னர் குருஷேவின் சதிப்புரட்சி நடந்தது. குருஷேவின் உத்தரவின் பேரில், முன்னாள் சோவியத் யூனியனில் இருந்த அனைத்து ஸ்டாலின் சிலைகளும் அகற்றப் பட்டன.


மேலே படத்தில் உள்ள ஸ்டாலின் சிலை, தெற்கு காசகஸ்தானில் உள்ள Eski Ikan கிராமத்தில் உள்ளது. 1956 ம் ஆண்டு, அந்த சிலையை இடிப்பதற்கு குருஷேவ் அனுப்பிய  அதிகாரிகள் வந்திருந்தார்கள். அப்போது அங்கு ஒன்று திரண்ட கிராமவாசிகள், சிலையை உடைக்க விடவில்லை. "உடைப்பதாயின் எமது பிணத்தை தாண்டிச் செல்லுங்கள்" என்று பிடிவாதமாக தடுத்து நின்றனர். அதனால், அநதச் சிலை அப்படியே இருக்க விடப் பட்டது.


இப்போது காசகஸ்தான் ஒரு தனியான சுதந்திர நாடு. 2014 ம் ஆண்டு, பெரியதொரு புயல் காற்று சிலையை விழுத்தியது. அதனை திருத்தித் தருமாறு, ஊர் மக்கள் அரச அதிகாரிகளிடம் முறையிட்டார்கள். ஆனால், அரசாங்கம் அது குறித்து அக்கறைப் படவில்லை. பொறுத்துப் பார்த்த ஊர் மக்கள், தாமாகவே ஒன்று கூடி, எல்லோரிடமும் பணம் சேர்த்து, ஸ்டாலின் சிலையை மீண்டும் எழுப்பி உள்ளனர்.


காசகஸ்தானில், துருக்கி பேசும் முஸ்லிம் கிராம மக்கள், ஸ்டாலின் மீது அந்தளவு பற்று வைத்திருக்கக் காரணம் என்ன? பாஸிசத்திற்கு எதிரான, 2 ம் உலகப்போரில், அந்த கிராமத்தில் இருந்து நூற்றுக் கணக்கான ஆண்கள், செம்படையில் சேர்ந்து போர்க்களத்திற்கு சென்றிருந்தார்கள். 


சோவியத் யூனியனின் ஐரோப்பிய பகுதி தான் போரினால் கடுமையாக பாதிக்கப் பட்டது. ஆசியப் பகுதியான காசகஸ்தானில், போரின் தாக்கம் சிறிதும் இருக்கவில்லை. இருப்பினும், அந்த மக்கள் "சோவியத் தாய்நாட்டிற்காக, ஸ்டாலினுக்காக" போருக்கு சென்றனர். "ஸ்டாலின் இப்போது இல்லை. ஸ்டாலினிச காலகட்டமும் இல்லை. ஆனால், எமது முன்னோர் கட்டிய நினைவுச் சின்னம் நிலைத்து நிற்கும்." என்று அங்கு வாழும் மக்கள் கூறுகின்றனர்.  

மேலதிக தகவல்களுக்கு:
http://otyrar.kz/2015/05/v-starom-ikane-vosstanovili-pamyatnik-stalinu/

14 comments :

 1. நல்லதொரு சரித்திர தகவல் தந்தமைக்கு நன்றி நண்பரே..

  ReplyDelete
 2. ஸ்டாலின் உருவாக்கிய ரஷ்யா பல துண்டாகி போனது வருத்தத்தை தருகிறது :)

  ReplyDelete
  Replies
  1. சரியான வழியில் செல்லவில்லை என்றால்..சிதைந்துதான் போகும் என்று முன்னரே ஆசான் கள் கூறியிருக்கிறார்கள். நண்பரே...

   Delete
 3. அறிந்திராத ஒரு தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் அவை அறிந்திராத தகவலாக இருந்ததால் பகிர்ந்தேன்.அய்யா....

   Delete
 4. தெரியாத தகவல்கள் தெரிந்துக்கொண்டேன். நன்றி.
  எமது முன்னோர் கட்டிய நினைவுச் சின்னம் நிலைத்து நிற்கும்." என்று அங்கு வாழும் மக்கள் கூறுகின்றனர்.
  தாங்கள் சொல்ல வருவது?????????

  ReplyDelete
  Replies
  1. நான் சொல்ல வருவது இதுதான் "ஸ்டாலின் ஒரு கொடுங்கோலர் ”இல்லை என்பதுதான்

   Delete
  2. இங்கும் நிறைய சிலைகள் உண்டு வலிப்போக்கரே,
   அதைப்பற்றி தாங்கள்?

   Delete
  3. இங்கு நிறுவப்பட்டதெல்லாம் அடுத்த ஓட்டுக்காவும், தேர்தல் சீட்டுக்காகவுதான்... நண்பரே...

   Delete
 5. அறிந்திராத தகவல்... நன்றி ஜி...

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் அவை அறிந்திராத தகவலாக இருந்ததால் பகிர்ந்தேன்.அய்யா....

   Delete
 6. சிறந்த வரலாற்றுச் செய்தி
  சிறந்த பகிர்வு
  தொடருங்கள்

  ReplyDelete
 7. காசகஸ்தானில் மத அடிப்படையில் பெண்களை துணியால் மூடி வைத்தல் போன்ற மத பிற்போக்கான முறைகள் கிடையா என்பதை அறிந்திருக்கேன்.அப்படி வருவதற்கு அவர் ஸ்டாலின் காரணமென்றால் அவருக்கு எனது மரியாதைகள்.
  //காசகஸ்தானில் துருக்கி மொழி பேசும் மக்கள் வாழும் கிராமம் ஒன்றில்...//
  நான் தெரிந்து கொண்டவை காசகஸ்தானில் காசகஸ்தான் பாஷை தான் பேசுகிறார்கள். அவர்கள் பாஷைக்கும் துருக்கிக்கி பாஷைக்கும் உள்ள தொடர்பு மலையாளத்துக்கு தமிழுடன் உள்ள தொடர்பு மாதிரியானது என்பது.

  ReplyDelete
 8. தாங்கள் ஸ்டாலினுக்கு செலுத்திய மரியாதைக்கு நன்றி!! தமிழுடன் தொடர்பு உள்ள மொழியைப்பற்றிய தகவலுக்கும் நன்றி!!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com