பக்கங்கள்

Thursday, November 26, 2015

அழகில்லாதவருக்கு இவ்வுலகமில்லை.......சிறுகதை.


Image result for காதல் கோட்டை
படம்- வினவு..
அந்தத் தெருவில் குடியிருக்கும்  தெரு மக்கள் எல்லோரும்   அந்த வீட்டில்  இறந்து கிடந்த பெண்ணைப் பற்றித்தான்  தங்களுக்குள் தங்களுக்கு தெரிந்த விபரங்களை குசுகுசுவென்ற சத்தத்தில் பேசிக் கொண்டு இருந்தனர்.

போலீஸ் வந்ததும் எல்லொரும்  குசு குசுப்பதை நிறுத்திவிட்டு  விழித்த கண்ணை இமை மூடாமல் வேடிக்கை பார்ப்பதில்  செலுத்தினர். ஒருவழியாக போலீஸ் செத்து கிடந்த பெண்ணின் உடலை வண்டியில் ஏற்றி மருத்துவ மனைக்கு அனுப்பி விட்ட பிறகுதான் தெரு வாசிகளின் னண் இமைகள்  மூடி திறந்தன.

தெரு வாசிகளின் குசு குசு பேச்சு சற்று ஓய்ந்திருந்த நிலையில் போலீசு வந்து அந்தத் தெரு வாசிகளிடம் ஒரு பெண்ணின் போட்டோவை காண்பித்து யார்? என்று விசாரித்தவுடன். திரும்பவும் குசு குசுவானது.. சற்று ஒலியுடன்.. கேட்கத் தொடங்கியது.

போட்டோவில் இருக்கும் பெண்.. அந்த வீட்டில்  வாடகைக்கு குடியிருந்தவனுடன் இருந்தவள் என்று தெரு வாசிகள்  சொன்னார்கள்.

சரி. கண்டுபிடிப்பு  முடிந்தது என்று போலீசு இரந்த வேளையில்.. போட்டோவில் இருப்பது நான். தான் சாகவில்லை உயிரோடு இரக்கிறேன் என்று ஒரு செய்தி வந்ததும்... அப்போ.... கொலையுண்ட பெண் யார் என்று தேடுதலில் இறங்கியது போலீசு....

அப்படி தேடுதலில இந்தக் கதையின் கதாநாயகன் பிடிபட்டான்..

கண்ணாலே பார்த்து வந்த காதல் நூறுடா...
விழியில் பார்க்காமல் வந்த கண்ணியமான
காதல் இதுதாண்டா-----.............................................. 
என்று காதல் கோட்டை என்ற படத்தைப்போல்  

அதே காதல் கோட்டைப்படத்தில் கதாநாயகனின் நண்பன் பேசும்..

“நானும் கல்யாணம் பண்ணிக்குவேன், நயன்தராவையும்..அனுஷ்காவையும் காதலிப்பேன்... ஏன்னா..நான் சராசரி இந்தீயன் என வசனம்போல.

 அழகில்லாதவளுக்கு இவ்வுலகமில்லை என்றுதன் பிளாஷ் பேக் கதையைச் சொன்னான் கதாநாயகன்.

ஒரு குழந்தைப் பெற்று  கணவனை பிரிந்த ஒரு பெண்ணை  திருமணம் முடித்தவன்அவன் . அவர்கள் பெண்ணின்  தாய் வீட்டில் வசிக்கிறார்கள். அவன் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு  அந்த வீட்டில்வாடகைக்கு குடியிருந்து.. ஒர்க் சாப்பில் வேலை செய்து வந்த நிலையில்......

ஒருநாள் எனது செல்போனுக்கு ஒரு கால் வந்தது. .. அதில் பேசிய பெண்ணின் குரல் மிகவும் இனிமையாக இருந்தது. ஆரம்பத்தில் சஜகமாகத்தான்  பேசி பழகி வந்தான். அது ..........

அவனுக்குள் காதலை வளர்த்துவிடடது.  அவள் குரலும் இனிமையாக இருந்ததால் ..அவள் தேவதையாகவோ...பேரழியாகவோ இருக்கலாம் என்று  எண்ணி காதல் கோட்டை திரைபபடம் போல முகம் பார்க்காமல் காதலை வளர்த்து வந்ததால். அந்தத் தேவதையான பேரழிகியின் முகத்தை பார்க்க வேண்டும் ஆவல் மேலிட்டது..

அந்த ஆவலினால் இனிமையான குரலுக்குரியபெண்ணை குடியிருக்கும்  விட்டிற்கு வரவழைத்தான்... 

அந்தப் பெண்ணும்  முகம் காண காதல் கட்டளைக்கு அடிபணிந்து.. எனக்கு நேரில் காட்சியளித்தாள். தேவதையின் காட்சியை நேரில் பார்த்த அனக்கு  பேரதிர்சிசியாக இருந்தது. அவனது காதல் கோட்டை இடிந்தது.

பேரழியாக இல்லாவிட்டாலும் அழகியாகக் கூட இல்லாததால்... அந்தப் பெண்ணை கை கழவ எண்ணினான் . தன்னுடன் நான்கு நாள் தங்கிய அந்த அழகில்லாவளிடம் படுத்து தன் காமம் முழவதையும் தீ்ர்த்துக் கொண்டான்

அவனின் ஆசையயை தீர்த்த அந்த அழகில்லாஅநதப் பெண்... தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அவனிடம்  மனு போடடாள்

தனக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது என்று மனுவுக்கு பதிலுரைத்தான். அவளின் மனுவையும்  நிராகரித்தான்.

அவனால் தன் மனு நிராகரிக்கப்பட்டதை உணர்ந்த அவள்.  உன்னை நம்பி என்னை கொடுத்தேன.வாழ்ந்தால் உன்னோடுதான் வாழுவேன்.  நீ மறுத்தால்  நான் போலீசிடம் போவேன் என்றாள்.

காமப் போதை தெளிந்தவனுக்கு கோபப் போதை தலைக்கேறியது.....அழகில்லாதவளை அடித்து தள்ளிய போதும் .  கேபப் போதை வெறி யால் கியாஸ்அடிப்பின் டியூப்பால் கழுத்தை இறுக்கி..... அழகில்லாதவளை இவ்வுலகத்தவிட்டு  அனுப்பி வைத்தான்.


அழகில்லாதவளை இவ்வுலகத்தைவிட்டு அனுப்பி வைத்த மகிழ்ச்சியில் ஓடி ஒளிந்து தப்பித்தவன்.. தப்பாமல் பிடிபட்டபோது... அழகில்லாதவளுக்கு இவ்வுலகமில்லை என்ற காதலின் புனிதத்தை வாக்குமூலமாகசொன்னான்.13 comments :

 1. உண்மையினை கதை போல் சொல்லிச் சென்ற விதம்
  மிக மிக அருமை
  விளக்காமல் பூடகமாய் புரிந்துகொள்ளும்படியாய்
  தற்காலப் போக்கினையும் அதன் விளைவுகளையும்
  சொல்லிப் போனவிதம் அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி! அய்யா......

   Delete
 2. அருமையான பகிர்வு வலிப்போக்கரே,
  அழகில்லாதவளுக்கு இவ்வுலகம் இல்லை,,,,,
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி! நண்பரே............

   Delete
 3. வாக்கு மூலம் சொன்ன அழகனின் முகத்தைப் பார்க்கணுமே :)

  ReplyDelete
  Replies
  1. அந்த அழகன் மத்திய சிறைச்சாலையில் கம்பி எண்ணுவதாக ..செய்தி நண்பரே..........

   Delete
 4. அடடே பெரிய தத்துவத்தை ஜொள்ளிட்டாரே கசாநாயக்கர்ர்ர்ர்ர்ர்ரு இவரு பெரிய ஞானியாக வரந்துருவாரு நண்பரே......

  ReplyDelete
  Replies
  1. இப்பத்தானே சிறைக்கு போயிருக்கார்.... வெளியே வரும்போது...தாங்கள் சொல்லுவது போல் ஞானியாகத்தான் வருவார் நண்பரே

   Delete
 5. இந்த உலகம் எப்போது காதலையும் காமத்தையும் பிரித்துப்பார்க்கும்... கொடுமை

  ReplyDelete
  Replies
  1. கருத்துரைக்கு நன்றி! நண்பரே......

   Delete
 6. Replies
  1. தங்களின் பாராட்டுக்கு நன்றி! நண்பரே......

   Delete
 7. அட! ஒரு தத்துவ ஞானி உருவாகின்றார் என்று சொல்லுங்கள்! வெளியில் வரக்கூடாது. சிறையிலேயே ஞானம் அடையட்டும்!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com