பக்கங்கள்

Saturday, May 30, 2015

பெண் போலீஸ் .எப்போது ஆண் போலீசா..ஆனாள்..!!!“மவனே.. எனக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியிருந்தா...”
படம்-viruvirupu.com
  அவள் அவனைப் பார்த்தாள்
அவளின் பார்வையில் தன்
பார்வை சந்திப்பதை தவிப்பதற்க்காக
தலை குனிந்து தரையை
பார்த்தான்.அவளை திருட்டு
பார்வையால் பார்த்தபோது
தலையில் கொண்டையும் தன்னைப்
 பார்க்கும் கண்களும் அதோடு
 காதில் தோடும் இல்லை என்றால்.................

இருக்கையில் அமரந்த பிறகு
அவன் பெயரைக் கேட்டாள்
அவன் தலை நிமிர்ந்து
அவளை பார்க்க நிமிர்ந்த
போது அவன்  பெயரைச்
சொல்லி  அவன் மனைவி
கொடுத்த புகார் மனுவை
 நீட்டினான் பாவி அங்குள்ளவன்.

அவள் படித்தாளோ இல்லையோ
அருகிலிருந்த கம்பை எடுத்து
விலாசி தள்ளி விட்டாள்.
அவள் அடிப்பதை பார்த்ததும்
அவன் வாய் பிளந்து நி்ன்றான்

இப்போது அவன் அவளை
ஆச்சரியமாய் பார்த்தான் கண்
சிமிட்டாமல்...பூ...போன்ற
கைக்கு இவ்வளவு பலமா...?

இப்போது அவள் அவனை
பார்த்தாள்... தனது போலீசு
லத்தியை   சுழற்றிய படி
அந்த லத்தியை நீட்டி
தொலச்சு பிடுவேன் தொலச்சு

 இப்போது அவனுக்கு அவள்
அருகில் நிற்கும்  தன்
மனைவி தெரியவில்லை அவன்
மனைவி அவனைப் பற்றி
சொல்லும் போதும் அவள்
பேசுவதை கேட்டு  அவள்
தன்னை பார்ப்பதையும் தன்னை
பார்த்துக் கொண்டே தன்
 மனைவிடம் பேசுவதையும் ஆச்சரியமாய்
ஆர்வமாய் கவனித்தான்.. பெண் 
போலீஸ்... எப்போது ஆண்
போலீசா ஆனாள்.....என்று......!!!
சிந்தித்தான் சிந்தித்தான் திரும்பவும்
அடி வாங்கும்  வரை.......!!!


14 comments :

 1. அடடே அடி வாங்கி விட்டவன் விட்ட பில்டப்பு ஸூப்பரப்பு....

  ReplyDelete
 2. அடி வாங்கியவனுக்கு மயக்கம் இன்னும் தெளியலேயே...ப்பு..

  ReplyDelete
 3. இப்படி அடி வாங்கியே அவன் முதுகு வைரம் பாய்ந்திருக்கும் போலிருக்கே :)

  ReplyDelete
  Replies
  1. என்னது வைரமா....??? இருங்க அவன் முதுகை பார்த்துவிட்டு வருகிறேன்.

   Delete
 4. இன்னும் நாலு போடு போடணும்...! ஹிஹி...

  ReplyDelete
  Replies
  1. இப்படி..அடி வாங்கியே அவன் முதுகு வைரம் பாய்ந்து இருக்குமுன்னு பகவான்ஜி சொல்லி இருக்காரு... இன்னும் நாலு போடு போடச் சொல்றிங்களே......

   Delete
 5. Replies
  1. தங்களுக்கு எல்லாமே கனவாத்தான் தெரியுதுங்களா..... கனவு இல்லிங்க.... காவல் நிலையத்தில் நான் கண்டதுங்க.... குறிச்சொல்ல பாருங்க..அனுபவம்..ன்னு போட்டு இருப்பேன்..

   Delete
 6. தோழரே!
  லத்தி சார்ஜ் செய்ய வேண்டிய
  வீடுகள் எவ்வளவோ உண்டு!
  த ம +1
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. லத்தி சார்ஜ் நடந்த வீடுகள் எவ்வளவோாா......!!!

   Delete
 7. வில்லங்கமான கதையாக இருக்கும் போல..!
  த ம 5

  ReplyDelete
  Replies
  1. அப்படியா ...தெரியுது..தங்களுக்கு....

   Delete
 8. இலக்கியச் சுவை சொட்டும்
  சிந்திக்கவைக்கும் பதிவு
  தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. அடடா....இலக்கியம் சொட்டுகிறதா...????

   Delete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!