வியாழன் 04 2016

டாஸ்மாக்; அன்றும்..இன்றும்....



படம்-வினவு



அன்று...
கருவக் காட்டுக்குள்
கூச்சப்பட்டு ஒளிவு
மறைவாய் குடித்த
காலம் போய்



இன்று கூச்சம்
நாச்சமின்றி பயமின்றி
குடிக்கிற பழக்கமே
இல்லாத பெண்கள்
இளைஞர்கள் படிக்கும்
பிள்ளைகள் முதற்கொண்டு
குடிக்கும் நிலமை.

பள்ளி மாணவன்
முதல் கிழவன்
வரை நடுத்தெருவில்
அரை நி்ர்வாணமாய்

குடிவெறி போதையில்
பெற்ற  மகளிடம்
பாயும் தகப்பன்
கணவனை தடுக்க
முடியாமல்  அடித்தே
கொல்லும் மனைவி

உடன்  பிறந்த
சகோதிரிடம் பாலியல்
வன்முறையில் ஈடுபடும்
சகோதரன் வல்லுறவுக்கு
ஆளாகும் சிறுமிகள்...

குடிக்க காசு
 கொடுக்கா..தினால்
அம்மாவைக் கொல்லும்
பெற்ற பிள்ளைகள்

குவார்ட்டர் திருடனாக
மாறும் கல்லூரி
மாணவன் தமிழ்
சமூகத்தையே டாஸ்மாக்கால்
அழித்துக் கொண்டு
இருக்கிறது சாராய
சாம்ராஜ்ஜித்து ராணியின்
தலைமையிலான அரசு

தலைப்பைச் சேருங்கள்

14 கருத்துகள்:

  1. தங்கள் சிந்தனை வரிகள் அருமை வலிப்போக்கரே, மாற்றம் வரும் என நம்புவோம்.

    பதிலளிநீக்கு
  2. கவிதை வரிகளில் இன்றைய அவலத்தை விவரித்த விதம் நன்று

    பதிலளிநீக்கு
  3. இன்றைய தமிழகத்தின் நிலைமை அப்படியே எடுத்துக்காட்டி விட்டீர்கள்.
    த ம 2

    பதிலளிநீக்கு
  4. போதைக்கு மட்டும் நல்ல பாதை அமைத்துக் கொடுக்கிறார்கள். :(
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதில்தானே மற்றவர்களை சீரழித்து தங்கள் கொள்ளையை மறைக்க முடியும்...

      நீக்கு
  5. கொடுக்கிறார்களா கெடுக்கிறார்களா!

    பதிலளிநீக்கு
  6. வரிகள் அருமை. மாநாடு வெற்றி பெற வேண்டும் மாற்றம் வர வேண்டும்..

    அன்றும் இன்றும் என்றும் என்று ஆகிவிடக்கூடாது நண்பரே...ஏனென்றால் நம்ம ஆட்சியாளர்களைப் பற்றித்தான் உங்களுக்குத் தெரியுமே...

    பதிலளிநீக்கு
  7. சாராய சாம்ராஜ்ஜியம் விரைவில் சரிய வாழ்த்துக்கள் :)

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....