பக்கங்கள்

Sunday, June 21, 2015

முதுகெலும்பு இல்லாதவர்களால் முதுகெலும்பு வளைக்கப்பட்டவர்கள்.!!!
படம்-www.siruppiddy.netஎனக்கு மூத்தவர்அவர், அவர் என்னை அண்ணே.. என்று கூப்பிடுவதை கண்டவுடன் அவருக்கு அருகில் சென்றவுடன் அந்த அண்ணன். இப்படிச் சொன்னார்.

“அண்ணே....! நாட்டுல நடக்கிற எத்தனையோ அநியாயத்தை நீங்க சொன்னிங்க.... இப்ப..நா சொல்ற  அநியாயத்தை நீங்க கேளுங்கண்ணே என்று அவர் சொன்னவுடன். அவர் ஜூலை-1 அநியாயத்தைதான் சொல்லப் போறார்ன்னு எனக்கு தெரிந்தது. தெரிந்ததை வெளிக் காட்டிக் கொள்ளாமல்..

என்னண்ணே... நீங்க புதுசா நடக்காத அநியாயத்தவா ...சொல்லப் போறீங்க... ம்ம் சொல்லுங்கண்ணே அந்த அநியாயத்த... என்றுவிட்டு சற்றுத் தொலைவில் நின்று கொண்டு இருந்தவர்களை அவர்க்கு அருகில் வரவழைத்தேன்.

அவர்...அந்த  அநியாயத்தை பட்டியலிட்டு சொல்ல ஆரம்பித்தார்.

அண்ணே.... தலைக்கவசம் அணியவில்லை என்றால் ஓட்டுநர் உரிமம் ரத்து. சென்னையில இருக்கிற நீதிமன்றம் உத்தரவாம்ண்ணே... !!!

நம்மை ஆள்வது அரசா...???நீதிமன்றமா???ன்னு  எனக்கு ஒரே புதிரா இருக்கு்ணணே.....!!!!

கணக்கை தப்பா போட்ட நீதிபதிய வேலைய விட்டு தூக்க முடியல......????

குடித்துவிட்டு காரோட்டி கொலை செய்தவன தண்டிக்க முடியல....????

60 கிலோமீட்டர் வேகத்தில போற வாகனத்தின் உரிமையை ரத்து செய்ய முடியல....????

சாலை விபத்துக்கு முதல் காரணமான டாஸ்மாக்கை மூடச் சொல்லி ஒரு உத்தரவு போட முடியல...?????

தனியார் வாகன உற்பத்திய குறைத்து, பொது பேருந்து போக்குவரத்தை ஊக்குவிக்க ஒரு ஆணை இல்ல.....????

வாய் பொளந்து  நாறிக் கிடக்கும் சாலைகளை செப்பனிடச் சொல்வதற்கு திராணியில்ல........

டிவிஎஸ் எக்லெல்ல  மெதுவாக போயி வரும் எங்களை போன்றவர்கள் தலைக்கவசம் அணியவில்லை என்றால் ஓட்டுநர் உரிமம் ரத்தாம்ணணே....


சும்மவா  கொடுத்தான் எட்டு போட்டு காட்டியும் அதுல சூத்த..இதுல சூத்த ன்னு சொல்லி பலதடவை அலையவிட்டு ஓட்டுநர் உரிமம் பெற்றால்... தலைக்கவசம் அணியவில்லை என்றால் ஓட்டுநர் உரிமம் ரத்தாம்ண்ணே..

அவர் சொல்லி முடித்ததும் இனனொருத்தர் தன்பங்குக்கு சொன்னார்.
ஏற்கனவே, இப்படி சொன்னானுக... தலைக்கவசம் அணிந்து வண்டி ஓட்டுவது நம்ம தொழிலுக்கு ஆவாதுன்னு தெரிந்ததும் நானும் இப்படி புலம்பித்தான் தொழிலையும் விட்டுட்டேன். அதோடு வண்டியையும் வந்த விலைக்கும் வித்திட்டேன்.

அதுசரிப்பா..அவுக ஞாயப்படியே பாப்போமப்பா...... தலைக்கவசம் அணிந்த சாலை விபத்திலிருந்து தப்பிக்கலாம் என்றால்.. ரோட்டில ஓரமாநடந்து போறவன் ஏம்ப்பா .சாகுறான்......என்றார் வேறு ஒருவர்.

இத..அவிங்கிட்டதான் கேட்கனும் என்றார் இன்னொருத்தர்.

இப்படியாக ஒவ்வொருத்தரும் தங்கள் புலம்பலையும் வயித்தெரிச்சலையும் கொட்டி தீர்த்தனர். ஒன்றிரண்டு பேர்களைத் தவிர பெரும்பாலானவர்கள். தலைக்கவத்திற்கு எதிராகவே தங்களின் ஆதங்கத்தை  வெளிப்படுத்தினார்கள்.

யாணை வாங்கிவிட்டவர்கள் அதற்கு தினி போடமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் அவர்களை “முதுகெலும்பு இல்லாதவர்கள்”, அவர்களின் முதுகெலும்பை வளைத்துவிட்டதாகவே தெரிந்தது.

26 comments :

 1. நல்லாவே அலசி இருக்கின்றீர்கள் நண்பரே.... உண்மையில் முதுகெலும்பு ஒடிஞ்சுதான் போச்சு..

  ReplyDelete
  Replies
  1. என்னிடம் புலம்பியதை தங்களிடம் புலம்பியிருக்கேன் அவ்வளவே....

   Delete
 2. அழுது புலம்புவோர் ஆதங்கத்தை தீர்ப்பதற்கு தீர்வு காண்பதும் அரசின் கடமையே தோழரே!
  த ம 3
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. முதுகெலும்பு ஒடஞ்சாலும் பரவாயில்லை... தலக்கவசம் மாட்டிதான் ஓட்டனும் அதான் தீர்வுன்னு சொல்லிபுட்டாங்களே நண்பா.....

   Delete
 3. சிரமம் தான்... பழக்கம் வழக்கமாகி விடும்...

  ReplyDelete
  Replies
  1. இது உண்மைதான் கொஞ்ச நாளைக்கு புலம்புவார்கள்...அப்புறம் அடுத்த வேலய பாத்துட்டு போயிகிட்டே இருப்பார்கள்....

   Delete
 4. நியாயமான ஆதங்கள் பதிவில் தெரிகிறது.

  ReplyDelete
  Replies
  1. மனதில் இருப்பதை பூட்டி வைக்க கூடாதாம்.. கொட்டி விட்டதான் சுமை குறைமுன்னு யாரோ சொன்னது அய்யா...

   Delete
 5. இப்படி பன்னினா எப்படிப்பா, இப்படிபன்றாங்களேப்பா,,,,,,,,,,,,,

  ReplyDelete
  Replies
  1. அம்மான்னு சொன்னவங்க...எல்லாம் இப்ப அப்பான்னு சொல்ல ஆரம்புச்சுடாங்க.......!!!

   Delete
 6. புலம்பத்தான் முடியும்..

  ReplyDelete
  Replies
  1. கோட்டை.கொத்தளம், படைகள் இருந்தால் போர் புரிந்து வெற்றியோ... தோல்வியோ அடையலாம். இது எதுவுமே இல்லாதவர்கள் புலம்புவதை தவிர..வேறு என்ன செய்வார்கள்.....

   Delete
 7. எல்லாம் சரி செய்யத்தான் வேண்டும்.அதற்காக தலைக்கவசம் வேண்டாம் என்று சொல்லி விட முடியுமா?நான் 82-84 இல் தில்லியில் இருந்தேன்.அப்போதே அங்கு தலைக்கவசம் கட்டாயம்

  ReplyDelete
  Replies
  1. அப்போது வண்டி வைத்திருப்போர் சொற்ப அளவிலே இருந்தார்கள் தலைக்கவசம், இருந்தால் அவர் வண்டி வைத்திருக்கிறார் என்று தெரிவதற்க்காகவும் பெருமைக்காகவும் அன்று இருந்தது அய்யா.....

   Delete
 8. வலிப்போக்கர் சொன்ன மாதிரி கணக்கை தப்பா போட்ட நீதிபதிய வேலைய விட்டு தூக்க முடியல,மற்றும் கொள்ளை அடிச்சவங்களை தண்டிக்க முடியல்ல, லஞ்ச ஊழல் போலீஸு, இப்படி கொடுமைக இருக்கிறது.ஆனா சென்னை பித்தன் சார் சொன்னது மிக சரியானது.
  இந்தியாவைவிட ஏழை நாடான இந்தோனிசியாவில் கூட தலைக்கவசம் அணிந்து தான் இரு சக்கர வாகனத்தில் போவதை நேரில் பார்த்திருக்கேன்.
  வலிப்போக்கரும், பகவான்ஜீயும் இந்திய தமிழ்பேசும் மக்களின் வீதி போக்குவரத்து பாதுகாப்பு என்பவற்றில் அதிக பொறுப்புடன் கவனம் எடுக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. மற்ற நாடுகளின் நிலைமையையும் இந்திய நாட்டு நிலைமையையும் மேலோட்டமாக ஓப்பிடுவதை விடுத்து விரிந்த பார்வையுடன் நிலமையை சீர்தூக்கி பார்க்குமாறும் இந்திய நீதித்துறை மாதிரி ஒரு பக்க பார்வையை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

   Delete
 9. இப்படித்தான் பலமுறை அணியச் சொன்னார்கள் ,கொஞ்ச நாள் நடைமுறையில் இருக்கும் :)

  ReplyDelete
  Replies
  1. இந்தத்தடவை ரெம்பவும் ஓவர்......

   Delete
 10. சிந்திக்க வேண்டிய நிலையில்! அருமையான தொகுப்பு.நீதிமன்ற அவமதிப்பு நமக்கு எதுக்கு[[[[[[[[[[[[[[[[[[

  ReplyDelete
  Replies
  1. எல்லோரும் அவமதிப்பு என்று பயந்து கொண்டு இருந்ததால்.. பிறர் கருத்துக்களை எப்படி தெரிந்து கொள்வது அய்யா...

   Delete
 11. ஹாஹாஹா அவங்கவங்க நியாயம் சரிதானே.....

  ReplyDelete
  Replies
  1. பெரும்பாலானவர்களுக்கான சரியான நேர்மையான நியாயம் தானே சரியாக இருக்கும் அய்யா...

   Delete
 12. நண்பர்,கற்பழித்தவனுக்கு ஆதராவாகவும் ஒரு நீதிபதி இப்போ புறப்பட்டு இருக்கார் :(

  ReplyDelete
 13. ஊழல் நீதிமன்றத்தில் அபபடித்தான் நடக்கும்.. நடக்காமல் இருப்பதுதான் ஆச்சரியம் நண்பரே.....

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com