பக்கங்கள்

Wednesday, March 09, 2016

அரசு ஊழியர்கள் இனி, கோடீஸ்வரர் ஆகலாம்.

படம்-www.tamilmurasu.org“அண்ணே..... அண்ணே....அண்ணே...”

“என்னடா..”

வந்துண்ணே.... அந்தா.... அந்தண்ணே  சொல்றாரு... அரசு ஊழியர்கள் எல்லாம் இனி கோடீஸ்வரர் ஆகலாமுன்னு  சொல்றாருண்ணே..அது எப்படிண்ணே..”

 “அப்படியா,!!... எப்படின்னு அவருகிட்டேயே ...கேளு...”

“கேட்டேண்ணே...... அது ...ரகசியமுன்னு..” சொல்ல மாட்டுறாருண்ணே...”


“ நீதான்.... அரசு ஊழியர் இல்லலேடா... அத தெரிஞ்சு என்ன செய்யப்போற....”

“ என் பொண்டாட்டி... அரசு  ஊழிருண்ணே...”

“அதுசரி...அத உம்..பொண்டாட்டில தெரிஞ்சுகனும்..... நீ..தெரிஞ்சு....???”

“என்னாண்ணே...... இப்படி கேட்டுட்டீங்க.......  ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் நிற்பது  போல...., என் மனைவியின் வெற்றிக்குப் பின்னால் நான் நிற்க வேணும்மின்ணே....”

“ஓ....... சரிப்பா........அந்தண்ணன்கிட்டே... போ..... அந்த ரகசித்தைச் சொல்லச் சொல்கிறேன்...”


“டேய்...அய்யா....இந்த நாட்டோட இரகசியம் மற்றும் வளங்கள் எல்லாம் வெளி நாட்டிற்கு கொள்ளைபோயிருச்சு......நீ மட்டும் அந்த இரகசியத்தை இவனுக்கு சொல்லப்பா...... நாளைக்கு இவன் கோடீஸ்வரனா ஆயிட்டானா..... உனக்கு தட்சனை செய்யச் சொல்றேன்.”

“அப்ப..தட்சனை செய்யிறது இருக்கட்டும்...  இப்பவே..கொஞ்சம் கட்டிங் வாங்கித்தரச் சொல்லுங்க.....”

“வாங்கித் தரலைன்னா.. சொல்ல மாட்டீயாடா.......”

“ அப்படியில்லண்ணே...”

 “என்ன..னொப்...படியில்ல...ண்ணே.....”

“ ஒரு பீடியாச்சு  கொடுக்கச் சொல்லுங்கண்ணே....” புகைய விட்டுக்கிட்டே சொல்வேன்ல்ல....”

“அண்ணே...ஏங்கிட்ட..பீடி  இருக்குண்ணே... இந்தாங்கண்ணே.... அந்த இரகசியத்த சொல்லுங்கண்ணே....”

“தினமும் பேப்பர படிச்சா...ஒனக்குகூட...அந்த ரகசியம் தெரிஞ்சிருக்கும்... என்ன காலக் கொடுமையிடா...... ஒரு பீடிக்காக அந்த ஊருக்கே தெரிந்த ரகசியத்தை சொல்ல வேண்டியதிருக்கு... இதுல நாடு முன்னேறுது  வல்லு ரசாகுதுன்னு அள்ளி விதைக்கிறாங்கே.....”


“.... பீடிய.. கொடுத்த... தீப்பெட்டி குடு.....””

“ சாரி...ணணே.... இந்தாண்ணே.....”

“ அது வேற..ஒன்னுமில்லடா......., அரசு ஊழியர்கள் லஞ்சம்..வாங்கினாலோ, ஊழல் செய்தாலோ..... அவர்கள் மேல் புகார் செய்யவோ.. வழக்கோ  போட வேண்டுமென்றால் அரசு அனுமதி பெற வேண்டும் என்று சட்டம் வந்துவிட்டது...


“ அப்படியா....!!!..வாயை பொளாக்காத..இன்னும் கொஞ்சம்  இருக்கு கேளு”....

“உன் வீட்டுக்காரம்மா...ஊழல் பண்ணி சொத்து சேத்து இருக்குன்னு வைய்யி,
அவங்க மேல நடவடிக்கை எடுக்கனும்னா..அரசு உத்தரவு வேனும்...அப்படியே
நடவடிக்கை எடுக்கலாம் என்ற உத்தரவு... அரசு தலைமைச செயலகமான செவ்வாய் கிரகத்திலிருந்து வர்ரதுக்குள்ள..... நீங்க பாக்குறவங்கள... பாத்து கவனிக்கிறவங்கள...கவனிச்சிட்டீங“கன்னா.... எந்தக் கொம்பனாலும் ஒன்னு செய்ய முடியாது. இதுதான்  அந்த இரகசியம், இந்தா.... இன்னொரு பீடி குடு....


12 comments :

 1. இதான் ரகசியமா
  தானு என்னமோ ஏதோ னு
  பயந்துட்டேன்....
  ஊழல் மட்டும் சுழலாக
  நம் நாட்டில் சுற்றுதே....

  ReplyDelete
 2. இனி தைரியமா ஊழல் பண்ணலாம்
  எப்படியும் மேலதிகாரிகளுக்கும் கொஞ்சம்
  செலவாகும். அதுக்கும் சேர்த்துக்
  கறந்துட்டா பிரச்சனையில்லை
  அப்படித்தானே
  இல்லை நான் தப்பா புரிஞ்சுக்கிட்டேனா ?

  ReplyDelete
 3. அடப்பாவமே....அவங்க ஏற்கனவே போராடுறாங்க சம்பளம் பத்தலன்னு..நீங்க ஐடியா வேற கொடுக்குறீங்களா?

  ReplyDelete
 4. தலைப்பு சரியே,,

  ReplyDelete
 5. ஹை...... பாருக்குள்ளே நல்லநாடு நம்--பார்--ரத--நாடு.

  ReplyDelete
 6. ஊழல் ஊழல் எதிலும் ஊழல்-னு சொல்லுற நாம தான் அதுக்கு முக்கிய காரணம் ஐயா.நாம குடுத்து பழக்கிட்டோம் அவங்க வாங்கி பழகிட்டாங்க ஐயா.

  ReplyDelete
 7. இனி ஊக்கமாய் வாங்குவார்களே :)

  ReplyDelete
 8. ஹா... ஹா... ஹா... இதுதான் ரகசியமா!

  ReplyDelete
 9. இந்த மாதிரி ஏதாவது எழுதி எங்களுடைய வலியை எல்லாம் போக்கறது வலிப்போக்கன்.

  --
  Jayakumar

  ReplyDelete
 10. ஓஹோன்னா இதுதானா ரகசியம்....புரையோடிப் போய்விட்டது ஊழல்

  ReplyDelete
 11. முமு, இமு, வமு எல்லாம் இனிமே கோர்ட், கேசுன்னு அலையற வேலை மிச்சமாச்சு....

  ReplyDelete
 12. நகைச்சுவையாகவே கருத்தை வழங்கி விட்டீர்கள், வாழ்த்துகள்

  ReplyDelete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!