திங்கள் 23 2015

நானும் கொஞ்சம் கைதட்டுகிறேன்..முனுமுனுக்கிறேன்



                                                நன்றி! காரிகனுக்கு... என்னையும் கொஞ்சம்  ரசிக்க வைத்தற்கு................

சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே 
செவ்வானம் கடலினிலே கலந்திடக் கண்டனே
மொட்டு விரிந்த மலரினிலே வண்டு மூழ்கிட கண்டேனே 
மூங்கிலிலே காற்று வந்து மோதிடக் கண்டேனே 


பறந்து செல்ல நினைத்து விட்டேன் - எனக்கும் சிறகில்லையே
பழக வந்தேன் தழுவ வந்தேன் - பறவை துணையில்லையே
எடுத்துச் சொல்ல மனமிருந்தும் - வார்த்தை வரவில்லையே
என்னென்னவோ நினைவிருந்தும் - நாணம் விடவில்லையே




14 கருத்துகள்:

  1. ஆஹா! இனிமை! மிகவும் ரசித்தேன் தோழரே!
    "எடுத்துச் சொல்ல மனமிருந்தும் - வார்த்தை வரவில்லையே"
    நன்றி: பாடலை பகிர்வதற்கு தூண்டுதலாய் நின்ற காரிகனுக்கும்,
    பார்வைக்கும்,செவிக்கும் விருந்தளித்த தோழர் வலிப் போகனுக்கும்.
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  2. நன்றி வலிப்போக்கன் என் பதிவை குறிப்பிட்டு எழுதியதற்கு. மிகவும் அற்புதமான பாடலைத்தான் ரசிக்கிறீர்கள். ஆனால் இதற்கு நான் காரணமில்லை. எம் எஸ் வி இல்லாவிட்டால் நானும் இதைப் பற்றி எழுதியிருக்க மாட்டேன். நீங்களும் எழுதியிருக்க மாட்டீர்கள். ஒரு நல்ல இசை ரசனை உங்கள் வசப்பட எனது ஆத்மார்த்த வாழ்த்துக்கள். நிறைய பாடல்கள் கேளுங்கள் - குறிப்பாக பழைய பாடல்களை. அங்கேதான் உண்மையான இசை இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. தங்களையும் மாற்றிய காரிகன் அவர்களுக்கு நன்றி,,,,
    இது போலே இனி தொடருங்கள் வலிப்போக்கரே,

    பதிலளிநீக்கு
  4. பாடல் அருமை நண்பரே நானும் இரசித்தேன்

    பதிலளிநீக்கு
  5. அருமையான பாடல் நண்பரே! மீண்டும் ரசித்தோம்...

    பதிலளிநீக்கு
  6. பழைய பாடல் வரியை நினைவுபடுத்தியமைக்கு நன்றி. மேலும் என்னுடைய இனிய கவிதை உலா தளத்தில் உங்கள் தளத்தில் உள்ளது போலவே கருத்து பெட்டி வைத்துள்ளேன். கருத்தினை வழங்கினால் சரிபார்க்க பயனுள்ளதாக இருக்கும் நண்பரே, வேண்டுகோள்

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....