புதன் 25 2015

நான் அசுரன்.... எனது பாட்டன் நரகாசுரன்....

நரகாசுரன்
நரகாசுரன்



அவசரமான வேலை ஒன்றை முடித்துவிட்டு தன் வீட்டை நோக்கி நடைந்து கொண்டு இருந்தபோது...

அவருக்கு பின்னால் தன் பெயரைச் சொல்லி கூப்பிடுவது தெரிந்ததும். நடையை நிறத்தி திரும்பி பார்த்த்தார்.

டீ கடைக்கு சற்று தள்ளி நின்று  கொண்டு ஒருத்தர்..“கணேசண்ணே....கணேசண்ணே என குரல் கொடுத்துக்கொண்டே ,  கை சைகையுடன”  இங்கே வாங்கண்ணே என்று அழைத்தார்.

குரல் வந்த திசையையும்  கை செய்கையையும் கண்ட கணேசண்ணன்.. “ அட...நீயாடா..., என்றவாறு கூப்பிட்டவரை நோக்கி நடந்தார்.

என்னண்ணே.... பலமான சிந்தனையில போறீங்களா?  என்றவர்.. அண்ணே என்ன  மறந்திட்டிங்கள??...? என்று கேட்டார்.

அதெப்படிடா.....உன்ன மறக்க முடியுமா....??? ஆமா... என்ன.. இந்தப்பக்கம் என்றார்.

என் சகல...மகள... தீபாவளிக்கு..அழைச்சிட்டு வந்திருக்காங்க.......அந்த விழாவுக்கு. என்னையும் குடும்பத்தோட வரச் சொன்னாங்க.....  அதான் வந்திருக்கேண்ணே....... வந்தவுடன் வீட்டுக்கு போணேன்ணே... நீங்க வெளியில போயிட்டதா... சொன்னங்க...... இந்தப் பக்கம் வந்தப்போ...நீங்க போயிகிட்டு  இருந்தத பாத்துட்டு ஒங்கள கூப்பிட்டே்ண்ணே...என்றார்.

உன் மாமானார்.. மாமியாரோடு ராசியாகியாச்சா.... என்று கேட்டார் கணேச அண்ணன்.

மொதக் குழந்த பொற்நத சில நாட்களிலே.... மனசு மாறிட்டாங்கண்ணே......

“நிஜமாகவா.”....... ???

“ஆமாண்ணே”,....... ஒங்க மொழியில சொன்னா..நான்  பெரிய சாதிய ாமாறிட்டேண்ணே..

“ஒன் வீட்டுக்காரம்மா...என்ன.. சொல்லுச்சு.... அதுவும் நல்லதுக்குத்தான்... சாதியா கஞ்சி  ஊத்துது... எதுவும் பிரச்சினை செய்ய வேண்டாமுனு சொல்லிருச்சுண்ணே  என்றவர்...
. சரிண்ணே... நீங்க எப்படி இருக்கீங்க...? அம்மா வேறு  இறந்திட்டதா சொன்னங்க.... வருத்தமா இருந்திச்ண்ணே....

அம்மாவுக்கு வயசாயிருச்சுல்ல.....நான் நல்லாத்தான்  இருக்கேன்... அப்பப்ப  உடம்புக்கு முடியாமல் வந்து  போய்விடும்  அவ்வளவுதான் . சரி ...டீ குடிக்கிறீயா..... என்றார்.

இல்லண்ணே..... இப்பத்தான் டீ குடிச்சேன்.... நீங்க டீ குடிக்கிறீங்களா என்றபடி டீ கடையை நோக்கி போறவரை  தடுத்து நிறுத்தி....

வேண்டாம்டா......நான் எந்தக் காலத்தில் டீ குடிச்சேன்...டீ வேணான்டா......உனக்காக    வேனா   ஒரு பிஸ்கட் ......

“ இன்னும் அப்படியே தான் இருக்கீங்களா   ....ண்ணே..”

மற்றவர்களுக்கு எப்படியோ, “ எனக்கு தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்டா..” என்றார்..


“அப்போ...தீபாவளியையும் கொண்டாடி இருக்க மாட்டிங்க.....ண்ணே...

சும்மா வே தீபாவளிய கொண்டாட மாட்டேன்... இந்த தீபாவளியக்கு முன் என் தாயாரும் இறந்துவிட்டதால்.....யாருககும் . எதுவும் இல்ல...”  “தீபாவளி”  ” குறித்த கட்டுக்கதைதான் உனக்கு தெரியுமில்லடா...” 

“..அது ..என்ன... கதைண்ணே............

“சொல்றேன்  கேட்குறீயா.....”??ஃ

 “ சொல்லுங்கண்ணே....”

அசுரன் ஒருவர், பூமியை பாயாக சுறுட்டிக் கொண்டு கடலுக்குள்ளாடி போயி ஒளிந்து கொண்டதால்... பிரம்மா என்பவன் படைப்புத் தொழிலை செய்ய முடியாமல் போனதாகவும், அதனால்...விஷ்னு என்பவன் பீயைத் தின்னும் பன்னி அவதாரம் எடுத்து, கடலுக்குள் ஒளிந்து கொண்டிருந்த அசுரனை ஒழித்து கட்டி பூமியை மீட்டதாகவும்,.. தன்னை மீட்டிய பன்னி மீது பூமிக்கு காதல் வந்து...அவர்கள் இருவருக்கும் நரகாசுரன் என்கிற பிள்ளை பிறந்ததாகவும் கூறப்படுகிற மனித அறிவுக்கே பொருந்தாத இந்தக் கட்டுக்கதையில்.... தாயைத்தவிர வேறு எவராலும் கொல்லப்பட முடியாத அந்த நரகாசுரனை அவரது தாயான  பூமி தேவியே அவரை அழித்தாகக் கூறி கொண்டாடப்படுவதுதாண்டா..... இந்தத் தீபாவளி.....

என் சகல.........விஷ்னு என்ற கடவுள் மோகினி அவதாரம் எடுத்து நரகாசுரனை அழித்ததாகவுல... சொன்னாருண்ணே””...

“ஆமாடா.....ஒன்...சகல..மட்டுமில்ல.. நிறையப்பேரு.. பிஎச்டி, எம்பில், படிச்சவங்க இல்லையா...அதனால அவுக ஆய்வுப்படி ... அப்படித்தான்.வெவ்வேறு மாதிரி சொல்லு வாங்க.....சரி அதவிடு எப்படியாவது இருந்துட்டு போகட்டும்

“ உண்மை..... என்னான்னு நீங்க சொல்லுங்கண்ணே.... நீங்க சொல்வதுதான்....சரியா... இருக்கும்...


“அந்த உண்மை..இதுதாண்டா.....”..

தீபாவளி கதையின் நாயகன் நரகாசுரன்..  ஆரிய நாகரித்தை எதிர்த்து போரிட்ட மண்ணின் மைந்தன்டா....” ...“மண்ணின் மைந்தனை கொன்றொழித்த ஆரியக் ஆதிக்கக் கும்பலால் கொண்டாடப்பட்ட தீபாவளியை, நரகாசுரனின் வாரிசுகள் கொண்டாடடுவாங்களா..!!!....  அதனால்தான் சொல்றேன்.. நான் அசுரன்,..என்து பாட்டன் நரகாசுரன்” அதனால் தான் நான் தீபாவளியை கொண்டாடுவது இல்லை..இந்த உண்மையை உணர்ந்தவர்கள் ..பிறப்பால் அசுரன்களாக இருப்பவர்கள் எல்லோரும் தீபாவளியை கொண்டாடுவதில்லை..

அப்போ... நானுண்ணே....

'நீதான் ஆரி.யனாய்..மாறிவிட்டேனுன்னு சொன்னீயே.....

“உண்மைதாண்ணே....”


“ஒரு உதாரணத்துக்கு கேக்குறேண்டா........ நான்..செத்தா...நீயும் உன் பொண்டாட்டியும்  கொண்டாடுவிங்களா....????

“ எப்படிண்ணே..... சத்தியமா...கொண்டாட மாட்டோம்ண்ணே.....

உங்க காதலை வழ வச்சவன் செத்தாலே....அதனை கொண்டாட.. மறுக்கிற.....நீங்க.... ஆதி காலத்தில... நம்ம வம்சத்து தலைவனை  கொன்னு..அந்த வம்சத்தையே அழித்து  ஆரியக் கூட்டம் கொண்டாடடும் அந்த தீபாவளிய... அசுரன் வழிவந்த நாம எப்படிடா... வெட்கம் . மானம், ரோசம் என எல்லாத்தையும் உதித்துவிட்டு கொண்டாட முடியும்.....

“ ...என்னால  எதுவும் பேச முடியலண்ணே.............................”

“ சரிச்சரி, நாம பேசினத..... உன் வீட்டுக்காரம்மாவிடம்  மட்டும் சொல்லு .. உன்..சகல..உன் மாமியார்- மாானார்கிட்ட  சொல்லாதே...... ”

“ சொன்னா என்னண்ணே....”

“ சொன்னா என்னாவா.....???  அவுங்க கொண்டாடுற  தீபாவளிக்குத்தானே வந்திருக்க........““ அதோ..உன் சகல...வர்றான் ..... போய்வா.. என்று விடை கொடுத்து அனுப்பி வைத்துவிட்டு தன்வீடு நோக்கி நடக்க ஆம்பித்தார் அசுரனாய் இருந்து ஆரியனாய் மாறிய நண்பனின்   கணேசண்ணன் என்ற அசுரன்.

14 கருத்துகள்:

  1. வணக்கம் வலிப்போக்கரே,
    அருமை அருமை,,, என்னமாய் சொல்லியிருக்கீங்க,,,,,, ஆமா இத சொன்னால் எனக்கும் இங்க ஒன்னும் இல்லாமல் போகும் தான். நான் ஆம் என்று ஒத்துக்கொண்டத மறந்துடுங்க.
    வாழ்த்துக்கள் நண்பரே,,,
    மனக்காயம் மாறுவது தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  2. தீபாவளி குறித்த சிந்தனை...

    எல்லார்க்கும் புரிகிறது...ஏனோ மாற மறுக்கிறார்கள்....
    நடை அருமை...

    பதிலளிநீக்கு
  3. அடடா ஸூப்பர் சரித்திரக்கதை சொன்னார் பிள்ளையாரப்பன் சாரி கணேசண்ணன் என்ற அசுரன் ஆகிய நண்பர் வலிப்போக்கன் அருமை நண்பரே... தொடர்ந்து இந்த மாதிரி கதை எழுதுங்கள் அல்லது எடுத்து விடுங்கள் அடுத்து பொங்கல் வரப்போகுது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொங்கலுக்கு ஒரு சரித்திரக்கதை கிடைக்காமலா போய்விடும் பிள்ளையாரப்பனுக்கு .... என்னா நண்பரே....

      நீக்கு
  4. இதுக்குதான் நதி மூலம் ,ரிசி மூலம் பார்க்கக் கூடாதுன்னு சொல்கிறார்களோ :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லா மூலமும் ஆபத்து என்பதால் அப்படிசொல்லியிருப்பார்கள் நண்பரே........

      நீக்கு
  5. அட! நாங்கதான் கொண்டாடறதே இல்லையே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதைத்தான் கணேசண்ணனும் சொல்லியிருக்கார் நண்பரே.......

      நீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....