பக்கங்கள்

Sunday, November 15, 2015

புலிட்சர் விருது பெற்றவரின் தற்கொலை குறிப்பு...

படம்- கெவின் கார்ட்டர்.
படத்தில் உள்ளவர் கெவின் கார்ட்டர் வயது 33 சூடனில் இவர் எடுத்த “சிறுமி- கழுகு” புகைப்படம் 1994ம் ஆண்டில் புலிட்சர் விருது பெற்றது. விருது பெற்ற மூன்று மாதங்களுக்குப பிறகு கெவின் தற்கொலை செய்து கொண்டார்.

அவரின் தற்கொலைக குறிப்பு :-

என்னை மன்னியுங்கள், 
உலகின் மகிழ்ச்சிகளை
துரத்தி அழுத்தும்
வாழ்வின் வலி
இறுதியில் அதை
புதைத்து விடுகிறது....

கொலைகள்,பிணங்கள்
பட்டினியால் வாடும்
குழந்தைகளின் வலி
மகிழ்ச்சி,கோபம்,.......
தூண்டி விடப்பட்ட
குதூகலப் பைத்தியங்கள்
போலீஸகாரர்கள் படுகொலையாளர்கள்.....

மறையாத இந்த
நிணைவுகளால் துரத்தப்படுகிறேன்.


புலிட்சர் விருது பெற்ற புகைப்படம்
புகைப்பட்த்தின் காட்சி

பசி பஞ்சத்தால் அடிபட்ட நோஞ்சன் நிலையில் உள்ள ஒரு சிறுமி நடக்கக் கூட இயலாத நிலையில்  எலும்புக் கூடு போன்ற தன்னுடலை தவழ்ந்து இழுத்துக் கொண்டு மெல்ல மெல்ல  ஐக்கிய நாடுகளின் சபையின் சார்பாக அமைக்கப்பட்டு இருந்த உணவு வழங்கும் முகாமை நோக்கி தள்ளாடியபடி தவழ்ந்து கொண்டிருந்தது

அந்த எலும்பும் தோலுமான சிறுமிக்கும்ப் பின்னாலேயே சிறிது தொலைவில் ஒரு பிணம் தின்னிக்கழுகும் சிறுமியின் மீது பார்வையை நிலை நிறுத்திக் கொண்டு இருந்தது.


எப்போது சிறுமியின் உடலை விட்டு உயிர் பிரியும்; மீதியுள்ள அந்தத் தோலையும் அதைச் சுற்றி இருக்கும் சிறிது மாமிசத்தையும் எப்போது சாப்பிடலாம் எனக் காத்திருந்தது பிணம் தின்னிக்கழுகு.


12 comments :

 1. புகைப்படம் மிகவும் வேதனையைக் கொடுத்தது நண்பரே...

  ReplyDelete
 2. Replies
  1. நன்றி! நண்பர்க்கு..............

   Delete
 3. இந்த முதலாளித்துவமும்,ஆயுத நாசகாரர்களும் அல்லவா தற்கொலை செய்துகொள்ளவேண்டும்.
  படைப்பாளிகள் மென்மையானவர்கள்...இந்த உலகம் தாங்கிப்பிடிக்க வேண்டிய மேன்மையானவர்கள்....நீங்கள் வலியைப்போக்குபவனாகத்தெரியவில்லை?

  ReplyDelete
  Replies
  1. தப்பாக புரிந்து விட்டீர்கள் நண்பரே.... இப்போது படித்துப் பாருங்கள்-- “வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.”

   Delete
 4. தற்கொலை ஏனோ பிடிப்பதில்லை...காரணங்கள் புரிந்தாலும்.

  படம் வேதனை வேதனை..பார்த்ததும் மனம் கனத்துவிட்டது...

  ReplyDelete
  Replies
  1. நன்றி! நண்பர்க்கு............

   Delete
 5. வறுமையின் கோரத்தை ஓரே 'கிளிக்'கில் உணர்த்திய கலைஞனின் தற்கொலை மனதை வருத்துகிறது !

  ReplyDelete
 6. நன்றி! நண்பர்க்கு.............

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com