பக்கங்கள்

Saturday, January 14, 2017

சில நேரங்களில்...இப்படி.......

வேலைகளை சீக்கிரமாய் முடிக்க வேண்டி..... சில நேரங்களில்.... பல்.மற்றும் முகத்தை மட்டும் சுத்தம் செய்துவிட்டு வேலைகளில் முழ்கிவிடுவது உண்டு... அப்படி வேலைகளில் முழ்கியதன் பயனாக... தலையில் அறிவு வளர்வதற்கு பதிலாக நிறைய முடி வளர்ந்தும்... தாடியும் மீசையுமாக  பார்ப்பதற்கு பயங்கரமாகவும்... மற்றவர்களுக்கு பிடிக்காாமல் முகம் சுழிக்கும் அளவுக்கு மிகவும் ஆ...சிங்கமாக  இருந்தேன்.... நண்பர்கள... தாடி மீசையும் பார்த்து அய்ப்பாவா...முருகனா என்றார்கள்.... தோழர்களோ...ஏன்? இந்தக் கோலம்... ரெம்ப வயதானவர் மாதரி தெரிகிறது என்றார்கள்...

ஒருவழியாக வாங்கிய வேலையை இரவும் பகலுமாக தொடர்ந்து முடித்துவிட்டு ... சிகை அலங்கார கடைக்கு சென்றபோது....ஏற்கனவே.. காத்திருந்த ஒருவர்  முகச்சவரம்  மட்டும் செய்து  கொள்வதால் காத்திருந்தேன்....  எனக்கு தெரிந்தவர்... என் சிறு வயதில் சைக்கிள் கடை வைத்திருந்த அண்ணன் ஒருவர் வந்தார்.

வந்தவர்  என்னைக்  கண்டதும் என்னையா... இந்தக் கோலம்... காதல் தோல்வியா என்றார். எனை்னைப் பார்த்தால்  அப்படியா  தெரிகிறது கேட்டபோது.... முகச்சவரம் செய்து கொண்டு இருந்தவரையும்... சவர வேலையை செய்து கொண்டு இருந்தவரையும் அவர் கருத்துக்கு துனைக்கு அழைத்தார்.

அவர்களும்.... என்னைப் பார்த்தால்  அப்படித்தான்  தெரிகிறது என்று சேர்ந்து சொன்னார்கள்.... கண்ணாடியில் என் முகத்தை நன்றாக பார்த்தேன். எனக்கு அப்படித் தெரியலையே அண்ணே என்றபோது... உனக்கு தெரியாது எனக்கும் அவர்களுக்கும்தான் தெரியும் என்றார்.

அப்படியென்றால்  நீங்கள் எல்லாரும் காதலில் தோற்றுப் போன அனுபவம் உள்ளவர்களா...? கேள்வி கேட்டபோது.... காதலித்து தோத்து போகவில்லை  பிறர் சொல்லி...பிறரை பார்த்து தெரிந்து கொண்டோம் என்றார்கள்.


எப்படி...?? நான் அதை தெரிந்து கொள்ளலாமா..?என்று அவரிடம் கேட்டபோது அப்படியா இரு என்றவிட்டு, சைக்கிள்கடை அண்ணன். சலூன் கடைக்கு சற்று தள்ளி எதிரில் இருந்த டீக்கடையை நோக்கி மணி... மணி...மணி என்று தாடியும் மீசையும் நிறைந்து மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரை அழைத்தார்..

பல தடவை கூப்பிட்டும் திரும்பி பார்க்காத மணி  ஒரு சிறுவன்.. போசுஅண்ணன் கூப்பிடுறாரு என்று சொன்னதும்...  திரும்பி பார்க்காத மணி  கடையின் திசையை பார்த்தார். போஸ் அண்ணன் கை காட்டி ஆட்டி அவரை அழைத்ததும் மணி எழுந்து எங்களை நோக்கி நடந்து வந்தார்.

அவரை முன்பின் பார்த்தது இல்லை... யாருண்ணே...இவரு என்று கேட்டதுக்கு
வரட்டும்..வந்தப்பின் அவரைப் பற்றிச் சொல்கிறேன் என்றார்..

இதற்கிடையில் பலசரக்கு கடைக்காரர் ஒருவரும்  முகச்சவரம் செய்வதற்க்காக கடைக்கு வந்தார்.  என்னைக் கண்டதும்... சிரித்தார். “என்னண்ணே... அந்த பொம்பள சொன்னதும்...முடி வெட்ட வந்திட்டிங்களா...??? என்றார்.

போஸ் அண்ணன் என்ன விவரம் என்று அவரிடம் கேட்டார்.... அவர் என்னிடமே கேட்கச் சொன்னார்..... நானும் என்ன விபரமுன்னு அவருகிட்டயே கேளுங்க... என்றேன்.

கடைக்காரர் அந்த விபரத்தை சொன்னார்,  அண்ணன் பற்பசையும் குளியல் சோப்பும் வாங்க வந்தார்...

அப்போது  குழந்தையுடன் வந்த ஒரு பெண்... இவரைப் பாா்த்து...ஏன்? இப்படி.....!!! சும்மாவே  நீ  அழகாக இருக்க  மாட்ட.... இந்த லட்சனத்துல  தாடி மீசை  குடுமியாக்கும்.... .....ஒழுங்கா.முடிவெட்டி தாடி மீசையை எடுக்கிற வழியைப்பாரு என்றது..என்று கடைக்காரர் சொல்லி முடித்து விட்டு அதான் அண்ணனை இங்கே  பார்த்ததும் சிரித்தேன் என்றார்.


போஸ. அண்ணனன். யாருப்பா அது உங்க சொந்தக்கார பொண்ணா என்று என்னிடம் கேட்டதும்.. இல்லண்ணே... அந்தப் பொன்னு. ..பிகேஎம் காலனி இருந்து வருதுண்ணே.. என்றார் கடைக்காரர்..

என்னப்பா...யாருப்பா..அந்தப் பொண்ணு......ஊமை ஊரெ கெடுக்கும் என்பது உண்மையாக... இருக்குமோ.. அதுவும் எங்களுக்கு தெரியாமா??  ..என்று சொல்லிவிட்டு..

கடைக்காரரைப்பார்த்துக் கேட்டார்...அந்தப் பொண்ணு சொன்னதுக்கு இவரு என்ன சொன்னாரு..னு கேட்டார். இவரு ஒன்னுமே  சொல்லாமே..பேந்த  பேந்த  முழித்தார் என்றார்.அவர்.


“ அண்ணே..நீங்க  பாட்டுக்கு கதை. திரைக்கதை வசனம் எல்லாம் எழுததாதீங்கண்ணே... அந்தப் பொண்ணு  யாருன்னே  எனக்கு தெரியாது.ஏன்? அப்படி சொல்லுச்சு....அது யாருன்னு பின்னாடி தெரிஞ்சுக்கலாம்.... இப்ப மணி.உங்களையே பாத்துகிட்டு இருக்காரு.. மணி அண்ணன பத்தி சொல்லுங்க என்றபோது......

பாத்தீயா...ஒரு நல்ல விசயம்  பேசும்போது...“கிழவன தூக்கி மடியில வைன்னு கதையாக.. கதையை திசை திருப்புற பாத்தியா  என்றார்...

அடுத்ததாக சலூன் கடைக்காரர் முடிவெட்ட என்னைக் கூப்பிட்டபோது.

கடைக்காரர்... “அண்ணே...அண்ணே..எனக்கு உங்கள மாதிரி  முடி இல்லேண்ணே... கொஞ்ச நேரரத்தில சேவிங் முடிந்திரும்ண்ணே.... அது வரையும் போஸ. அண்ணன்கிட்ட பேசிக்கிட்டு இருக்கண்ணே என்றுவிட்டு... என் அனுமதி பெறாமலே..போய் சோபாவில் உட்கார்ந்தார்.

போஸ் அண்ணன் மணியின் கதையைச் சொன்னார்..

.மணிக்கு கலியாணம் ஆகி மூன்று குழந்தைகள் இருந்தும்.. புதிதாக குடிவந்த .திருமணமான குழந்தை பேரு இல்லாத ஒரு பொண்ணுக்கும் மணிக்கும் உன்னத  காதலாகி அந்தக் காதல் அய்ந்து வருடமாக  யாருக்கும் தெரியாமல் தொடர்ந்தாகவும்.. கடைசியில் அந்தப் பெண்  இவரை மறந்துவிட்டதாகவும் அந்தக் காதலினால் இப்படி  குடுமி தாடி வளர்த்து  மனநிலை பாதிக்கப்பட்ட கதையைச் சொன்னார்.. 

“ என்னையும் அந்த லிஸ்ட்டிலா சேர்த்துவிட்டீர்கள்  என்று கேட்டபோது.... சே...சே... உன்னப்பத்தி அப்படிச் சொன்னா  என் நாக்கு அழகிப் போகுமப்பாா.... சும்மா ஒரு ஜாலிக்கு கேட்டேன்பா...என்றார் போஸ் அண்ணன்...

சலூன் கடைக்காரரும் பதிலக்கு சொன்னார்.. அப்படி உங்களை கேட்கவில்லை என்றால்  மணி மாதிரியான கதை உங்களுக்கு தெரிய வருமா....? என்றார்...

இப்படி பல கதைகளை போஸ் அண்ணன் சொல்ல... அதைக்கேட்டுக் கொண்டே அன்றைய எனது சிகையலங்காரம்  ஒருவழியாக முடிந்தது...

சசிகுமார் மாதிரி இருக்கேன். கமலகாசன் மாதிரி இருக்கேன் என்று தாடி மீசையுடன் பார்த்தபோது சொன்னவர்கள்...... என்னண்ணே.....என்னண்ணே..... என்று அன்புத் தம்பிமார்கள் கேட்டபோது

நேரமாகிவிட்டது..பசி எடுக்கிறது.. குளித்துவிட்டு ,சாப்பிட்டுவிட்டு வந்து அந்தக் கதையை சொல்கிநேன் என்று விடை பெற்று வந்தேன்...


9 comments :

 1. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பார்வை ஜி...

  ReplyDelete
 2. ஆவதும் பெண்ணாலே ,அழிவதும் பெண்ணாலே என்று சும்மாவா சொன்னார்கள் :)

  ReplyDelete
 3. தைப்பொங்கல் வாழ்த்துகள்!

  சில நேரங்களில்...
  இப்படி...
  அமைந்து விடலாம்...
  எதற்கும் முதலில் சிந்திப்போம்

  ReplyDelete
 4. பார்வைகள் பலவிதம்
  ஒவ்வொன்றும் ஒருவிதம்

  ReplyDelete
 5. பார்வைகள் பலவிதம்.....

  ReplyDelete
 6. ஹஹஹ நல்ல சுவாரசியம்... நல்லாவே உங்களை கூர்ந்து பார்த்திருக்காங்க..கதையையும் ரசித்தோம்....சரி வந்து அந்தக் க்தையை சொல்லுங்க வலிப்போக்கன்..

  ReplyDelete
 7. நல்ல கருத்து க்கு மிக நன்றி

  ReplyDelete
 8. பார்வைகள் பலவிதம்

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com