பக்கங்கள்

Wednesday, April 27, 2016

ஏன்? நெளிகிறேன் என்றால்........

ஆற அமர
அமர்ந்து சிறு
உணவை உண்டு
முடிக்கும் கடைசி
நேரத்தில் உடலை
ஏன் நெளிககிறாய்
என்று  நீங்கள்
என்னிடம் கேட்டால்
.
நான்...
என்ன செய்வது
நான் உண்ணும்
உணவின் மீதியை
எதிர் பார்த்து
காத்திருக்கும் என்
தாய்   இல்லை

கடைசி சிறு
உணவை உண்ண
முடியாமல் தவிக்கும்
என் தவிப்பைப்
பார்த்து கோபத்துடன்
திட்டி  மீதி
உணவை உண்ணும்
துணை இல்லை

நான் உண்ணும்
உணவை  பாதியாக
குறைக்க உதவ
என் உணவினை
உண்ண சண்டை
போடும் மகளோ.
மகனோ இல்லை.

சிறு வயதில்
எதிலும் பாதியாக
பங்கு போட்ட
நண்பர்கள் வளர்ந்து
விட்ட நாகரிகம்
கருதி அந்த
பழக்கதை்தை கை
விடா நண்பர்கள்
இன்று இல்லை


உணவு கிடைக்காத
பல நேரங்களில்
பட்ட பாட்டினால்
உணவின் கடைசி
சிறு உணவோ
எந்த உணவும்
கூட எதுவும்
வீணாகக் கூடாது
என்ற எனது
தொட்டில் பழக்கத்தால்

சாப்பிட முடியாமல்
தவிக்க விடும்
அந்த உணவை
எப்படியும்  சாப்பிட்டு
முடிக்க வேண்டும்
என்ற முடிவால்
உடலை நெளிக்கிறேன்
..

8 comments :

 1. தனிமை கொடுமை நண்பரே..

  ReplyDelete
 2. படிக்கும் பொழுது வருத்தமாக இருக்கின்றது நண்பரே...

  ReplyDelete
 3. ஆழமான சிந்தனை வாழ்த்துகள்

  ReplyDelete
 4. ரசிக்க வைத்த கவிதை!
  த ம 3

  ReplyDelete
 5. இதே மனநிலையில் இருக்கும் துணை ஒன்றைத் தேடலாமே !

  ReplyDelete
 6. வலிப்போக்கன் மிகவும் வேதனைமிக்க வரிகள்...

  ReplyDelete
 7. சிந்திக்க வைக்கும் சிறப்பு வரிகள்

  ReplyDelete
 8. அருமையான வலி(ரி)கள் நண்பரே...

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com