பக்கங்கள்

Wednesday, February 03, 2016

ஊருக்கு ஊரு சாராயம்... கதறுது தமிழகம்.....


சென்ற ஆண்டு ஜூன், சூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாத காலமாக “மூடு டாஸ்மாக்கை” என்ற இயக்கம் தமிழகத்தில் ஒரு எழுச்சியை ஏற்படுத்தியது. இவ்வியக்கம் அரசியல் சக்திகள், மக்கள் மத்தியிலும் விவாதப் பொருளாக எழுந்து டாஸ்மாக்கை மூட வேண்டும் என்பது மக்கள் மனதில் கனலாக கனன்று கொண்டிருக்கிறது.
நீதிமன்ற பாசிசம், தமிழகத்தையே புரட்டி போட்ட மழைவெள்ளம் போன்ற சில அரசியல் நிகழ்வுகளால் தற்காலிகமாக இந்த இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. மீண்டும், ஜனவரி 1-லிருந்து “ஊருக்கு ஊர் சாராயம்…கதறுது தமிழகம்; மூடு டாஸ்மாக்கை” என்ற முழக்கத்தோடு டாஸ்மாக்கை மூடியே தீருவது என்ற உத்வேகத்தோடு புறப்பட்டிருக்கிறது, இந்த இயக்கம். வரும் பிப்ரவரி 14 அன்று திருச்சியில் டாஸ்மாக் எதிர்ப்பு சிறப்பு மாநாடு நடத்துகிறது மக்கள் அதிகாரம்.

9 comments :

 1. கோரிக்கை வெல்லட்டும் நண்பரே... வாழ்த்துகள் எமது

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்களுக்கு நன்றி! நண்பரே....

   Delete
 2. என்னது தமிழத்தையே புரட்டிப் போட்டுருச்சா வெள்ளம்? அப்படியா? புதுசா இருக்கே செய்தி...வெள்ளம் வந்துச்சு???? வந்த மாதிரி தெரியலையே...நீங்க ஏதாவது கிராஃபிக்ஸ் படம் பாத்திருப்பீங்க நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. தலைநகரத்தை புரட்டிபோட்டதை என்னவென்று சொல்வது சார். தலையில்லா...என்று.. சொல்வது மாதிரி.....

   Delete
  2. நண்பரே! இந்த டாஸ்மாக் வெள்ளம் புரட்டிப் போடுவது உண்மைதான்...ஆனால் மழை வெள்ளம் வந்தது போல மக்களும் சரி, அரசும் சரி நடந்து கொள்ளவில்லையே. மறந்தது போலல்லவா இருக்கிறது!! அதைத்தான் இங்கு சொல்லியது

   Delete
 3. மாநாட்டின் நோக்கம் வெற்றி பெறட்டும்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்களுக்கு நன்றி!!

   Delete
 4. நல்ல தகவல் தான்,,

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com