பக்கங்கள்

Saturday, May 07, 2016

. பேய்களும், பிசாசுகளும் போட்டியிடும் தேர்தலில் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்?

100% வாக்களியுங்கள் என்று பிரச்சாரம் செய்கிறது தேர்தல் ஆணையம்.

100% வாக்களித்தால் 100% ஊழல் ஒழியுமா?

இதற்கு தேர்தல் ஆணையம் உத்திரவாதம் தருமா?

100% வாக்களித்தால் நமக்கு 100%வேலை கிடைக்குமா?

இதற்கும் தேர்தல் ஆணையம் உத்தரவாதம் தருமா?


வாக்களிப்பது ஜனநாயகக் கடமை என்கிறது தேர்தல் ஆணையம். இந்தத் தேர்தலில் வாக்களிப்பது சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்வதாகும். இன்னும் தெளிவாக கூறினால் நம்மை கொள்ளையடிக்க நாமே வரிசையில் காத்திருந்து லைசென்ஸ் வழங்குவதாகும்!

நேர்மையான தேர்தல் எனக் கூறிக்கொண்டு, அரசியல் தலைவர்களை எல்லாம் விட்டுவிட்டு அப்பாவி மக்களை சோதனை போடுகின்ற தேர்தல் ஆணையம், நம்மால் தேர்வு செய்யப்பட்ட அமைப்பா? இதன் கேட்பாரில்லாத சர்வாதிகாரம், எவ்வாறு உண்மையான ஜனநாயகத்தைத் தரும்?
.நல்லவர்களுக்கு வாக்களியுங்கள் என்கிறது தேர்தல் ஆணையம்.
தேர்தலில் நிற்கும் நல்லவர்கள் யாரையாவது உங்களுக்கு தெரியுமா?
பெயரளவு போலி ஜனநாயகத்திற்கு கூட இடமில்லாதபடி கிரிமினல்களும், ரவுடிகளும் நிறைந்திருக்கும் இந்தத் தேர்தல் முறையில் நாம் யாரைத் தேர்ந்தெடுப்பது?
எனக்கு உனக்கு என்று போட்டி போட்டுக்கொண்டு ஓட்டு கேட்கும் கட்சிகள் எல்லாம் எப்படிப்பட்டவை? அ.தி.மு.க – ஜெயலலிதா,சசிகலா மன்னார்குடி மாஃபியா கும்பலின் குடும்பம், தி.மு.க -கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி, மாறன் குடும்பம்,  தே.மு.தி.க -விஜயகாந்த்,  பிரேமலதா, சுதீஷ் குடும்பம், பா.ம.க – ராமதாஸ்,  அன்புமணி, சவுமியா குடும்பம். இவ்வாறு கட்சிகள் அனைத்தும் குடும்பக் கட்சிகளாக இருக்கின்றன.
நமக்கோ, கோடி ரூபாய் என்பது மிகப் பெரிய தொகை. ஆனால் தேர்தலில் நிற்பவர்கள் பல கோடிகளை சாதாரணமாக செலவு செய்கிறார்கள். வெற்றி பெற்றால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பல கோடிகளைக் கொள்ளையடிப்பார்கள். மற்ற கட்சிகளும் ஊழல், கொலை, கொள்ளை, கட்டப் பஞ்சாயத்து, ரவுடியிசம் செய்கின்ற பொறுக்கிக் கட்சிகள்தான். ஆக பேய்களும், பிசாசுகளும் போட்டியிடும் தேர்தலில் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்? பேயையா, பிசாசையா?....??????????... சொல்லுங்கள்..!!!!

ndlf-it-boycott-election
நன்றி! வினவு

8 comments :

 1. //நம்மை கொள்ளையடிக்க நாமே வரிசையில் காத்திருந்து லைசென்ஸ் வழங்குவதாகும்!//

  ஸூப்பர் நண்பரே
  பேயும் வேண்டாம், பிசாசும் வேண்டாம் சைத்தானை தேர்ந்தெடுப்போம்

  ReplyDelete
 2. தேர்தலை புறக்கணியுங்கள் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. மற்றபடி நீங்கள் சுட்டிக்காட்டிய அனைத்தும் 100 சதம் உண்மை!
  த ம 2

  ReplyDelete
 3. பேயும் வேண்டாம், பிசாசும் வேண்டாம் என்றால் அதற்காகத்தானே NOTA வை வைத்து இருக்கிறார்கள். அதற்காவது போடுங்கள். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், மாறாக செய்வதறியாது சும்மா இருந்து விடாதீர்கள் நண்பரே!!!

  ReplyDelete
 4. உங்களின் கோணத்தில் இருக்கும் நியாயத்தை மக்கள் உணரும் காலம் நெருங்கி விட்டது !

  ReplyDelete
 5. ஒரு கொடிய பிசாசு அதிகாரம் செய்ய வராம தடுப்பதற்காக, வாக்களிப்பில் கலந்து கொள்வது வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனதும் கடமை.
  புரச்சி மூலம் அதிகாரத்துக்கு வந்தவர்கள் மற்ற பிசாசுகளை விட மோசமானவர்களே என்கின்ற உண்மையையும் நாம் வரலாற்றிலிருந்து பாடம் பெற்று கொள்ள வேண்டும்.

  ReplyDelete
 6. உண்மைதான். இந்தக் குழப்பத்துக்கு விடை ஏது?

  ReplyDelete
 7. அரசியல் தெரியாத நான் எதை பற்றி கருத்திடுவது

  ReplyDelete
 8. நோட்டாவில் போடுங்கள்,, நாம் நம் கடமையைச் செய்வோம்,,

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com