பக்கங்கள்

Thursday, September 10, 2015

தெரிந்தும்...புரிந்தும்.......

படம்-www.eegarai.net
சுவர் இருந்தால்தானே
சித்திரம் வரைய முடியும்
 உடல் நலமாக
இருந்தால்தானே உழைக்க
முடியும்   நன்றாக
தெரிந்தும் புரிந்தும்

அன்பு மிக்கவர்களின்
ஆதங்கத்தை இந்த
மண்டையும் உணர்ந்த
போதும்  ..நிலவிய
சமூக வாழ்க்கை
நிலை அப்படி
இருக்க விட்டதில்லை.

இளமையில் உணவும்
உழைப்பும் காதலும்
தேவையாய் இருந்த
நேரத்தில் எதுவும்
கிடைத்து விடவில்லை.

மண்  புழுவாய்
வாழ்க்கையை ஓட்டி

முதுமையின் வாயிலில்
நிற்கும் நேரத்தில்
உணவும் உழைப்பும்
கிடைத்தும்  நேரத்துக்கு
உண்ண முடிவதில்லை
உழைக்காமல் இருக்கவும்
முடிவதில்லை .வேறு
என்ன செய்வது
காட்டின் அழைப்பை
எதிர் பார்த்து
காத்து இருப்பதை
தவிர...............

20 comments :

 1. நினைத்தது எல்லாம் கிடைத்துவிட்டால் சுவராஸ்சியம் இருக்காது நண்பரே!!! சிலருக்கு எதுவும் செய்யாமல் கிடைக்கிறது!!!!

  ReplyDelete
  Replies
  1. அப்படி எதுவும் நான் நிணைக்கவில்லை நண்பரே....

   Delete
 2. ஏன் ,ஏனிந்த வெறுப்பு ?

  ReplyDelete
  Replies
  1. வாழ்க்கையில்...சலிப்பு வந்துவிட்டது என்று அர்த்தம் நண்பரே.....

   Delete
 3. வணக்கம் புதுகை வலைப்பதிவர் விழாவிற்கு விழாக்குழு சார்பாக அன்புடன் வரவேற்கின்றோம்.நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வரவேற்புக்கு நன்றி!! நண்பரே............

   Delete
 4. ஏன் நண்பா சலிப்பு வாருங்கள் இருக்கிறது வலைப்பூ

  ReplyDelete
  Replies
  1. உடல் நலமில்லாதோடு மனமும் நலமில்லை அந்த காரணத்தால் சலிப்பும் வந்துவிட்டது நண்பரே.....

   Delete
 5. அனுசரித்துதான் இருக்க முடிகிறது.

  ReplyDelete
  Replies
  1. மனமும் உடலும் நல்ல நிலையில் இல்லாதபோது அனுசரிக்க முடிவதில்லை நண்பரே.....

   Delete
 6. என்ன ஜி தீடிரென்று இப்படி ஒரு வெறுப்பு...?

  ReplyDelete
  Replies
  1. மனமும் உடலும் நல்ல நிலையில் இல்லாததால் வந்த வெறுப்பு...... ஜீ

   Delete
 7. சிறந்த பாவரிகள்
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. நல்லது .... இருக்கும்வரை..தொடருகிறேன் அய்யா......

   Delete
 8. வணக்கம் வலிப்போக்கரே,
  இது தங்கள் வரிகள் போல் இல்லையே, ஏன்???????

  ReplyDelete
  Replies
  1. எப்போதாவது இந்த வரிகள் வந்துவிடுகின்றன....அப்போது பதிவிடவில்லை.... இப்போது என்னையும் அறியாமல் பதிவில் தலை காட்டிவிட்டன....

   Delete
 9. என்ன நண்பரே! என்னாயிற்று? சில சமயங்களில் வீரா வேசத்துடன் பதிவுகள்! இப்போது ஒரு விரக்தி...மனம் சோர்ந்துவிட வேண்டாம் நண்பரே! வழக்கமான பதிவுகள் வேண்டும்....

  ReplyDelete
  Replies
  1. வேறு ஒன்றும் இல்லை நண்பரே! மனமும் உடலும் சோர்வுற்றதால் வந்த விளைவு....யானைக்கே அடி சறுக்கும் போது...எனக்கும் இப்படி வந்துவிட்டது

   Delete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com