பக்கங்கள்

Wednesday, January 18, 2017

ஜல்லிக்கட்டு...போராட்டம் வெற்றி பெறுமா...???

என்ன நண்பரே... போராட்டம் வெற்றி பெறுமா...?

எந்தப் போராட்டம் நண்பரே....??

சரியாப்போச்சு.... நீங்க  எந்த ஊருல..இருக்கீங்க...!

அட..நா..எந்த ஊருல இருக்கிறேன் என்பது உங்களுக்கு சந்தேகமாயிடுச்சா.....!!

பின்னே..ஊரே...நாடே..அல்லகோலபட்டுகிட்டு இருப்பது தெரியாமல்  இருந்தால்.. இப்படித்தான்  சந்தேகம்  வரும்,...

சாரி... மன்னிச்சுடுங்க..எதோ  ஒரு ஞாபகத்துல  இருந்துட்டேன்... ஆமா... மொத மொதல்ல  என்ன கேட்டீங்க.....

ஓ...... அதுவா...சுரைக்காயிக்கு உப்பு இருக்கான்னு கேட்டேன்.

என்னது சுரைக்காய்க்கு உப்பு..இருக்கா....!!!

அதான் முன்னாலயே..கேட்டேன்ல... நீங்க  எந்த ஊருல  இருக்கீங்கன்னு.....

நா...ன் எந்த  ஊருல இருக்கிறேன்னு கண்டுபிடிக்கிறது இருக்கட்டும் நண்பரே..... பத்து இலட்சம் பெருமானமுள்ள கோட் அணிந்திருந்த  நபர்... எந்த நாட்டுல  இருக்காருன்னு கண்டுபிடிங்க மொதல்ல.....

அவர  கண்டுபிடிச்சு......

அவர கண்டுபிடிச்சா.... சுரைக்காய்க்கு உப்பு இருக்கா..இல்லையான்னு சட்டு புட்டுன்னு சொல்லியிருவாருல்ல.....

அடேங்கப்பா..... கொம்ப விட்டுபுட்டு..வால  புடிச்ச கதையாவுல இருக்கு....

இப்ப...நாட்டுல..அதுதானே..நடந்தகிட்டு இருக்குது......

என்ன நடந்துகிட்டு....இருக்கு....

ஜல்லிகட்டு போராட்டம்....

வந்திட்டிங்க  வழிக்கு... ஆமா..ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி பெறுமா...?

அத  எப்படி..என் ஊத்த வாயால.... சொல்லுவேன்...

பரவாயில்லை நண்பரே..அந்த ஊத்த வாயாலதான்  ஓட்டு வாங்கிப் போனவர்கள்  பாலாறும் தேனாறும் ஓட வைப்போம் என்று வாக்குரிதி அளித்தார்கள்..

அவர்களின் ஊத்த வாயால்..வாக்கரிசி அளித்ததால்தான்  தேனாறும் பாலாறும் ஓடவில்லை...நண்பரே....

நீங்கள் என்ன வாக்கரிசியா போடப் போகிறீர்கள்..நாட்டு நடப்பைத்தானே சொல்வீர்கள் .... நீங்கள சொல்லி எதுவும் நடக்கப்போவதில்லை...சும்மா சொல்லுங்கள்....ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி பெறுமா....???

நேரிடையாக சொல்லாமல் மறைமுகமாக சொல்லுகிறேன் புரிந்து கொள்ளுங்கள்...அதாவது.. பத்து இலட்சம் விலை மதிப்புள்ள கோட்டு அணிந்தவரு பிரதமார இருக்கும் நாட்டின் இராணுவத்தின் தரைப்படையானது உலகிலேயே பெரிய படையாகும். இந்த தரைப்படையின் எண்ணிக்கை உலகிலயே  மூன்றாவதாக உள்ளது.. இந்த இந்திய தரைப்படை இன்றைய ஆங்கிலேயருடைய படையினரை விட அதிகமாக ஆங்கிலேய மரபை பாதுக்காப்பதாக உள்ளது...அன்றைய ஆங்கில படை போராடும் மக்களை என்ன செய்தது..  இது போக  தமிழ்நாட்டு போலீஸ்படையானது..அது தோன்றிய காலத்திலிருந்தே. ம மனித உரிமை மீறல்கள், நீதித்துறைக்கு அப்பாற்பட்ட கொலைகள், லஞ்ச ஊழல் பரவல், அரசியல்மயமாக்கம் எனபதில் தொடங்கி..இதுவே ஒரு  கட்டப் பஞ்சாயத்து  அதிகார மன்றமாக  பீடு நடை போட்டு வருகிறது..தற்பபோது செத்துப்போன ஒரு புன்னியவதியின் முதல் செல்லப் பிள்ளையாக இருந்தது  தெரியுமா...?  இது எப்படி....?????..... அம்புட்டுத்தான்...


தலையும் இல்லாமா  வாலும் இல்லாம இப்படிச் சொன்னா  நா..... எப்படி புரிந்து கொள்வது....யோசிங்க... புரியும்...   கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீங்க சொன்னிங்களே..கொம்ப விட்டுபுட்டு வாலப் புடுச்ச கதையின்னு அந்தக் கதை மாதிரிதான் நண்பரே.. யோசியுங்கள்  புரியும்  நண்பரே..6 comments :


 1. மற்றவர்கள் என்ன செய்கிறார்கள், என்ன செய்யப் போகிறார்கள் என்பது இருக்கட்டும் நண்பரே
  முதலில் தாங்கள் தங்களின் ஆதரவினைத் தெரிவியுங்கள்
  களமிறங்கி இருக்கும் மாணவர்களுக்கு, குடுபம் குடும்பமாய் போராட்டக் களத்தில் அமர்ந்திருக்கும் தமிழ்க் குடும்பங்களுககுஆதரவு தெரிவியுங்கள், போராட்டம் வெல்லட்டும் வெல்லட்டும் என்று எழுதுங்கள்

  ReplyDelete
 2. புரிகிறது ,ஏவல் துறையால் ஜல்லிக்கட்டு போராட்டம் ஒடுக்கப் பட போகிறது !

  ReplyDelete
 3. ஜல்லிக்கட்டு போராட்டமே ஒரு காமடி விளையாட்டு தான். பீட்சா சாப்பிடுவதையும், ஆங்கிலத் பேசுவதையும் பெருமையாக நம்புகிறவர்கள், தமிழ் கலாச்சாரத்தை காப்பாற்றவாம், மாட்டோடு சண்டை போட்டு வீரத்தை காட்டுவதற்காக போராடுகிறார்களாம்!!!

  ReplyDelete
 4. ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) பற்றிய
  தீர்வு கிட்டும் வரை
  எழுச்சி ஓயப்போவதில்லையாம்...

  காலம் பதில் சொல்லுமே!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com