பக்கங்கள்

Monday, July 13, 2015

மக்கள் குடிகெடுக்கும் அரசு.....

படம்-கதிர்நிலவன்


படம்-katir.nilavan

பெண்களின் தாலி அறுப்பதை
தடுக்கவும் மாணவர்-இளைஞர்
வாழ்வு இருட்டாவதை நிறுத்தவும்
அரசு நடத்தும் சாராய..
விற்பனையை நிறுத்தச் சொல்லி
நல்லவர்களும் பாதிக்கப்பட்டவர்களும்
அந்த அரசு பரப்பும் அகிம்சை
முறையிலே மனு கொடுத்தார்கள்
மன்றாடினார்கள் பட்டினி கிடந்தார்கள்.

எருமை போல் அசைந்து
கொடுக்காத அரசால் பலனில்லை
என்றதால் சாராயக் கடைக்கு
பூட்டு போட்டார்கள், சாராய
சம்ராஜ்ஜியத்தை ஆளும் புர்ர்ர்ச்ச்சி
தலைவியின் அரசோ..மனு
கொடுத்தவர்களை மன்றாடியவர்களை
பட்டினி கிடந்தவர்களை தன்
காவல் படையை ஏவி ஓட
ஓட விரட்டி துவம்சம் செய்து
கைது செய்து உங்களால் என்ன
செய்ய முடியும் என்று சவால்
விடுகிறது.. போராடும் மக்களை
நாயினும் கீழாக நடத்துகிறது.
சாராய விற்பனையிலும் மக்களின்
வரிப்பணத்திலும் வயிறு வளர்க்கும்
போலீசும் அதிகார வர்க்கமும்

இதனால்தான்..........

குடிகெடுக்கும் அரசிடம்
கெஞ்சியது போதும்!
மன்றாடியது போதும்!!
கெடு விதிப்போம்
ஆகஸ்டு 31  !!!

ஆள அருகதை இழந்த்து அரசு கட்டமைப்பு!
இதோ, ஆள வருகிறது மக்கள் அதிகாரம்!!
என்று சூளுரைக்கிறார்கள்.!!!
டாஸ்மாக்கை மூடு! மக்கள் அதிகாரத்தை நிறுவு!!

குடிகெடுக்கும் அரசிடம் கெஞ்சாதே!
தடுக்க வரும் போலீசுக்கு அஞ்சாதே!!
மூடு கடையை, எவன் வருவான் பார்ப்போம்!!!

நம்ம ஊரில் இனி டாஸ்மாக் கிடையாது.

18 comments :

 1. நல்லது விரைவில் நடக்கட்டும்...

  ReplyDelete
 2. வணக்கம் வலிப்போக்கரே,
  நடந்தால் சரி,
  நன்றி.

  ReplyDelete
 3. நம்ம ஊரில் இனி டாஸ்மாக் கிடையாது என்று சொன்ன தோழருக்கு
  என்றும் பாஸ் மார்க்.
  த ம 2
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
 4. அரசு மது விற்பனை செய்வது தவறு.

  ReplyDelete
  Replies
  1. தவறு என்று தெரிந்தே செய்வது குடி கெடுக்கும் அரசு.

   Delete
 5. கனவு மெய்ப்பட வேண்டும்.

  மெய்பெறச் செய்வோம்.

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. மெய்பெறச் செய்வோம். நன்றி!

   Delete
 6. வரும் தேர்தலில் மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள் !

  ReplyDelete
 7. விரைந்து நடந்தால் நல்லதே...நம்பணும்றீங்க நம்பிடுவோம்!

  ReplyDelete
 8. நம்பிக்கைத்தான் வாழ்க்கையின்னுபலபேரு சொன்னாங்கய்யா....!!!!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com