பக்கங்கள்

Monday, January 16, 2017

ஜல்லிக்கட்டு தடையை உடைப்பதை காணச் சென்ற கதை,

ஜல்லிக்கட்டு தடையை உடைக்க.. ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு..முன்னமே நடக்கும் போராட்டத்துக்கு போக வழி பிறக்காததால்.... அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுவின் தடையை   தமிழ்மான வீரர்கள் உடைப்பதை காண  செல்ல வேண்டும் என்று முந்தின இரவே முடிவு எடுத்துவிட்டதால்...

வழக்கமாய் எழுவதற்கு முன்னமே அதாவது ஏழு மணி ஆக... அய்நது நிமிட வாக்கில் எழுந்து. சாமி கும்மிட்டு பின்  .பல் துலக்கி முகம் கழுவி  விட்டு தலைக்கு சிறிது எண்ணெயை தடவி சீவி விட்டுக்கொண்டு பஸ் நிறுத்தத்திற்கு வந்தபோது.... அலங்காநல்லூர் மற்றும் அதன் வழியாக போகும் ஒரு பஸ்சும் வரவில்லை....... காவல் வீரர்கள் முன்கூட்டியே நிறுத்தி விட்டுருப்பதாக  படித்த செய்தி பிறகுதான் நிணைவுக்கு வந்தது.

அதன் பின் யோசிக்காமல்..ஆட்டோவில்  ஏறிச் சென்ற போது....சிக்கந்தர் சாவடிக்கும்  பா..சிங்கா புரத்துக்கும் இடையில்  போலீஸ் படை வீரர்கள் தடுத்தனர். டூவிலர் சென்றவர்கள் அனைவரும் வழி மறிக்கப்பட்டு அவர்களின்  ஓட்டுனர் உரிமத்தை காட்டச் சொல்லி...அதில்  அவர்கள் அலங்காநல்லூர் பக்க ஊராக இருந்தால் அனுமதிப்பதும் மதுரை மற்றும் வேறு ஊர்ராக இருந்தால் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பவுதுமாய் இருந்தார்கள்...

இதன் மாதிரியே... ஆட்டோவில் சென்றவர்களை அனுமதிக்க மறுத்துவிட்டார்கள் கடமை வீரர்கள்....பின்னர்  கடமை வீரர்களுடன் அவனியா புரத்தில் மோதிய இயக்குநர் கௌதமன் மாதிரி மோதி கடமை வீரர்களிடம் அடிவாங்க   விரும்பாமல்  வேறு வழியாக சென்று  அலங்காநல்லூருக்கு சற்று தூரத்தில் வாடிப்பட்டி சாலையில் இறக்கி விடப்படடு   அலங்காநல்லூரின் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தை நோக்கி நடை பயிற்சியில நடந்து வந்தேன்...


வரும் வழியில்...நீதிமன்ற உத்தரவை கண்டிப்புடன் அமுல் படுத்தும் கடமை வீரர்கள்......  தூணிலும் துரும்பிலும்மாய் இருப்பதும் அந்த நரசிம்மரே வாயில் விரல் வைக்கும் அளவுக்கு அவர்கள் சந்து பொந்து, இடுக்கு,சொடுக்கு எல்லாம் நிறைந்து இருந்து.. எல்லாம் வல்ல அவன் போட்ட உத்தரவை நிறைவேற்றிக் கொண்டு இருந்தனர்... ..

வாடி வாசலுக்கு அருகில்  முழக்க..சத்தமும் விசில் சத்தமும் கேட்டது... அங்குதான் ஜல்லிக்கட்டு தடையை உடைப்பவர்கள்  குழுமி இருந்தனர்  அவர்கள் முன்கூட்டியே வந்துவிட்டார்கள்.. என்பது தெரிந்தது.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பதுபோல்...அந்த புல்லு இல்லீங்க...இது வேறங்க....முழக்கமிட்டு கூட்டமாய் கூடியிருக்கிற இடத்துக்குச் செல்ல... சாக்கடைபாதை  வழியாக சென்று அடையு.ம் வழி கிடைத்தது அந்த வழியாக சென்று குழுமியிருந்த கூட்டத்தில் நானும் ஒருவனாக நின்று கொண்டு, தமிழ்மான வீரர்கள் தடையை உடைப்பதைக் காண ஆவலோடு காத்திருந்தேன்..


கூட்டத்தின் நடு மத்தியில்  உள்ள கூட்டம் முழக்கம் போட, அதையொட்டி அடுத்த கூட்டத்தினரின் கை தட்டலும் அதனைத் தொடர்ந்து விசில் சத்தமும்
காதை பிளந்தது எனபதைவிட  வின்னைப் பிளந்தது... கூட்டத்தில் தாடி வைத்து மஞ்சள் கலர் சட்டை போட்ட ஒருவர் கூடி நின்ற கூட்டத்தை உட்காரச் சொல்ல...  கூட்டத்தில் நின்றவர்கள்  சாமி கும்பிடுவது போல் உட்கார   சிறிது நேரத்தில் வேறு பக்கத்தில்  முழக்கமும் விசில் சத்தமும் வின்னைப்பிளந்தது..

இந்த நேரத்தில் தொலைக் காட்சியில் அடிக்கடி பார்த்திருந்த  விவசாய சங்கத்தலைவர்   பாண்டியன் என்பவரும் இன்னொருத்தரும் பேச முயல...
வேறு பக்கத்தில்  முழக்கமும் விசில் சத்தத்துடன் கூட்டத்தில் தள்ளும் முள்ளும் ஏற்பட்டது... அந்த களோபரத்தில்... விவசாய் சங்கத் தலைவர் பேசாமல் நகல..திரும்பவும் அந்த மஞ்சை சட்டைக்காரர்..கூட்டத்தினரை ஊட்கார சொல்ல... முன் நின்ற கூட்டம் வேண்டா வெறுப்பாக உட்கார.. மஞ்சை சட்டைக்காரர்  படமெடுத்துக் கொண்டு  இருந்த புதிய தலைமுறை  செய்திஒளி  ஒலி பதிவாளரை எதோ  சொல்ல... ஒளிப்பதிவாளர்க்கு அருகில் இருந்த கூட்டம் அவரைப்பார்த்து  கத்தியது...

வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் கலந்து முழக்கமிட முயன்றபோது... எந்த அரசியலும் வேண்டாம்..எந்த அரசியல் கட்சியும் வேண்டாம் என்று கூட்டத்தை நடத்திக் கொண்டு இருந்தவர்கள் கத்த  கூடியிருந்த கூட்டமும் ஓ......ஓ.....ஆ...ஆ... வென கத்தியது..... இந்த  ஓஓவையும்...ஆ...ஆவையும் எப்படி எடுத்துக் கொளவது என்று தெரியவில்லை.... 


முழக்கமும் கைத்தட்டலும் விசில் சத்தமும் நடைபெற்று இருக்கையில் வீட்டு மாடியில் நின்ற ஒருவர்.... ஏய்...ஏய....மெயின் .. ரோட்டுல.... போலீஸ்காரங்க.. தடியடி நடத்திராங்கே...என்ற தகவலை அறிவித்தார்...

இப்படியாக தடையை உடைக்கும் ..நிகழ்ச்சி களைகட்டி கொண்டு இருக்க கூட்டத்தோடு கோஷமிட்ட எனக்கு தண்ணி தாகம் எடுத்தது.. தண்ணீர் தேடியபோது ஒருவீட்டின் நாலைந்து குடங்களில் தண்ணீரும்.. பல டம்பளர்களும் வைத்திருந்தனர்.. அந்தக் கூட்டத்துக்குள் தண்ணீர் குடித்துவிட்டு  திரும்பவும் தமிழ் உணர்வாளர்கள் தடையை உடைக்க போகும் காட்சியை காண ஆவலாய் இருந்தேன்...

வழக்கமான காட்சிகளாய் இருந்தாலும் நிகழ்ச்சியில் புதிதாய் பெண்களும் முன் வந்து  முழக்கமிட்டார்கள்... கூட்டத்தில் பெரும்பாலனோர்  தங்களின் செல்போனில் படம் பிடிப்பதும்..தங்களை மற்றும் நண்பர்களுடன் செலஃபி எடுப்பதும்மாய் காட்சி அளித்தனர்.. மணி ஒன்னை நெருங்கிக் கொண்டு இருந்தது.... மேற்ச்சொன்ன கா்டசிகளே...நடந்து கொண்டு இருந்தது...தமிழ்மானவீரர்கள் தடையை உடைப்பதாக தெரியவில்லை... நேரங்கழித்து தடையை உடைப்பார்களா  என்றும் தெரியவில்லை... பசியும் எடுத்தது... பசியை அடக்கவும் தாகத்தை போக்கவும் அருந்திய தண்ணீரும் பாட்டுப்பாட என்னை நெருக்கியதால் மதியம் இரண்டு மணி வாக்கில்  தமிழ் மான வீரர்கள் ஜல்லிக் கட்டு தடையை உடைப்பதை பார்க்க முடியாமல் வெளியேறி விட்டேன்...

வீட்டுக்கு வந்தப் பிறகு தடையை உடைத்தார்களா...? என்பது தெரியவில்லை...ஆனால்  நடந்த நிகழ்ச்சியை பார்த்த காட்சியில் இருந்து ஒன்று மட்டும் எனக்கு தெரிந்தது.... அவர்களால் ஜல்லிக்கட்டு தடையை அவர்களாலும், அவர்களின் விசில் அடிச்சான் குஞ்சுகளாலும் உடைக்க முடியாது...  உடைப்பதற்க்கான எந்தவித அஸ்திவாரமும் பலமும் அவர்களிடம் இல்லை .என்பதுதான்.... 

7 comments :

 1. நல்லதாய் திட்டுவது எப்படி என்று ஒரு பதிவு போட்டீர்களானால் மிகவும் உபயோகமாயிருக்கும்.

  ReplyDelete
 2. சற்று நேரம் பொறுத்திருந்து பார்த்திருக்கலாமே நண்பரே

  ReplyDelete
 3. புஸ்வானம் போல் ஆகியதோ...

  ReplyDelete
 4. விரைவில் நல்லதொரு தீர்வு கிடைக்கும்...

  ReplyDelete
 5. i could not understand what u r saying, r u praising or condemning

  ReplyDelete
 6. மாட்டோடு சண்டைபோட்டு வீரம்காட்டும் ஆதரவாளர்களின் விளையாட்டை காணசென்று வலிப்போக்கனார் எழுதியது சுவாரஸ்யம்.

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com