பக்கங்கள்

Thursday, September 29, 2016

காது குடைய ஒரு இறகு

மயிலே..மயிலே..
என்றால் மயிலு
இறகு போடாது

குயிலே குயிலே
என்றால் கு்யிலும்
இறகு போடாது

கா...கா...கா
என்று  கரைந்தாலும்
காக்காவும் இறகு
போடாது  தான்

பின்ன எப்படி
எதிர்த்த வீட்டுக்காரி
இறகால காது
குடைகிறாள்....ஒரு வேள
அவ புருசன்
அவ்வளவு கெட்டிகாரனா
நமக்கு தெரியாம
என்று யோசித்தாள்
பக்கத்து வீட்டுக்காரி.

2 comments :

  1. இந்த யோசனை ஏதோ ஒரு விபரீதத்தில் தான் போய் முடியும் :)

    ReplyDelete

  2. சிந்திக்க வைக்கும் சிறந்த பதிவு

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com