பக்கங்கள்

Thursday, March 10, 2016

மானத்தை காக்க பலி கொடுத்த ... காதலர்கள்...

படம்-

அந்த ஆணுக்கு வயது இருபத்தி ஐந்த இருக்கும்.. அவருக்கு கலயாணம் ஆகி ஒரு குழந்தை உண்டு. அவரது மணைவி போலீசில் வேலை பார்க்கிறார்.போலீசில் வேலை பார்க்கும் காரணத்தால் இவரை கழற்றிவிட்டார்.


அந்தப் பெண்ணுக்கு வயது ஐம்பது இருக்கும் கணவரை இழந்தவர். ஒரு மகன் உண்டு. அந்த மகன் வெளியூரில் போலீசில் ஆயதபடைப் பிரிவில் வேலை செய்கிறார்.

25வயதுடைய அந்த ஆணும், 50 வயதுடைய அந்தப் பெண்ணும், ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள், ஒரே தெருவைச் சேர்ந்தவர்கள். காலச் சூழ்நிலை காரணமாக இவர்களுக்குள் பழக்கமாகி அது காதலாக பிறந்து நாளொரு மேனியும் பொழுதுமாக..அந்தக் கிராமத்து ஊர்க்காரர்களுக்கும் தெருக்காரர்களுக்கும் உறவுக்காரர்களுக்கும் தெரியாத வண்ணம்.தனிமையில் சந்தித்து உடலாலும் உள்ளத்தாலும் இணைந்து காதலை வளர்த்து காதல் வானில் பறந்து திரிந்து வந்தார்கள்.

இவர்களின் காதலில் பொறாமை கொண்ட சதி. இவர்களுக்கு ஒரு விதி செய்ய காத்திருந்தது. ஆக விதியும் சதியும் சேர்ந்த அந்த நாளும் வந்தது.

அன்றைய நாளில் அந்தக் காதலர்கள் இருவரும் ஊரில் ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு வீட்டின் சுவர் அருகே ஒதுங்கி தங்களின் காதலை உடலால் பறிமாறிக் கொண்டு இருந்தனர்.

அந்த வேளையில் சிவ பூஜையில் கரடி வந்த கதையாக... அந்த வீட்டின் இளம் பெண் இயல்பான வீட்டு வேலையின் காரணமாக வெளியே வந்தாள். வந்தவள் அந்தக் காதலர்கள் உடலால் உறவாடிக் கொண்டு இருப்பதை கண்ணுற்றாள்.பதறி அடித்து வீட்டுக்குள் சென்று விட்டாள்.

உறவில் திளைத்திருந்த காதலர்களும்.. அந்தப் பெண் தங்களை கவனித்து விட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள்

அதுவரையில் மானம், வெட்கம், பயம் போன்றவற்றை அறிந்திராத அந்தக் காதலர்களுக்கு  இப்போது பயம், வெட்கம், மானம்  எல்லாம் ஒரு சேர வந்துவிட்டது. தங்கள் காதல் விவகாரத்தை பார்த்துவிட்ட அந்தப் பெண் எப்படியும் ஊர்க்காரர்களிடம், உறவுக்காரர்களிடம் சொல்லிவிடுவாளே  என்று பயந்தனர்.படபடத்தனர்

அவள் எப்படியும் தங்களைப் பற்றி சொல்லி விடுவாள்.அவள் சொல்லிவிட்டால்.. மானம் கப்பலேறிவிடும் என்று நிணைத்த காதலர்கள்.. தங்கள் மானத்தை காப்பாற்றவும் தாங்கள் காதல் வாழவும் என்ன வழி என்று  மாங்கு மாங்குன்னு யோசித்தனர்.

காதல் மோகத்தில் இருந்தவர்களுக்கு திடிரென்று ஏற்ப்பட்ட பயத்தினால் படபடப்பால்  அவர்களின் மண்டையில் ஒரே வழிதான் தோன்றியது அந்த ஒரே வழி பார்த்தவளை பலி கொடுப்பதுத்தான்   முடிவ எடுத்த காதலர்கள் இருவரும்  அந்தப் பெண்னை ..வெடக் கோழியை அமுக்கி கழுத்தை திருகி கொல்வது போல.  பார்த்தவளை சத்தமில்லாமல் கழுத்தை திருகி கொன்று.. தங்கள் மான்ததை காப்பாற்றிய மகிழ்ச்சியில் திளைத்தனர்.

பார்த்தினால் பலி கொடுக்கப்பட்ட பெண்ணின் உடலை  மருத்தவ பிரேத பரி சோதனை மூலமாக  கொலை என்று பதிவு செய்த போலீசு படிப்படியாக மோப்பம் பிடித்து மானத்தைக் காக்க இளம் பெண்ணை பலி கொடுத்த  இந்தக் காதலர்களை கையும் களவுமாக பிடித்தபோது  ..  இந்தக் காதலர்களின் மானத்தை காத்த கதை   தெருவே பரவி  ஊருக்கே தெரிந்து உலகத்துக்கே தெரியும்படியாக செய்தி பத்திரிகையில் வந்து  தெரிந்துவிட்டது.

11 comments :

 1. பலி கொடுத்தாலும்
  மானம் காக்கப் பட்டதோ...
  பார்த்தவரை கொல்லாமல்
  விட்டிருந்தால் மானம்
  கப்பல்தான் ஏறி இருக்கும்....
  ஆனால் இப்போது விமானம்,ராக்கெட்
  எல்லாம் ஏறி விட்டதே...

  ReplyDelete
 2. வணக்கம்...

  //!மான்தைக் காக்க //.....?

  ReplyDelete
 3. அடப்பாவமே..எதைக்கொடுமை என சொல்வது...?

  ReplyDelete
 4. ச்சே இந்த மானங்கெட்ட காதல் கிடக்கட்டும் பாவம் பார்த்த அந்தப் பெண்ணுக்கு இந்த தண்டனையா ?

  ReplyDelete
 5. காமம் கண்ணை மறைக்கும் என்பது சரிதான் :)

  ReplyDelete
 6. முறை தவறிய எதுவும்
  வரைமுறை மீறிய எதுவும்
  இப்படித்தானே முடியும்...

  ReplyDelete
 7. கொஞ்சம் வேறு மாதிரி யோசிக்கலாமா? சமூகம் திரு மணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகளை ஒப்புக் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். அவரும் தனி, அவளும் தனி; வயது ஏற்ற இறக்கத்தால் இரண்டாம் திருமணம் என்று ஊர் அறிய செய்து கொள்வதில் தயக்கம். இஸ்லாமிய மதத்தில் வயது முதிர்ந்த பெண்ணை இளைய ஆண் மகன் மணம் கொள்வது சாதாரணம். முகமத் நபி மணந்த கதீஜா கூட அவரை விட வயது முதிர்ந்தவர் என்று நினைவு. நாம் தினசரித் தாள்களில் காணும் கொலைகளில் முதன்மையான காரணம் கள்ள உறவு என்று தோன்றுகிறது. அது சமூகத்தில் இந்த அளவுக்கு இருக்கும் போது அதற்கும் விதிகளை எழுதி சமனப் படுத்த வேண்டும். கள்ளக் காதலும், கொலைகளும் குறையும். உடனே குஷ்பூக்கு அனுப்பியது போல ஆட்டோ அனுப்புவதோ, கேஸ் போடுவதோ வேண்டாம். இப்படி எண்ணத் துவங்கலாமே.

  ReplyDelete
 8. //இஸ்லாமிய மதத்தில் வயது முதிர்ந்த பெண்ணை இளைய ஆண் மகன் மணம் கொள்வது சாதாரணம். முகமத் நபி மணந்த கதீஜா கூட அவரை விட வயது முதிர்ந்தவர் என்று நினைவு.//
  முகமத் நபி பல பெண்களை திருமணம் செய்து கொண்டார். ஆய்ஷா என்ற அவரது மனைவிக்கு 6வயதே இருக்கும் போதே திருமணம் செய்து கொண்டார், 9வயதில் முதலிரவு நடந்தது. இதை தான் இஸ்லாமிய நாடுகளில் பின்பற்ற விரும்புகிறார்கள்.

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com