பக்கங்கள்

Saturday, April 09, 2016

அன்னை தெரசாவாக மாறாத..இந்தீய ஒலக அழகியின் இரகசியம்...

“நண்பரே.,.. உங்களுக்கு விசயம் தெரியுமா..”.???

“என்ன விசயம்  நண்பரே..”

“ அகில ஒலக அழகியின் போட்டியில் வெற்றி பெற்ற. அகில இந்தீய ஒலக அழகி...பேட்டியின் போது.. எதிர் காலத்தில் நானும் அன்னை தெரசாவாக வருவேன் என்று கண்ணீர் சிந்தி அகில ஒலகத்துக்கும்  சொன்னாரே.....

“ ஆமா..சொன்னதாக..நிணைவு...

வருசம் இத்தனை ஆகியும் எட்டாவது அதியமாக ஒரு கொழந்த பெற்றெடுத்தும்.... அன்னை தெரசா பரலோக ராஜ்ஜியத்துக்கு சென்ற பின்னும் காலியாக உள்ள இடத்திற்கு இன்னும் அன்னை தெரசாக மாறாத ஒலக அழகியின்  இரகசியம் தெரியுமா...?  நண்பரே.....


“என்ன காரணம் என்று தெரியாமல்..ஒலக அழகியின் ரசிகர்களோடு..நானும் தவித்துக் கொண்டுதான் இருக்கிறேன் நண்பரே.....” அந்த ரகசியம் என்னவோ...???

“ ஒலக அலகியின் இரகசியம் ஒலகத்துக்கே தெரிந்திருக்கும்போது...ஒலகஅலகிியின் அதாவது இந்தீய அலகியின் ரகசியம் முன்னால் இரசிகனான ஒங்களுக்கு தெரியாமல் இருப்பது காலத்தின் கோலம்தான்... நண்பரே...”


“வேறு என்ன செய்வது நண்பரே....  “ ஊத்தி கொடுத்த உத்தமி எல்லாம்... தேர்தல் நெருங்கி  வந்தவுடன்...  ஊத்திக் கொடுப்பதை எதிர்த்த ஆறு பேர் மேல் தேசத்துரோக வழக்கை பதிவு செய்த  பின்பு,. இனிமேல் ஊத்திக் கொடுப்பது படிப்படியாக முழுமையாக நிறுத்தப்படும் என்று வாய் வீச்சு விடுவதும் கால்த்தின் கோலம்தான் நண்பரே.”

“ஆமாம் நண்பரே.. அதுவும் அடுத்தவர் மீது குற்றம் சொல்லி தப்புவதும். காலத்தின் கோலம்தான்“....உத்தமியின் ரகசியத்தை அப்புறம் பேசுவோம்... முதலில் ஒலக அலகியின் ரகசியத்துக்கு வருவோம் நண்பரே....

“ ஆமாம்..நண்பரே...  முதலில் ஒலக அழகி ..அன்னை தெரசாவாக மாறாத அந்த இரகசியத்தை சொல்லுங்கள் நண்பரே”...

“  விக்கி லீக்ஸ் போல் இது பனமா லீக்ஸ்  நண்பரே .பிரிட்டீஷ் வீர்ஜின் தீவுக்களில் இருக்கும்“ஆமிக் பார்ட்னர்ஸ்லிமிடெட்“ என்ற உப்புமா கம்பெனிக்கு இயக்குநாராகவும்..பங்கு தாராகவும்   இருக்கும்போது  எப்படி.. அன்னை தெரசாவாக மாற முடியும் நண்பரே”

“ ஆமாமாம....கோடி...கோடி...கோடி...க்குஅதிபதியாகஇருக்கும்போது...”

“ ஆம் நண்பரே, சர்வதேச மோசடியில்  பெரிய பதவி வகிப்பதால்தான்.. அகில ஒலக இந்தீய ஒலக அழகி..“ அன்னை தெரசாவாக மாறிவில்லை...நண்பரே..
6 comments :

 1. அவர் மாமனார் பெயரும் சேர்ந்தே வந்துள்ளதே...!

  :)))

  ReplyDelete
 2. ஒலக அழகியா ஒலக கெழவியா இவ
  பெரிய தலைக்கட்டுகள் யார்தான்
  கொடுத்த வாக்குறுதிய நிறைவேற்றியிருக்காங்க...!

  ReplyDelete
 3. பணம் பந்தியிலே ,குணம் குப்பையிலே :)

  ReplyDelete
 4. இந்த சந்தேகம் நமக்கு வரவேண்டிய அவசியமே இல்லையே. ஏனென்றால் அதுஅப்படித்தான்.

  ReplyDelete
 5. என்னத்தை சொல்வது! ஊத்தி கொடுத்த உத்தமி, தேசதுரோக வழக்கு போட்ட உத்தமி மாதிரி இவரும் வரலாம்!

  ReplyDelete
 6. சீக்கிரமாக மாறச் சொல்லுங்க நண்பரே வேறு யாரும் அந்த இடத்தை பிடிச்சுடிப் போறாங்க...

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்..அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com