அய்யா.... வணக்கம்....... நான் யாருன்னு தெரியுதுங்களா...அய்யா...?
வணக்கம்...வா...வா.... நல்லா இருக்கியா...???
நான் யாருன்னு சொல்லவே இல்லையே.... அய்யா.........
என் மகனோட... நண்பனய்யா.... உன்னை மறக்க முடியுமா...?
அய்யாவுக்கு நிணவு தப்பல.... நல்லா இருக்கீங்க...மகிழ்ச்சி அய்யா....
நல்லது நீ நல்லா..இருக்கேல்ல........ அவன பாத்தீட்டியா.........
பாத்திட்டேன் அய்யா...அவரையும் வீட்டில் உள்ள அனைவரையும் பாத்திட்டுதான் உங்களை பார்க்க வந்தேன் அய்யா....
உங்க ஊருல.... இப்பவும் ஜல்லிக்கட்டு நடக்கலயே அய்யா.....
ஆமய்யா போன வருசம் நடக்கால.... அதனால வெள்ளாமையும் இல்ல மழையும் இல்ல.... இந்த வருசமும் நடக்கலயா..தமிழ்நாடு.அவ்வளவுதான்.....
அப்படி எல்லாம் ஒன்னும் ஆகாதுங்க அய்யா.... நம்ம நாடு எல்லாம் நிறைந்த தமிழ்நாடு அய்யா....
???........ எப்படி எத வச்சி...அப்படி சொலற அய்யா....
அதாங்கய்யா... உங்க ஊருல ஜல்லிக்கட்ட நடத்தச் சொல்லி போராட்டம் நடக்குது. அந்த ஜல்லிக்கட்ட நடத்தவிடாம தடுக்கிறதுக்கு ஒரு மாட்டுக்கு பத்து போலீஸ் வீதம் காவல் இருக்குது....
ஆமா.... எம் மருமகன் வீட்டுக்குகூட போலீஸ் இதுக்குத்தான் வந்திருக்காங்கே.....
ஜல்லிக்கட்ட தடையை நீக்கி சொல்லி தமிழ்நாட்டின் எல்லா இடங்களிலும் போராட்டம் நடக்குது.....இதுக்கு இடையில எம்ஜியாரு பொறந்து நூறு வருசம் அச்சுன்னு...அந்தாளுக்கு ஊருக்கு ஊரு விழா கொண்டாட்டம நடக்குது..... சசிகலாவுக்கு போட்டியாக... ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவும் களத்துல குதித்து போராடாடுது... எது நடந்தாலும் எங்களுக்கு என்னடான்னு ஒரு கூட்டம் திருவையாறுல....திியாகராசரு பேரச் சொல்லி பாட்டுப்பாடி குதுகாலிக்குது.....அங்க ஒருத்தன் காவிரியல தண்ணி விடமாட்டுறான்.. மேற்கே ஒருத்தன் வர்ர தண்ணிய மறிச்சு புதிதாக அனை கட்டுறான் அய்யா .இப்படி ஒவ்வொன்னா பலதும் நம்ம நாட்டுல நடக்கிறது அய்யா சுருக்கமாக சொல்வதென்றால் பஞ்சமும் பவிசும் எல்லாம் நிறைந்த தமிழ்நாடு அய்யா.....
ஹா.....‘ஹா.....ஹா..... எல்லாம் நிறைந்த...தமிழ்நாடா.....ஹா....ஹா...ஹா..
சரி....சிரிச்சிட்டுகிட்டே யோசிங்க...அய்யா.... அடுத்து வரும்போது ஒரு சம்பவத்த எனக்கு சொல்லுங்க.....நா....வர்ரேன் அய்யா.....
நாம்தானே காரணம்
பதிலளிநீக்குநாம் தேர்ந்தெடுத்து அனுப்யியவர்கள்தானே காரணம்
சரி தான்...
பதிலளிநீக்குஎல்லாம் நிறைந்திருக்கிற தமிழ்நாடு தான். அதனால் தான் மாட்டோடு சண்டை போட்டு வீரம் காட்ட ஜல்லிக்கட்டுக்காக ஒரு போராட்டம்,நாட்டுக்கு சேவை செய்ய களத்தில் சசிகலா- தீபா.
பதிலளிநீக்குவலிப்போக்கரே, வருங்கால இரும்பு பெண்ணாக,ஆளுமை கொண்ட பெண்ணாக யார் வருவார்கள் என்று நம்புகிறீர்கள்? சசிகலாவா, தீபாவா?
தமிழ்நாட்டுக்கு இரண்டு பக்கம் கடல் ,நாலு பக்கம் துயரம் :)
பதிலளிநீக்கு