பக்கங்கள்

Saturday, August 01, 2015

துக்கத்தை பகிர விடாமல் தடுத்த ஒரு நிகழ்வு...

மதுவிலக்கு போராட்டத்தின் முதல் உயிரிழப்பு சசி பெருமாள்


பீத்திக் கொள்ளும் அகிம்சை
வாதி காந்தியின் வழியிலே
மது விலக்கை அமல்
படுத்த வேண்டி அகிம்சை
முறையிலேயே போராடி வந்த
காந்தியவாதி சசி பெருமாளை
கொன்றது சாராயம் விற்கும்
மக்கள் குடி கெடுக்கும்
குடி அரசு..............

குடி மக்கள் குடியை
 கெடுக்கும் குடி அரசுடமிருந்து
குடி மக்களை காக்க
போராட்டத்திலே  சசி பெருமாள்
மடிந்த வேளையிலே............

அதோ.....
காந்தியின் அரி சனங்கள்
இன்னொரு ஆதிக்கச் சாதியாய்
கருப்பு பார்ப்பனராய் பரிணமித்து
வருவோர்கள் கட்டிய தெருக்
கோயிலில் கூலிக்கும் மாரடிக்கும்
பஜனை பாடல்களை மறைந்த
சசி பெருமாள் இறந்த துக்கத்தை
குடி மக்களிடம் பகிர
விடாமல் நாலு திசைகளில்
ஒலி பெருக்கியில் இரைக்கிறார்கள்.


19 comments :

 1. 'குடி' மக்களுக்கு அனைத்தும் தெரியும்....!

  ReplyDelete
  Replies
  1. தெரிந்து என்ன செய்ய.........

   Delete
 2. கொடுமையிலும் கொடுமை !

  ReplyDelete
  Replies
  1. இந்தக் கொடுமையை எங்கே தொலைப்பது....

   Delete
 3. வேதனையான நிகழ்வு. இதுவே முதலும் கடைசியுமாக இருக்கட்டும்.

  ReplyDelete
  Replies
  1. குடி அரசு நிணைத்தால்... முதலும் கடைசியுமாக இரக்கலாம் அய்யா..

   Delete
 4. குடி கெடுக்கும் குடி நமக்கு தேவை தானா?குடிமக்களே சிந்திப்பீர்.

  ReplyDelete
  Replies
  1. குடி மக்களுக்கு அந்த சிந்தனை இருந்திருந்தால் இன்னேரம் குடி கெடுக்கும் குடி அரசு.. காணாமல் போயிருக்கும்

   Delete
 5. இன்னும் எத்தனை இழப்போமோ,,,
  நன்றி வலிப்போக்கரே,

  ReplyDelete
  Replies
  1. காத்திருந்து பார்ப்போம..நன்றி!

   Delete
 6. என்று தணியும் இந்த கொடுமையின் மோகம்?

  வேதனை.

  ReplyDelete
  Replies
  1. குடி அரசு , குடி மக்களின் குடியை கெடுப்பதை நிறுத்தினால் இந்தக் கொடுமை தணியும் அய்யா...

   Delete
 7. வேதனை தரும் நிகழ்வு.

  ReplyDelete
 8. நமது நாடு ஒரு குடியரசுதானே! அதனால்தான் இப்படியெல்லாம் நடக்கிறது!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்துரை படிதான் அய்யா ..நடந்து கொண்டு இருக்கிறது .....குடியரசு.

   Delete
 9. சம்பந்தப்பட்டோர் சிந்திக்க மறந்தால்
  சந்ததியே அழிந்திடத் தான்
  வழி இதுவோ!

  ReplyDelete
 10. "குடி"யரசு நாடுன்னா இப்படித்தான் இருக்குமோ....வேதனை...

  ReplyDelete
 11. அதான் தாங்களே சொல்லிவிட்டீர்களே.... குடி கெடுக்கும் குடியரசு நாடுன்னு...

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com