பக்கங்கள்

Thursday, October 22, 2015

தமிழ்நாட்டு ரேசன் அரிசி..கேரளாவுக்கு கடத்தும் ரகசியம்...படம்-cinema.maalaimalar.com
ஏன்டா....ப்பா...வர்ரேயிலேயே வயித்த புடுச்சுகிட்டு வர்ர.... என்ன ஆச்சு ஒனக்கு ” என்று  செல்லக்கன்னுவைப் பார்த்துக்கேட்டார் அய்யாவு.....

அது ஒன்னுமில்லண்ணே...வீட்டுல... ரைஸ்மில்லுல வாங்கீன அரிசியை  சோறாக்கி போட்டா..”   அந்த அரிசி மொச்சக் கொட்ட மாதிரி இருந்துச்சு,,.,அத சாப்பிட்டதிலிருந்து வயித்த வலிக்குதுண்ணே என்றார் .

ரைஸ்மில்லிலா..... ரேசன் அரிசியி திட்டி ..நல்ல அரிசின்னு வித்திருப்பான்... ஓம் பொண்டாட்டிககு அது  தெரியாம ... வாங்கி போட்டுருப்பா..... இந்தா...இந்த சோடாவைக் குடி என்று கடையிலிருந்து  மாப்பிள்ளை சோடாவை வாங்கி நீட்டினார் அய்யாவு...

ஏண்ணே...ரேசன் அரிசிக்கு மட்டும் இப்படி வயித்த வலி வருதுன்னு கெட்டார் செல்லக்கன்னு....

அடேய்....தமிழ்நாட்டுக்காரன்.. சோறு சாப்பிட்டா..... சோறு..பூ...பூ..வாக இருக்கனும் விரும்புவான்...  அதற்கு கர்நாடக பொன்னி அரிசிய சாப்பிட்டு பழக்கப்பட்டு போயிட்டான்... அதற்க்காக அங்கிருந்து வாங்கி சாப்புடுறான்.

கேரளாக்காரனுக்கு சோறு மொக்கை மொக்கையா பருக்கையா இருக்கனும் விரும்புவான்.. அதற்க்காக தமிழ்நாட்டு ரேசன் அரிசியை சாப்பிட்டு பழக்க மாயிட்டான்......


அய்யாவு பேசி முடிக்கிறதுக்குள்ள.... செல்லக்கண்ணு சொன்னார்.   சோத்து பருக்கை மொக்கையாக இருக்கிறது என்பதற்க்காகத்தான்  தமிழ்நாட்டு ரேசன் அரிசி கேரளாவுக்கு  கடத்தப்படுகிறதா.... ண்ணே.....???


பரவாயில்லையே   ..அந்த ரகசியத்தை கண்டுபிடிச்சிட்டேயடா.... ஆச்சரியமாய்  கேட்டார்   அய்யாவு அண்ணன்....

13 comments :

 1. தினக்குலிக்கும் வார கூலிக்கும் வழியில்லாம இருக்கறவங்களும் கர்நாடக பென்னி அரிசி திங்கமுடியுமா நண்பரே! பூ பூவா சாப்பிடறது 5.6.7டிஜிட்டலில் சம்பாதிக்கிறவங்கதான்??????

  ReplyDelete
 2. ரேசன் கதியே என்று இருந்த நானெல்லாம்் ரேசன் அரிசியை சாப்பிடுவதில்லை நண்பரே....புழு,பூச்சி..எலி தின்று கடைசியாக புழுத்து போயி கிடைப்பதால் சாப்பிட முடியவில்லை...நண்பரே.... இப்படித்தான் தினக்கூலிகளும் வழியில்லாத பட்சத்தில் எப்பொதாவதுதான் சாப்பிடுகிறார்கள்... தீட்டிய ரேசன் அரிசியை.....

  ReplyDelete
  Replies
  1. Your article is not 100% correct..still in tamil nadu most of the people's food RATION RICE. Don't think all are rich.

   Delete
 3. என் சென்ற வார ' புழுக்களரிசி ஜோக்'பதிவுக்கு தொடர்ச்சி போல் உள்ளதே உங்க பதிவு :)

  ReplyDelete
  Replies
  1. தங்களைத் தொடர்வதால.... வந்த தாக்கமாக இருக்குமோ.....??

   Delete
 4. இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது அரிசியிலும் போல் இருக்கிறது!
  வேகும் கட்டைக்கு வெந்ததிலும் வித்தியாசம் தெரிகிறது!
  கடத்தலில் காசு பார்த்தால் போதும் என்றாகி விட்டதே?
  த ம +
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. எதில்தான் காசு பார்க்காமல் விட்டார்கள்.... இந்தக் காலத்தில்...

   Delete
 5. ரேஷன் பொருட்களை நம்பியே வளர்ந்த காலம் நினைவுக்கு வருகிறது. இப்போதும் ரேஷன் பொருட்கள் வாங்கிக் கொண்டுதான் இருக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. பொருட்கள் வாங்கவில்லை என்றால. ரேசன் கார்டு கேன்சல் ஆயிடும் என்ற பயமிருப்பதால் ..... எல்லாரும் வாங்குகிறார்கள்....இலவச வேட்டி. சேலை உள்பட...நண்பரே.

   Delete
 6. ரேசன் பருப்பு பரவாயில்லை.
  கடத்துவதற்கான காரணம் ஓகே!

  ReplyDelete

 7. அரிசி பற்றிய அலசல் நன்று

  http://www.ypvnpubs.com/

  ReplyDelete
 8. எதோ... எனக்கு தெரிந்தது... வருகைக்கு நன்றி!!

  ReplyDelete
 9. எதோ... எனக்கு தெரிந்தது... வருகைக்கு நன்றி!!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com