பக்கங்கள்

Sunday, January 15, 2017

மணி....பைத்தியமான கதை,

உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டு இருந்தவன்  அ்லல மணி. உறக்கம் வந்து உறங்கி விடக்கூடாது என்பதற்க்காகவே புரண்டு புரண்டு படுத்துக் கொண்டு இருந்தான்..கையில் கட்டியிருந்த இரவிலும் மணி பார்க்கும் ரேடியன் கடிகாரத்தில் அவ்வப்போது மணியை பார்த்துக் கொண்டான்.  கடைசியாக அவன் எதிர்பார்த்த நேரம் பணிரெண்டைத் தாண்டியதும்...

தலைக்கு அடியில் இரண்டு கைகளையும் முட்டுக் கொடுத்தபடியே, சற்று தள்ளி படுத்திருந்த தன் மனைவியைப் பார்த்தான். அவளுக்கு அருகில் படுத்திருந்த தனது மூன்று பிள்ளைகளையும் பார்த்தான். அந்த இருட்டிலும் அவர்கள் நன்றாக உறங்கி கொண்டு இருப்பதை கவனித்தான்.

மூன்றாவது பிள்ளை பிறந்ததிலிருந்து. அவன் மனைவி அவனுடன் படுக்கையில் சேர்வதை தவிர்த்துவிட்டாள. பலமுறை அவன் முயன்றும் அவள் அவனை  தன்னுடன் படுக்கையில் ஒட்டவிடுவதில்லை... சண்டையிட்டும், அதட்டிப் பார்த்தும் கெஞ்சி பார்த்தும் தவம் கிடந்தும். அவன் மனைவி அவனுக்கு தேக சுகம் கொடுப்பதை மறுத்தே வந்தாள். இத்தனைக்கும் அவள் குடும்பக கட்டுப்பாடு செய்தும். உடலில் நோக்காடும் இல்லாமால்தான் இருந்தாள்... மூன்று பிள்ளைகுளக்கு பின் என்ன வேண்டி கிடக்கு என்று நாளாடைவில் அவனுக்கு நிரந்தர  தடையும் போட்டுவிட்டாள்...

வேறு யாருடனாவது தொடர்பில் இருப்பாளோ என்று சந்தேகம் கொண்டு, அதை கண்டுபிடிக்க பெரு முயற்சி செய்தும் அவனால் ஒரு துறும்பைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லை. அவனாலும் தன்னை கட்டுபடுத்திக் கொள்ளவும்  முடியவில்லை.. இரகசியமாய்  ஒரு உறுப்படியை தேடிக் கொள்வதற்கு நாயாய் பேயாய் அலைந்து கொண்டு இருந்த நேரத்தில்தான்....


அவன் வீட்டுக்கு எதிர் வீட்டிற்கு குடி வந்தார்கள் செல்ல முத்துவும் அவன் மனைவி முத்துமாரியும்...அவர்கள் வந்த புதிதில் அவர்களை மணி கண்டு கொள்ளாமல் இருந்தான். சில நேரங்களில் தவிர்க்க முடியாமல்  மாரியை கவனித்தபோது அவள் இவனை கண்டு கொள்ளாமல் இருந்தாள். ஒருநாள் மனைவியிடம் பேச்சு வாக்கில் மாரியைப் பற்றி விசாரித்து.மாரிக்கு பிள்ளை இல்லை என்ற விபரம் தெரிந்து கொண்டதும். தன் பார்வையை அவள் மேல் செலுத்தினான்.. முத்துமாரியம்மாள் மணியின் காமம் பார்வையைக் கண்டதும் ஓடி ஒளிந்து கொள்வாள். இவனும்  யோக்கியவான் போல பல மாதங்களாக காய் கனிவதற்க்காக தவம் கிடந்து காத்துக் கிடந்தான்..

அத்து மீறாமல் தவம் கிடந்து காத்து இருந்ததால் அவனுக்கு  கைமேல் பலன் கிடைததது. அவள் அவனுக்கு உயிர்க்கு உயிரான காதலியானாள்.அவன் வுிட்டுக்குச் சென்று அவனின் பிள்ளைகளை தூக்கி வைத்திருக்கும் சாக்கில் அவர்கள் காதல் வளர்ந்தது. அவன் மனைவியின் செயலையும் புரிந்துகொண்டவள் அவனுக்கு தேக சுகம் தரவும் முடிவெடுத்து அவனுக்கு தன் சம்மதத்தை தந்தாள். முதல் நாளில் ஒரு நாள் ..அவனை யாருக்கும் தெரியாமல்  இரவு தன் வீட்டுக்கு வருமாறு அவனுக்கு அழைப்பு விடுத்திருந்தாள்

மணி ஒன்னைக் கடந்தது. மெதுவாக எழுந்தான். கதவின் தாழ்ப்பாழை சத்தம் வராமல்   திறந்தான். பின் திறந்த கதவை சத்தமில்லாமல் சாத்திவிட்டு. தெருவை நோட்டமிட்டபடி வாசலில் கிடந்த செருப்பை காலில் மாட்டியவன் யோசனை வந்தவனாக தன் தலையில் தானே செல்லமாய் தட்டிவிட்டுக் கொண்டு  காலில் மாட்டிய செருப்பை கழட்டி ஒரு மறைவிடத்தில் பாதுகாப்பாக வைத்துவிட்டு செருப்பில்லாமல் தெருவைக் கடந்து பிரதான ரோட்டுக்கு சென்றான்.  

அங்கு வரிசையாக நின்றிருந்த  ட்ரைசைக்கிளில்களில் இழுத்து போர்த்தி படுத்துக் கிடந்தவர்களில் பலரை ஒவ்வொருவராக நோட்டமிட்டான்.. அதில் ஒரு உருவத்தை பார்த்ததும்  சந்தோசம் அடைந்தான். திரும்பவும் தெருவுக்குள் வந்தான்.தன் வீட்டருகில் சற்று நேரம் நின்று சுற்றும் பார்த்தான். மெதுவாக அவன் கால்களிலிருந்து சத்தம் வராத அளவுக்கு எதிர்வீட்டை நோக்கிச் சென்றான்

கதவைத் தொட்டதும்  முன்பே பேசியிருந்த படி..கதவு தானாக திறந்தது. . மணி உள்ளே நுழைந்த மறுகணம் இரு கைகள் அவனை இழுத்து தழுவிக் அணைத்துக் கொண்டது. அங்கேயும் சத்தமில்லாமல  கதவின் தாழ்ப்பாள் போடப்பட்டது.

அவன் அவளை அணைத்தபோது. ஏன் ? இவ்வளவு நேரம் என்று அவள் கேட்டபோது.... அவளின் கனவன்  வெளியில்  படுத்திருப்பதை உறுதிப்படுத்தியபின் வந்தததை சொன்னான்.

சத்தம் எதுவும்  கேட்காமல் இருந்த சிறிது நேரத்திற்குப்பின். முத்தமிடும் சத்தம் கேட்டது... நெடு நாட்களாக தேக சுகம் கிடைக்காமல் தவியாய் தவித்துக் கொண்டு  இருந்த அவர்கள் இருவரும்  பயத்தையும்.கூச்சத்தையும் ஒதுக்கிவிட்டு தேக சுகத்தில் முழ்கினார்கள்...

ரேடியன் கடிகாரத்தில் மணி மணியைப் பார்த்தபோது மணி நான்கை நெருங்கிக் கொண்டு இருந்தது. அவள் காதில் மணி நாலு ஆச்சு என்றான்.

மெல்ல எழுந்தவள். கதவைத் திறந்து வெளியே வந்தாள். வீட்டிற்கு அருகில் சிறுநீர் கழிக்கும் சாக்கில்.நின்று கொண்டு சுற்றும் முற்றும் கவனித்தாள்.  பின் திரும்பி வந்து. அவனுக்கு முத்தங்கள் கொடுத்து கவலைப்படாதே நான் இருக்கிறேன் நாளைக்கும்..வா...என்று சொல்லி விடை கொடுத்தாள்.

திருடனைப் போலவே..சத்தமில்லாமல் தன் வீட்டிற்குள் வந்தவன்  நல்ல பிள்ளையாக அமைதியாக படுத்து கொண்டான்.

இப்படியான இருவர்களின் நடுஇரவு திருட்டுக் காதலானது  மாரியின் கனவன் செல்லமுத்து  பக்கத்து ஊரு நாட்டாமைக்காரரின் பிளாட் போட்ட இடத்துக்கு காவல்காரனாக வேலைக்கு போகும்வரைக்கும் யாருக்கும் தெரியாமால் எவ்வித சிக்கல் இல்லாமல்  நடந்து வந்தது..

செல்ல முத்து. நாட்டாமையின் இடத்துக்கு காவல்காரனாகவும் அவன் மனைவி முத்துமாரி நாட்டாமை வீட்டுக்கு வேலைக்காரியாக போன காலம் முதல்.. மணி காதல் சோகத்தில் ஆழ்ந்தான்.மாரி இவனை விட்டு பிரியமனமில்லாமல் பிரிந்தாள்.. பல நாட்கள். பலமறை மாரியை தனியே சந்திக்க முயன்றும் முடியாததால் தாடிமீசையுடன் பார்ப்பதற்கு அசிங்கம் பிடித்தவனாக காட்சியளித்தான். அவன் மனைவியும் உற்றார் உறவினர் நண்பர்களும் தாடி மீசையை எடுக்கச் சொல்லியும்  எடுக்காமல் அலைந்தான். வேலைக்கு செல்வதையும்  விட்டொழித்தான். .. 

கடைசியில் மாரியின் கனவன் செல்ல முத்து இறந்த பிறகு,தன்னைத் தேடி முத்துமாரி வருவாள் என்று பெரும் நம்பிக்கையுடன் இருந்தான்.. பின்னாளில் அவள்... நாட்டாமையின் தொடுப்பாகவே மாறி விட்டதை மணி  அறிந்ததும். மனம் வெதும்பி   பையத்தியமாக மாறி  ஊர்  ஊராக அலைந்து திரிந்தான். ஒவ்வொறு ஊர் பக்கம் செல்லும்போது இரக்கப்பட்ட சாராயக் குடி மக்கள் கொடுப்பதையும் வாங்கி குடித்துக் கொண்டு சாராயக் கடை மற்றும் டீக் கடைகளிலே   காணப்பட்டு வந்தான்....்்் 
6 comments :

 1. இவர்களின் வாழ்க்கை கண்ணீர் வடிக்க வைத்து விட்டதே நண்பரே

  ReplyDelete
 2. முந்தைய பதிவில் வந்த, மணியின் கதையா இது ? மணியை மனைவியுமா கை விட்டாள் :)

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் தலைவரே.... அவர் மனைவியும் வேறு ஒரு தொடுப்பு வைத்திருந்தாக சொன்னார்.. அது யாரு..எவருன்னு கேட்டதுக்கு ..குறுக்கு கேள்வி கேட்டு என் வாயை அடைத்துவிட்டார் போஸ் அண்ணன்.

   Delete
 3. காமம்
  சிலருக்கு மருந்து
  பலருக்குப் பைத்தியமாக்கும்!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com