பக்கங்கள்

Monday, May 09, 2016

அது என் அம்மா இல்லை தோழரே....

சாராயக் கடையை
மூடு என்று
போராடிய மக்கள்
 மீது தடி
கொண்டு தாக்கி
மண்டையை உடைத்து
தரதர வென்று
இழுத்துச் சென்று
சாராயக் கடையை
காத்த பெண்
போலீசை மேதாவிகள்
மேடம் என்று
அழைப்பர் என்னைப்
போன்ற தற்குறிகள்
அம்மா என்றுதான்
சொல்வர். தோழரே

ரேசன் கடையில்
வரிசையின்றி நிற்கும்
பெண்கள் கூட்டத்தை
 பார்க்கும் ஊழியர்
சொல்வார் இந்தாம்மா
வரிசையில் வாம்மா
என்று அந்த
மாதிரிதான்  இந்த
அம்மா தோழரே..

கள்ளச் சாராயத்தை
அரசு சாராயமென
ஊத்திக் கொடுத்து
என்னையும் என்
குடும்பத்தோடு எனது
சமூகத்தையும் சீரழித்ததை
தவ வாழ்வு
வாழ்ந்ததாக புரட்டி
திரிக்கிற   அது
என்  அம்மா
இல்லை தோழரே...எழுந்தது மக்களின் அதிகாரம் – உணர்வூட்டும் போராட்டச் செய்திகள் !
படம்- வினவு
..

6 comments :

 1. அம்மா என்பதெல்லாம் சும்மா :)

  ReplyDelete
 2. அம்மா இல்லை, இது சும்மா!

  ReplyDelete
 3. சாராயத்த ஊத்துறவ லாம் அம்மாவா..?

  ReplyDelete
 4. அருமை நண்பரே அம்மா நம்மைப் பெற்ற தாயாக மட்டுமே இருக்க முடியும்

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com