பக்கங்கள்

Thursday, January 12, 2017

இதில நான் எம்மாத்திரம்... ......

தொடர்ந்து விடாமல் என் கைப்பேசி ஒலித்தது....எடுத்த பின்....

“ வணக்கம்  சார்... சொல்லுங்க.சார்..”

“பிரிண்டிங்..ஆபிசா....”

“ஆமாங்க...சார். விபரத்த சொல்லுங்க.சார்...”

“நீங்க...யாருங்க....”

“நான்  ஓனர்...சார்”

“யோவ்... வேல கொடுத்தா   சீக்கிரம்  முடித்து தர மாட்டீயா...??”

“ எந்த வேலை சார்... கொஞ்சம்  விவரமா..... சொல்லுங்க...சார்,”

“ அதாய்யா...விசிட்டிங்கார்டு...”

“ சார், கோவித்துக் கொள்ளாதீங்க.... அதுல..கரெக்சன் இருந்தது. அதில் திருத்தம் செய்து... மீண்டும் ஓட்டி தரோம் சார்,“

“ நான் சரியாகத்தானே புருப் பார்த்தேன். அதுல் ஒன்னுமில்லையே.யய்யா..”

” எழுத்துப் பிழை இருந்தது சார், அதை திருத்தி விட்டோம்.. சார் உடனே ஓட்டி தரோம் சார்,

” வேல கொடுக்கிறதுக்கே..பயமா   இருக்கு  ”

“ நீங்க...என்னைக்கு சார் கொடுத்தீங்க  சார்,”


“ முந்தின நாள்  கொடுத்ததுதய்யா...”

“ சார், நீங்க  கொடுத்தது மல்டிகலர்.. நாலு கலர் சார்,.. ஒன்ன மட்டும்  பிரிண்டிங் ஓட்ட முடியாது.. ரெண்டு மேட்டர் சேர்ந்திருந்தா... உடனே  ஒட்டிவிடலாம்.... நீங்க..அவசர படுத்துகிறதனால... நாளைக்கு கண்டிப்பா... வாங்கிக்கிறலாம் சார்,

“ என்னவோ  செய்யுங்கய்யா.......”

“ சரிங்க..சார்...”


குறிப்பிட்ட நாளில் அவருடைய விசிட்டிங்கார்டு வேலை முடித்து ஒப்படைக்கப்பட்டது.. வேண்டா வெறுப்பாக பெற்றுக் கொண்டு... கூலியை இரண்டு நாள் கழித்து தருவதாக சொன்னார்.”


எம் பொழப்பே..இந்த தொழிலே அப்படித்தான் இருப்பதால் ஏற்றுக் கொண்டு, இரண்டு நாள் கழித்து அவருக்கு போன் செய்யப்பட்டது...அவருடைய உதவியாளர் எடுத்தார். சார். ஒரு முக்கியமான வேலையில் இருக்கிறார். சாருக்கு ஞாபகப்படுத்துகிறேன் என்றார்.

இரண்டு நாள் கழித்து போன் செய்யதபோது.... பிசி என்று வந்தது...போனை அவர் எடுக்கவில்லை

விசிிட்டிங்கார்டு ஆர்டர் கொடுத்தவர்.. அட்வான்ஸ் எதுவும் கொடுத்தாரா என்று ஆர்டர் குறிப்பில் அலசப்பட்டபோது... எதுவும் இல்லை. என்றும் எனக்கு மிகவும் தெரிந்தவர் ஒருவரின் சிபாரிசு செய்ததால்.. வேலை வாங்கியதாகவும் எனக்கு தெரிந்தது....

பிசியாக இருந்தஅந்த  நாளைகயும் கழித்துவிட்டு..  மறுநாள் அவருக்கு போன் செய்தேன்....

நெடு நேரத்துக்குப்பின் அவர் போனை எடுத்தார்..

“சார், வணக்கம். பிரிண்டிங் ஆபிசில் இருந்து... பேசுகிறேன்..சார்.... ரமேஷ் சாருங்களா...சார்.”

“ ஆமாம்.... என்ன விசயம்.என்றார்.....

“விசிட்டிங்கார்டு அடித்ததுக்கு காசு தர்ரேன்னு சொன்னிங்க  சார்,

“ என்னய்யா..... காசு..காசுன்னு... போன் போடுறீங்க.....ம்ம்”


சார்..ஒரு நிமிசம்,அன்னிக்கு . கொடுத்த வேலைய சீக்கிரம் கொடுக்கலைன்னு என்ன கத்து கத்தினங்க..ஒத்த வேலய கொடுத்துபுட்டு, எப்படி .சத்தம் போட்டீங்க.. இருக்கிறவங்களிலிலே நான்தான் சீக்கிரமாக வேலையை முடித்து கொடுக்கிறவன். என்னயவே... அந்த விரட்டு விரட்டினிங்க.. வேல முடிச்சு கொடுத்து  ஒரு வாரத்துக்கு மேல ஆச்சு.... செஞ்ச வேலைக்கு. கூலி கொடுக்கவேனும்முன்னு தெரியல..உய்களக்கு ..எப்ப தருவீங்க.... அந்த காச வாங்குவதற்கு பதினாரு தடவ  நான் அலையுனுமா...??? சொல்லுங்க..சார்,


அந்த நபர் போனை சட்டென கட் பன்னிவிட்டார்.. செஞ்ச வேலைக்கு கூலி பொங்கலுக்கு முன் கிடைக்குமா..? அல்லது பொங்கலுக்கு பின் கிடைக்குமான்னு  தெரியல.இல்ல எதையாவது குற்றம் கண்டுபிடித்துவிட்டு காந்தி கணக்குல சேத்துவிடுவாரோ  தெரியல.....ஊருக்கே சோறு போடும் விவசாயிகளின் நிலைமையோ படு பயங்கரமாக  இருக்கு... இத தட்டிக் கேட்கமா... ஜல்லிக்டடு நடத்த போராட்டம் நடத்துறாங்க...... ஊமையன் கனவுல கூட பேசமுடியாத நிலைமைதான் இன்னிக்கு  நிலவுகிறது.... இதில நான் எம்மாத்திரம்... எதிர்பார்த்து. காத்து இருக்கிறேன் பொங்கல் கழித்து வரும் நாட்களை.......!!!!!!!!!!!!!!!!!


12 comments :

 1. சிபாரிசு செய்தவரிடம் சொல்லி காசைக் கறக்கப் பாருங்களேன் :(

  ReplyDelete
  Replies
  1. நண்பர் கேட்டாருன்னு சிபாரிசுதான் செய்வேன் காசு வாங்குவது உங்கள் பொறுப்பு என்பார்..

   Delete
 2. நீங்கள் மட்டும் அல்ல நாங்களும் இவ்விடயத்தில் இப்படித்தான் மாட்டிக்கொண்டு விழிப்போம். தங்கள் காரியம் ஆகும் வரை தாங்கள் தான் எங்கள் இரட்சகர் போல் கதையும் பேச்சும் இருக்கும்.அதன் பின் காசு கேட்டால் பெரிய கதையெல்லாம் கதைப்பார்கள். அதனாலேயே இப்போவெல்லாம் முன்கூட்டியே பாதி அட்வான்ஸும் ஆர்டர் முடித்து கொடுக்கும் அன்றே மீதியை முழுதாகவும் செலுத்த சொல்லி விடுவேன். வியாபாரத்தில் சொந்தபந்தம், நல்ல நட்பு, கூடா நட்பு எனவெல்லாம் பார்த்தால் நாலு நாளில் கடை மூட வேண்டியது தான்.

  ReplyDelete
 3. Replies
  1. பொங்கல் கழித்துதான் நேரில் சென்று வரவேண்டும் தலைவரே...

   Delete
 4. இன்றைய வாழ்க்கை முறை கடினம்தான் நண்பரே

  ReplyDelete
 5. Replies
  1. இப்படித்தான் இருக்கிறது வக்கீல் அய்யா...

   Delete
 6. நல்ல கருத்து க்கு மகிழ்ச்சி

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தால் நல்லது அய்யா...

   Delete
 7. இப்படியும் சிலர்! பொங்கல் நல்வாழ்த்துகள்..

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com