புதன் 19 2015

என்னப்பா...நடக்குது...நாட்டுல......


evks.elangovan
படம்-ஒன் இந்தீ...யா




என்னப்பா......நடக்குது நாட்டுல....

வெளிநாட்டுலேயா....... உள்நாட்டுலயா.......

அது என்னப்பா...உள்நாடு....வெளிநாடு....ன்னு

அது தெரியாதண்ணே..... வெளி நாடுன்னா...பிரதமர் ஆளுறது... உள்நாடுன்னா... குடி மக்கள் குடியை கெடுத்து கொண்டிருக்கும்  முதல்வரு ஆளுறது

அட...... இப்படி  வேறா... பிரிச்சு புட்டாங்கயே...... சரிப்பா... குடி மக்கள் குடியை கெடுக்கும் இந்த உள் நாட்டில... என்னப்பா...... நடக்குது....


அது ஒன்னுமில்லண்ணே......

என்னாது ஒண்ணுமில்லயா........ ஒண்ணுமில்லாதததுக்குதான் இவ்வளவு களோபரமா......

அது வந்துண்ணே....

அட. சொல்லித் தொலைக்கப்பா...என்னதான் நடக்குது...இந்த குடிகார நாட்டுல.....

ஒங்க காங்கிரஸ் கட்சி தலவரு  இருக்காருல்ல......

ஆமா,  இருக்காரு... அவருக்கு என்ன...இப்போ......

அவருக்கு ஒன்னுமில்லண்ணே......அவரு வாயல... உள்ளதை உள்ளவாறு பேசியதால்...வந்த கோளாறுண்ணே.........

ஏய......அவரு... யாரு..தெரியுமில்லே.....

அவரு.. ஒங்க கட்சி தலவருண்ணே......

 அவரு என் கட்சி தலைவரு மட்டுமில்லப்பா...... நம்ம பெரியாரு பேரனப்பா...

என்னாது..... பெரியாரோட  பேரனா.......???அவரு எப்படி காங்கிரஸ் தலவரா இருக்காரு.......

இவருடைய அம்மா..சுலோசனா..  குடி மக்களுக்கு ஊத்தி கொடுத்த கட்சியில இருந்தவருப்பா.......

ஆ.....ஆ..... அப்படியா....????

அது ஒரு பெரிய கதைப்பா....... அதவிடுங்க.....எங்கத் தலவரு என்னத்த உள்ளதை உள்ளவாறு  பேசினாரு.......!!!

வெளிநாட்டைச் சேர்ந்த உலகம் சுற்றும் பிரதமரும்,  குடி மக்களின் குடியை கெடுத்து நம்ம நாட்டை ஆளும் முதல்வரும்  விதி  முறைகளை மீறி சந்தித்து பேசினாங்களாம்.. அதைப்பத்தி பேசினாராம்...ண்ணே.....

பார்ரா...... மூடூ மந்திரமா பேசிக்கிட்டு....விளக்கமா... சொல்லுங்கப்பா......

அதாவது ண்ணே..பஜகவுக்கும். அதிமுகவுக்கும் கள்ள உறவு இருக்குன்னு
 எதுகை மோனையா பேசியிருக்காருண்ணே...

என்னது கள்ள உறவா....??.. அட அரசியலைத்தானப்பா... பேசியிறுக்காரு....இது என்னப்பா...கொடுமையா.. இருக்கு... பொது வாழ்க்கைக்குன்னு வந்துட்டாலே எல்லா அசிங்கத்தையும் பேசித்தானப்பா..... ஆக வேண்டும்...அதுதானப்பா அரசியல். திருடுறவன். என்ன நமக்கு தெரியகிற மாதிரியா திருடுவான்.. அந்தத் திருடனையும் திருட்டையும் கண்டுபிடிக்கிற த மாதிரிதானப்பா  அரசியலு.....ம்ம்....

அண்ணே... ஒங்களுக்கு தெரிஞ்சது... அந்த ரெண்டு கட்சிகாரங்களுக்கும்  தெரியலைண்ணே..... அப்படியே தோசையை புரட்டி போடுற மாதிரி புரட்டிபோட்டு...அந்த ரெண்டு பேருடைய புகழையும், பெருமையையும் கலங்கப்படுத்தியதாக கூறி..... ஒங்கத் தவைருடைய உருவ பொம்மயை  கூட்டமாக சேந்து எரிக்கிறாங்கண்ணே.......

அப்போ...நான் வர்ர வழியில.....எரிச்சது எங்கக் கட்சி தலைவருடைய உருவப் பொம்மைதானா......

அமாண்ணே...இப்ப...இதுதாணே்ணே.....நடந்துகிட்டு இருக்கு......

 எதுடா சாக்குன்னு இந்த நொண்டிச சாக்க வச்சு டாஸ்மாக் போராட்டத்த  திசை திருப்புறாங்கே......

நீங்க..... சொல்றது மாதிரிதாண்ணே.....

ஒங்களுக்கு வரலாற பத்தி  சொல்றேன் கேளுங்கப்பா.....

சொல்லுங்கண்ணே.......

முன்னால் அமைச்சரு  காளிமுத்து தெரியுமில்ல..... அதாவது... .. சீமான்னு ஒருத்தரு இருக்காருல்லே  அவருடைய மாமனாரு....அவரு.. அந்த  நடிகையை பற்றி பேசாததையா.... எங்கச் கட்சி தலைவரு பேசியிருக்காரு...
அந்த ரெண்டு கட்சிக்காரன்களும் வரலாற்றை  மறச்சு பேசுறாங்கப்பா....

அந்த வரலாறு எல்லாம் எங்களுக்கு தெரியலேண்ணே....

சரி,.... குடி மக்கள் குடியை கெடுத்து கொண்டிருக்கும் குடி நாட்டுல என்ன நடக்குதுன்னு ஒங்க மூலமா... தெரிஞ்சு போச்சு... நான் வர்ரேன்ப்பா...

அண்ணே... அந்த வரலாறுண்ணே......

இந்தா....... வந்து சொல்றேன்பா.......




6 கருத்துகள்:

  1. கட்சிகளுக்குள் கள்ள உறவு இருக்குன்னு சொன்னதில் என்ன தவறு ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமக்கு தெரியுது... அடிமைகளுக்கு தெரியவில்லையே.......

      நீக்கு
  2. வரலாறு கேட்பதற்காக காத்திருக்கிறேன் நண்பா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வந்து சொன்னவுடன்... மறு நிமிடமே தங்களுக்கு சொல்லி விடுகிறேன் நண்பாரே....

      நீக்கு
  3. இந்த அல்லக்கைங்களுக்கு வேற வேலையே இல்லை....உளறல்களை எல்லாம் எடுத்து வைச்சுக்கிட்டு தீயாக்குதுங்க.....சே வரலாறு மிஸ்ஸிங்க்....அதுதானே முக்கியம்..ஹஹஹ்

    பதிலளிநீக்கு
  4. உளறல்கள் என்பதெல்லாம் நமக்குத்தான் அய்யா...அல்லகைகளுக்கு எல்லாம் வரலாறு அய்யா....

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....