பக்கங்கள்

Thursday, August 25, 2016

குண்டுகளைவிட.... கற்கள் வலிமையானவை...

காஷ்மீரில் இந்திய அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்தி வரும் ஹிஸ்புல் முஜாஹிதீன் எனும் அமைப்பைச் சேர்ந்த தளபதிகளுள் ஒருவரான புர்ஹான் வானி, ரம்ஜான் பண்டிகை முடிந்த மறுநாளே – ஜூலை 8 அன்று இரவில் அரசுப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். 22 வயதான, காஷ்மீர் இளைஞர்களிடையே செல்வாக்கு கொண்ட புர்ஹான் வானியைக் கொன்றதைப் பெரும் வெற்றியாக அறிவித்த மோடி அரசு, அக்கொலையையடுத்து காஷ்மீரில் வெடித்துக் கிளம்பிய மக்களின் போராட்டங்களை அடக்கமுடியாமல் தோற்றுப் போய் நிற்கிறது.

புர்ஹான் வானி
புர்ஹான் வானி

புர்ஹானி வானி கொல்லப்பட்ட மறுநாள் தொடங்கி கடந்த இருபது நாட்களாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியைச் சேர்ந்த பத்து மாவட்டங்களை ஊரடங்கு உத்தரவுக்குக் கீழ் கொண்டுவந்து, மக்கள் நடமாட்டத்தைத் தடைசெய்த பிறகும்; தொலைக்காட்சி, கேபிள், இணையம், கைபேசி, சமூக வலைத் தளங்கள் உள்ளிட்ட நவீன தொடர்புச் சாதனங்களை அனைத்தையும் முடக்கிய பிறகும்; காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியிலிருந்து வெளிவரும் பத்திரிகைகள் மீது சட்டவிரோத தடை விதித்து, அவற்றை முடக்கிய பிறகும்; ஏறக்குறைய ஐம்பது காஷ்மீரிகளை சிறிய ரக குண்டுகளால் (pellet guns) சுட்டுக் கொன்ற பிறகும்; இக்குண்டுகளால் தாக்கப்பட்டோரில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தமது கண்பார்வையை இழந்து, குருடர்களாக ஆக்கப்பட்ட பிறகும்; ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களைக் காயப்படுத்தி, அவர்களை முடமாக்கிய பிறகும்; பல நூறு பேர் கருப்புச் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பிறகும் இந்திய அரசுக்கு எதிராக வெடித்துக் கிளம்பிய காஷ்மீர் மக்களின் போராட்டம் தணிந்துவிடவில்லை.


இந்திய இராணுவத்தின், துணை இராணுவப் படைகளின்  குண்டுகளை விட காஷ்மீரத்து இளைஞர்களின் கைகளில் உள்ள கற்கள் வலிமையானவை என்பதை காஷ்மீர் பள்ளத்தாக்கு உலகுக்கு எடுத்துக் காட்டி வருகிறது. ஒப்பீட்டுரீதியாகச் சொன்னால், பாலஸ்தீன மக்கள் யூத இனவெறி இசுரேலிய அரசுக்கு எதிராக நடத்திய இன்டிஃபதா போராட்டத்தைப் போன்றதொரு போராட்டத்தை காஷ்மீரத்து இளைஞர்கள் இந்து பாசிச இந்திய அரசுக்கு எதிராக நடத்தி வருகிறார்கள்.

நன்றி! வினவு.

1 comment :

  1. மோடியின் பலுசிஸ்தான் பேச்சால் இந்தியாவின் நடு நிலைத் தன்மை உலக அரங்கில் கேள்விக்குறியாகி உள்ளது !இதனால் பாகிஸ்தானின் ஆதரவால் காஷ்மீர் பிரச்சினை பூதாகரமாக கிளம்பியுள்ளது !

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com