பக்கங்கள்

Sunday, May 24, 2015

இப்படி பன்றேங்களம்மா......!!!

படம்-tamil.thehindu.com

உனது அழைப்பில்
உனது உத்தரவு
கிடைத்த மறு
வினாடியில் புறப்பட்டேன்
நீ  இருக்கும்
இடத்தை  நோக்கி..............

வரும் வழியில்
தீய சக்திகளின்
சதியிலிருந்து வெற்றி
வாகை சூடிய
அம்மா அவர்கள்
தங்களுடை பொழப்பு
வாதத்தின் பிதா
மகன்களின் நன்றி
கடனுக்கு மாலை
சூட்டும் கையோடு
அம்மா மீண்டும்
அரியணையில் அமர
 படை சூழ
பவனி வந்தார்கள்


அம்மாவின் பக்தர்களும்
அம்மனை தரிசிக்க
வேண்டி கூட்டமாக
கூடி சாலையை
மறித்து  நின்று
என்னையும் மறித்து
விட்டார்கள் அன்பே...


நகர்வலத்தின் முன்
தப்பிக்க முடியாமல்
மாட்டிக் கொண்டேன்.

உன்னை பல
மணி நேரம்
காக்க வைத்ததினால்
என் மீது
ஏற்ப்பட்ட கோபத்தை
தனிக்க அம்மாவையும்
அம்மாவின் பக்தர்களை யும்
உன் வழக்கமான
அர்ச்சனை வசவுகளால்
திட்டி ஆற்றிக் கொள்.

அடிமைகளின் அம்மாவையும்
அம்மாவின் பக்தர்களையும்
இப்படி பன்றேங்களம்மா
என்று..........................18 comments :

 1. ஏழை சொல் அம்பலம் ஏறுமா ?

  ReplyDelete
  Replies
  1. ஏழைச் சொல் அம்பலம் ஏறாது என்பது தெரிந்துதான். புண்பட்ட மனதை திட்டியாவது ஆற்றிக் கொள்ளலாம் அல்லவா...!!!

   Delete
 2. காதலியை சமாளிப்பதற்க்கு உங்களுக்கு உதவியவர்களை திட்டச் சொல்லலாமா ?நண்பரே...

  ReplyDelete
  Replies
  1. அழைப்பு வந்த சிறிது நேரத்தில் செல்லவில்லை என்றால்..அந்தக் கதாலருக்கு திட்டும் வசவும் கிடைக்கும் நண்பரே....அதனால்தான்... அவர்களை திட்டச் சொல்கிறார்

   Delete
 3. நம்மால் வசைப் பாட மட்டும்தான் முடியும். காலத்துக்கேற்ற கவிதை.

  த ம 3

  ReplyDelete
  Replies
  1. கம்பை எடுத்து சணிடை போடும் வாத்திமார்கள் எல்லாம் போய் சேர்ந்துவிட்டார்கள்.. அவர்களுக்குவேறு வழி...

   Delete
 4. வேதனைப்பட வேண்டிய நிகழ்வு. பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதான் அரசியல்.

  ReplyDelete
  Replies
  1. அரசை பற்றி தெரிந்து கொள்துதான் அரசியல் .. இங்கு நடப்பது அரசியல் அல்ல..பிழைப்பு வாதம் அய்யா..

   Delete
 5. இனி மேலும் பலமுறை ஆற்றிக் கொள்ளலாம்...!

  ReplyDelete
  Replies
  1. ஆண்கள் புகைவிட்டோ,சரக்கடித்தோ ஆற்றிக் கொளவார்கள், பெண்கள் திட்டித்தான் ஆற்றிக் கொள்ள வேண்டும் அய்யா..

   Delete
 6. Replies
  1. சிறு துரும்பைக்கூட தியாகம் செய்ய முன்வராத போது.. மாற்றம் வராது அய்யா...?

   Delete
 7. பாவம் தான் இரண்டு பேரும். அம்மாவால் யாரெல்லாம் கஷ்டப்படறாங்க பாருங்க, பொறுத்துக்கொள்ள வேண்டியது தான் என்று இல்லாமல் அவர்களும் வைதால் என்ன செய்வது.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கோபத்தை ஏமாற்றத்தை..திட்டி தீர்த்துக் கொள்வதுதான் வழி... சாபமிட்டால் பலிக்காது என்பதால்.....

   Delete
 8. கடவுளின் பக்தர்களே கடவுள் துணையிருப்பார் என்று நம்பி இப்படி செய்யும் போது ஒன்றுமே செய்ய முடியாதுங்க.திட்டி ஆற்றிக் கொள்ள வேண்டியது தான்.

  ReplyDelete
  Replies
  1. அப்படித்தான் அவர் தன் காதலிக்கு சொல்லியிருக்கிறார்..

   Delete
 9. "நகர்வலத்தின் முன்
  தப்பிக்க முடியாமல்
  மாட்டிக் கொண்டேன்." என்றால்
  மக்கள் வலைக்குள் சிக்கிவிட்டீர்கள் என்பேன்...
  ஓ! - அதுவும்
  அம்மாவின் அலை தானே!

  ReplyDelete
  Replies
  1. வலுக்கட்டாயமாக ..சிக்க வைக்கப்பட்டார் என்பேன் நண்பரே..

   Delete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com