வெள்ளி 13 2015

கடவுளைக் கண்டவர்.......???

படம்- கடவுளைக் கண்டவர்


கடவுளைக் கண்டவர்
காட்டிய வழியில்
சென்றவர் வந்து
கடவுளை கண்டவர்
சொன்ன வழிமுறையில்
கடவுளை  தானும்
காண சென்றதால்
 என்னையும் வாருங்கள்
கடவுளை  காண
தொடரலாம் என்றார்.

தொடரத்தான் ஆசை
பூஜை விரதம்
தெரியா....ததால்
பாதி வழியில்
நிற்க கூடாதெனில்
தொடராமல்  நிற்கிறேன்..




















18 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களுக்குப்பின் தொடரலாம் என்று முயற்சித்து பார்த்தால்... அழைக்க இருந்த பத்து பேர்களும் முன்பே தொடருவது தெரிந்தது. புதியவர்களையும் தெரியாதவர்களையும் தொடர அழைத்த போது..அவர்களின் தளத்தை போய் பார்த்தபோது நாட் ..பாண்ட் என்றே வருகிறது... அதனால்தான் நண்பரே... தவறு என்று தெரிந்தும் தப்பை ஏற்றுக் கொண்டேன். நண்பரே...

      நீக்கு
  2. தொடராமல் நின்றாயே தோழா!
    மனதை....
    தொட்டுவிட்டு சென்றாயே தோழா!
    நானும்...
    தொடராமல்....
    தொலைத் தூரம் செல்கிறேன்!
    தொடர்பு எல்லைக்கு அப்பால்!
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேறு ஒன்றுமில்லை...நண்பரே..தொடர்பு எல்லைக்குள் நான் இருந்தும் கண்ணைக் காட்டி காட்டில் விட்டது போல் உணர்ந்தேன்.. எனக்கு அம்புட்டு அறிவு இருந்தால். தொடராமல் இருப்பேனா... தொடருவதைதான் விட்டுவிடுவேனா... குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்லக் கூடாதல்லவா......... நண்பரே......

      நீக்கு
  3. பதில்கள்
    1. சித்தர்க்கு தெரியும் .... பக்தனுக்கு என்ன குறை(தொடரத் தெரியாதது)..என்று...

      நீக்கு
  4. எனது பாணியில் : http://dindiguldhanabalan.blogspot.com/2015/11/All-is-god.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படித்தேன் சித்தரே.. கருத்துரையையும் வாக்கையும் பதிவு செய்துவிட்டேன் அய்யா....

      நீக்கு
  5. ஹாஹாஹா ஸூப்பர் இதை தங்களிடம் எதிர் பார்த்தேன் நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்குத்தானே..தெரியும் நண்பரைப்பற்றி......அப்படி தெரிந்ததால்தானே... எனக்கு விலக்கு அளித்தீர்கள்...

      நீக்கு
  6. //பூஜை விரதம்
    தெரியா....ததால்...//
    நீங்க அஷ்டசாலி.

    பதிலளிநீக்கு
  7. தோழரே! நீங்கள் ஒரு இறைமறுப்பாளர் என்பது என்னைப் போன்றவர்களுக்கு தெரியும். அன்புடன் உங்களை அழைத்தவருக்கு தெரிய வாய்ப்பில்லை. அழைத்ததில் தப்பேதும் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழைத்தது தப்பு என்று நான் சொல்லவில்லை..அய்யா.. என் நிலையை “தொடராமல் நிற்கிறேன்..” என்று தெரிவித்துள்ளேன் அய்யா...

      நீக்கு
  8. ஆசைகள் உள்ளவரை
    ஆண்டவன் (கடவுள்) நாடார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருப்பதாக சொல்லப்படும் ஆண்டவரோ சாதிக்கு ஒரு கட்சியைப்பொல் ஒரு கோஷ்டிக்கு ஒரு கடவளாக பிரிந்து உள்ளார்களே....... ஆசைகள் இல்லாதவர் எவற்றை நாடுவார் நண்பரே

      நீக்கு
  9. உங்க நிலைமைதான் எனக்கும் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதை அறிவித்தால் மற்றவர்கள் தெரிந்து கொள்வார்கள் நண்பரே..........

      நீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....