பக்கங்கள்

Monday, May 23, 2016

தொழிலாளிக்கு வகுப்பு எடுத்த முதலாளி...

அந்த உணவுக் கடைக்காரர். கடைக்கு வந்தவுடன். தன் கடைஊழியர்களை அனைவரையும் அழைத்தார். அவர்கள் எல்லோரும் தன் அருகில் வந்து நின்றபின் பேசினார்.

அய்யா.. எவனாவது. வந்து சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்கலேன்னா... நீங்கள் கோபம் கொண்டு எதுவும் பேசிப்பிடாதிங்க. ..தின்னுபிட்டு தெனவெட்டா பேசுற நாயி எந்த நாயின்னு மொதல்ல தெரிஞ்சு பேசுங்க.... அப்படி தெனாவெட்டா பேசுறவன் ஒன்னு ரவுடியா இருக்கனும் இல்லேன்னா காக்கியா இருக்கனும்...ரெண்டு பேருமே...நமக்கு வேண்டாதவுக.....இவிங்களால  நம்ம தொழிலு கெட்டு போவதோட மன உளச்சலும் அலைச்சலும் அதிகமாகுது. அதனால...கவனமாக  வாயையும் கைகையும் நீங்க கவனமாக கையாளனும் என்றார்.

ஊழியரில் ஒருவர் சொன்னார்... ஏங்கய்யா ..இப்படி பயப்படுறீங்க..... இப்படி பயப்படுறனாதான்..வர்ரவனெல்லாம் நம்ம தலையில ஏறி மிதிக்கிறானுங்க ..
ஏய்... அய்யா...  காட்சியும் மாறல...ஆட்சியும் மாறல...இந்த லட்சனத்துல இப்படி..வீராப்பா...பேசி..நம்ம பொழப்புல மண்ண அள்ளி போட்டுடத..ய்யா.... என்றார் மொதலாளி...

ஒரு விபரத்தை சொல்றேன் கேளுங்க....மதுரையில அஞ்சாரு கடை வச்சிருக்கிறவர் கடையில... ஒரு காக்கி ஓசியில சாப்பிட்டதுமில்லாம... ஓசியில பார்சலும் கேட்டு இருக்கு காக்கி... சாப்பிட்டதுக்கே காசு தரல..இதுல  பார்சல் வேரையா...? ன்னு கேட்டு பார்சல் தரமுடியாதுன்னு சொல்லிட்டாங்க.வந்ததே கோபம் அந்த காக்கிக்கு..... யானை கொட்டாச்சிய ஒதுக்கின மாதிரி மனசுல வச்சுகிட்டு. அன்னிக்கு ராத்திரி பதினோரு மணிக்கு வந்து பார்சல் தர மறுத்தவரை அடிச்சு இழுத்துட்டுபோயி ஸ்டேசனுல அடச்சு வச்சுட்டு. தன் பவர காட்டி இருச்சு..... அந்த ஆளுக்கே அந்தக் கதின்னா.... ஒத்த கடைய வச்சுகிட்டு பொழப்ப ஓட்டுற நாம எம் மாத்திரம்.... அதனாலதான் உங்களுக்குச் சொல்றேன்  பாத்து சூதானமாக நடந்துகிங்கய்யா......

அப்போ..வர்ர நாய்க்கு சோத்தையும் போட்டு, பார்சலும் கட்டி கொடுங்கன்னு சொல்றீங்களா மொதலாளி என்றார்.துடுக்கான இளைஞர் ஒருவர்.

சொல்றத..புரிஞ்கிட்டா...நல்லதுதானய்யா....காக்கிய பாத்தி அய்யாவுக்கு   அனுபவம்..பத்தல...கொஞ்ச நேரம் ஒதுக்கி பேப்பர படிங்க..அய்யா.....

நம்ம சங்கமெல்லாம் என்னா செய்துகிட்டு இருக்கு... மொதலாளி.....இன்னொரு ஊழியர்.

ம்ம்ம் வெங்காயத்த உறிக்க முடியாம அழுதுகிட்டு இருக்கு... வேற என்ன செய்யும்..புகார் மனு கொடுக்கும் அதத்தாண்டி அந்த சங்கம் என்ன செய்துவிட முடியும்..

அப்படியெல்லாம் நமக்கு எதுவும் வேண்டாமுன்னுதான். “அப்போ..வர்ர நாய்க்கு சோத்தையும் போட்டு, பார்சலும் கட்டி கொடுங்கன்னு சொல்றீங்களா மொதலாளி..ன்னு அந்த அய்யா கிண்டலா கேட்டாரே.. அது மாதிரிஅதை இடம் பொருள்..ஏவல்..அறிந்து செய்கன்னு சொல்றேன்... ஞாபகத்துல வச்சுகிட்டு வேல செய்யுங்க அய்யா... என்றார்.

உணவுக் கடை ஊழியர்கள். மொதலாளி சொன்னதை கேட்டு உத்தரவுக்கு பணிந்து தங்கள்  வேலைகளில் கவனம் செலுத்த கலைந்தனர்.

செய்தி—் மதுரையில் ஓசியில் சாப்பிட்டதோடு... ஓசியில் பார்சல் தராத்தால் ஒட்டல் மேலாளரை தாக்கிய ஏட்டு........


                                     ............................................................................................................

5 comments :

 1. முதலாளி சொன்னது சரி தானே காட்சியும் மாறல ஆட்சியும் மாறல என்ன செய்வது!
  ஆட்சி மாறாததிற்காக நமீதா அம்மையார் கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு வருகிறார்.
  https://www.youtube.com/watch?v=6SyzA2Ye8t8

  ReplyDelete
 2. எனக்குத் தெரிந்த ஒரு கடையில் 'இவர்களுக்கு'க் கொடுக்க என்றே தனியாக 'எடுத்து' வைத்திருப்பார்கள்! அது அவளவு தரமானதாக இருக்காது!

  ReplyDelete
 3. உண்மைதான் நண்பரே தமிழ் நாட்டு காவல்துறைக்கு இப்படிப் போன்றவர்களால்தான் மானக்கேடு உண்டாகின்றது தங்களது பாணியில் அருமை நண்பரே...

  ReplyDelete
 4. அந்த எட்டு மீது துறை ரீதியா நடவடிக்கை எடுக்கப் படவில்லையா ?

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com