வெள்ளி 29 2016

மீசை..தாடிக்குள் ஒரு கதை......

அவரை பின் பக்கத்தில் இருந்து பார்த்தால்  இளைஞராட்டம் தெரிவார். முன் பக்கத்தில் நின்று பார்த்தால் மீசையும் தாடியும் கொண்ட வயோதிகர் போல்  காணப்படுவார்.

மீசையும் தாடியும் இல்லாமல் அவர் சேவ் செய்து   கண்ணாடி அணிந்து வீதி வழியில் செல்லும் போது அவர் வயதுக்கும் பத்து வயது குறைந்தவர் போல் காட்சி அளிப்பார்.

இப்படி காட்சி அளித்தவர் திடிரென்று மீசையம் தாடியுமாக காட்சியளித்தபோது அவரின் முகம் களையிழந்து கவலைகள் நிறைந்திருந்தது..

அவர் வசிக்கும் தெருக்காரர்கள்  அவரின் அம்மா இறந்த பின்தான் அவர் இப்படி மாறிவிட்டார் என்றார்கள். வேறு சிலரோ... அவர் தெருவில் உள்ள சின்னப்பையன் என்ற தெரு கிழட்டு நாட்டாமை என்பவன். இவர் முகச்சவரம் செய்த  மறு நிமிடமே  அவனும் முகச் சவரம் செய்வானாம்..இவர் என்னென்ன செய்கிறாரோ அத்தனையும் இவன் செய்துவிட்டு அவன் வீட்டு வாசலில்  சேர் போட்டு அமர்ந்து மற்றவர்களுக்கு காட்சி அளிப்பானாம்.

தான் செய்வதையெல்லாம் செய்யும் கிழட்டு நாட்டாமைக்கு பதிலடி கொடுக்க..மீசையும் தாடியும் வைத்திருக்கார் என்றனர். இவர் மீசையும் தாடியும் வைத்தவுடன்.. கிழட்டு நாட்டமை முன்போல..  முகச்சவரம் செய்யாமல் பென்சன் வாங்கச் செல்லும் போதுதான்  செய்வானாம்...

முன்பு..எப்போதோ..... மோடி மாதிரி தாடி வைத்திருந்த ஒருவரிடம் “ நானும் உங்களைப் போல் தாடி வைக்கத்தான் ஆசை பட்டேன்... ஆனால் எனக்கு ஆங்கங்கே முடி வளர்வதால் தாடி வைக்க முடிவில்லை என்று சொன்னதாக கேள்வி,

இவர் சொன்னதைக் கேட்ட அவர். சொன்னார்.. “தாடி வைக்காதே” பேடி என்று ஏசுவார்கள் என்றார்.

உங்களை அப்படியா ஏசுகிறார்கள் என்று இவர் கேட்டபோது... நான் திருமணம் முடிந்து பி்ள்ள குட்டிகாரனாகிவிட்டேன். நீ அப்படி அல்லவே என்றாராம்.

இப்ப என்னவாழுது.... நான் திருமணம் முடிக்காத காரணத்தை சுட்டிகாட்டி சண்டையில் என்னை ஒன்பது என்றுதானே ஏசுகிறார்கள்... என்றார்.

பலர் பலவிதமாகவும் சிலர் சில விதமாகவும் அவர் தாடி வைத்திருக்கும் கதையைச் சொன்னார்கள். அவர் மீசையும் தாடியும் வை்திருக்கும் காரணம் என்ன என்று ஒருவருக்கும் தெரியவில்லை...அவர்களுக்கு பரிச்சயமானவர்கள் என்ன தாடி என்று  கேட்கும் போது  சும்மா   என்று சொல்வார்.

வெகுநாட்களுக்குப்பின்.. மீசையை முறுக்கி விட்டபடி பிரதான சாலையின் வழியே  நடந்து போய் கொண்டு இருந்தார். அவரிடம் மூன்று டூவுீலர்கள் இருந்தும்  அவர் அதில் பயணம் செய்வதில்லை..

அவர் குடியிருக்கும் தெருவில் முதன் முதலில் டூவுீலர் வாங்கியவர் அவரே... முதலில் டீவிஎஸ்50  வாங்கி ஓட்டிக் கொண்டு இருந்த போது அவரின் அக்காவின் கணவரரன மச்சான் வாங்கிக் கொண்டார். இரண்டாவதாக.. சூசிகி மேக்ஸ்100 வாங்கியபோது.. அக்காவின் மூத்தமகனான மருமகன் வாங்கிக் கொண்டார்.

கடைசியாக, இவருக்காக  ஸகூட்டி பெப் வாங்கி ஓட்டிக் கொண்டு இருந்த நாளில் இரண்டாவது மருமகன் வாங்கிக் கொண்டார்.. அதே நேரத்தில் ஒரு விபத்தில் கொடுக்கப்பட்ட  நஷ்ட ஈடு பத்தாது என்ற வழக்கில்  வரப்பில்  உள்ள புல்லை மேயாமல்  வயிலில் உள்ள நாற்றில் வாய் வைத்த கதையாக  எல்லோரும் தலைக் கவசம் அணியவேண்டும் அணியா விட்டால் வண்டியை பறிக்க வேண்டும் என்று ஆனையிட்ட புன்னியவானின் மேல் இருந்த கோபத்தாலும்   வண்டியே வேண்டாம் என்று விட்டு  எங்கு சென்றாலும் நடை ராஜாவாகி விட்டார்.

அப்படி அவர் நடந்து சென்று கொண்டு இருந்தபோது...எதிரில் வந்த ஒருவர் சைகையால் என்ன மீசை தாடி என்று கேட்டார். இவர் அணிந்திருந்த கண்ணாடியை கழற்றி மெல்ல புன்னகைத்தார்.

அந்தப் புன்னகை ஆயிரம் அர்த்தங்களை சொல்வது போல் இருந்தது. “வயதாகிவிட்டதல்லவா...? முன்போல் முகவரம் செய்ய முடியவில்லை அதனால் என்றார்.

அவர் சொன்ன பதிலைக் கேட்டவரும் பதிலுக்கு புன்னகைத்து விட்டு,“ இருக்கட்டும் மீசை..தாடி இரகசியத்தை சொல்லவேயில்லையே என்று கேட்டபோது...

தங்களுக்கு எப்படித் தெரிகிறது என்று கேட்டார்.

முன்ன..பின்ன தாங்கள் தாடி வைத்திருந்தால் தெரிந்து வைத்திருப்பேன்..எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து தாங்கள் தாடி மீசை வைத்து நான் பார்த்ததில்லை.... இப்போ திடிரென்று மீசையும் தாடியமாக திரிவதைப் பார்த்தால்... எனக்கு என்னவென்று தெரியவில்லை....ஒரு வேளை தாங்கள் அந்த வலையில...... என்று இழுத்தார்.

காதலுக்கும் எனக்கும் வெகு தூரம்.. ஆகையால்..இது காதல் தோல்வியால் வளர்ந்த..வளர்த்த மீசை..தாடி அல்ல...என்பது மட்டும்  உறுதி.... அப்பவே என்னை யாரும் காதலிக்கவில்லை... இப்போ வயதான காலத்திலா அதுவும் சொத்து பத்து என்று எதுவுமில்லா  என்னை காதலிக்க போகிறார்கள்.என்றார்


அது இல்லையென்றால்..தங்கள் அம்மா இறந்த துக்கத்தினால் என்று சொல்லலாமா...???

என் அம்மா என்னை சிறுவயதிலே என் அக்காவிடம் விட்டுட்டு வேலைக்கு சென்று விடுவார்கள்  என்ற போதும் நிரந்தமாக என் அம்மா என்னை விட்டு போன துக்கம் இருந்தாலும்....அந்த துக்கத்திற்க்கான வைக்கவில்லை....

பிறகு எதற்கு இந்த..கோலம்....??????

அவர் கண்கள் கலங்கி அந்தக் கண்களில் நீர் முட்டிக் கொண்டு வந்தது.. அதை எதிரே நிற்பவர்க்கு தெரியாமல் மறைப்பதற்க்காக சட்டென்று கழட்டிய  பிரவுன் கண்ணாடியை கண்களில் மாட்டிக் கொண்டு பேசலானார்.

உண்மையைச் சொல்வதென்றால்.... மீசை வைத்தால் வீரம் வரும் தாடி வைத்தால் அறிவு வளரும் என்று யாரோ சொன்னதை நிணைத்துக் கொள்ளுங்களேன். என்றார்.

சட்டென்று கண்ணாடி அணிந்த காரணத்தை அறிந்த அவரும். அவரின் துக்கத்தை கலைக்கும் விதமாக  அது சரி..? மீசையும் தாடியும் வளர்ந்துவிட்டதே! அதனால் , தங்களுக்கு வீரம் விளைந்ததா??? அறிவு வளர்ந்தத??? என்று கேட்டார்.


வீரம் எங்கே? விளைந்தது..? .. உங்களுக்குத்தான் தெரியுமே?? என் இடத்துப் பிரச்சினையில் என் சித்தப்பனின்  மனைவியும்  சித்தியின் சேத்தாளியான தெரு நாட்டாமையும் சேர்ந்து காவல் நிலையத்தில்  பொய் புகார் கொடுத்தபோது நடந்த சம்பவத்தில்  இன்ஸ்பெக்டர்  அவர்களுக்கு ஆதரவாக வந்த சிபாரிசின் மூலம் என்னை பயமுறுத்தியபோது... நீட்டிய பேப்பரில் கையேழுத்து போட்டுவிட்டு வந்தது.

“ அப்போ  அறிவு????

அறிவு எங்கே? வளருகிறது..... தாடி மயிறுதான் வளர்கிறது என்று சொல்லித் சிரித்தார். அப்படிச் சிரித்ததின் காரணமான அவர் கண்களில் தேங்கி நின்றிருந்த கண்ணீர் கண்ணங்களில் வழியாக விரைந்தோடி வந்தது...

கடைசியாக அவரிடம்... உங்களைப்போல் நானும் மீசை தாடி வைக்கப் போகிறேன்“ எனற்போது.... காசா பணமா..? தாரளமாக வைத்துக் கொள்ளுங்கள் இப்போ வருகிற நடிகர்கள் எல்லாம் மீசை தாடியோடுதான் காட்சி அளிக்கிறார்கள் என்றுவிட்டு தன் நடையை தொடர்ந்தார்.




fea68-babybeard
படம-ctbc.com






9 கருத்துகள்:

  1. ஒரே சொந்தக் கதை சோகக் கதையாய் இருக்கே ,என்னாச்சு ?

    மீசை மட்டும் பெருசா இருந்தா வீரம் வருமாடாங்கிற பாடல் வரிகள் ஞாபகத்தில் வந்தது :)

    பதிலளிநீக்கு
  2. சுயசரிதம் முழுவதும் படித்து அறிந்தேன் நண்பரே....

    பதிலளிநீக்கு
  3. "அறிவு எங்கே? வளருகிறது... தாடி மயிறுதான் வளர்கிறது என்று சொல்லித் சிரித்தார். அப்படிச் சிரித்ததின் காரணமான அவர் கண்களில் தேங்கி நின்றிருந்த கண்ணீர் கண்ணங்களில் வழியாக விரைந்தோடி வந்தது..." என அழகாக உணர்வுகளைப் பகிர்ந்துள்ளீர்கள்.

    தங்கள் பதிவுகளை இணைத்து மின்நூல் ஆக்க உதவுங்கள்
    http://tebooks.friendhood.net/t1-topic

    பதிலளிநீக்கு
  4. என்னாயிற்று வலிப்போக்கரே,, இதுவும் கடந்து போகும்,,

    பதிலளிநீக்கு
  5. தாடி, மீசைக்குள் ஒரு கதை, நன்று

    பதிலளிநீக்கு
  6. பதிவிற்கேற்ற புகைப்படம்போல் தெரியவில்லையே. இவர் மிகவும் இளமையானவராக அல்லவா இருக்கிறார்?

    பதிலளிநீக்கு
  7. இதிலே ஏதோ மறைந்திருக்கு!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....