சனி 28 2017

எழுந்து நின்ற தமிழகமே! எதிர்த்து நில்!!...


ன்பார்ந்த பெரியோர்களே, தாய்மார்களே! வணக்கம்,
தமிழகத்தின் உரிமைகளை நசுக்கும் டெல்லிக்கு எதிராக தமிழகமே எழுந்து நின்றது. பணிந்தது பன்னீர் அரசு. தற்காலிகமாக ஜல்லிக்கட்டில் வென்றோம். வங்கக் கடற்கரையில் சீறி எழுந்த மக்கள் போராட்டம் மத்திய, மாநில அரசுகளை பீதியடைய செய்தது. போலீசின் அதிகாரம் செல்லக் காசானது. காளை போராட்டம் காவிரி, விவசாயிகள் தற்கொலை என விரிவடையக் கூடாது என்ற போலீசின் அச்சம் தான் மாணவர்கள் – மக்கள் மீது நடத்தப்பட்ட கொலை வெறித்தாக்குதலுக்கு காரணம்.
ஆட்டோக்களை கொளுத்தியது. மீன் மார்க்கெட்டை வெண்பாஸ்பரஸ் மூலம் எரித்தது. வாகனங்களை அடித்து நொறுக்கியது. வீடுகளில் புகுந்து பெண்களை ஆபாசமாக பேசி, ஆண்களை அடித்து இழுத்து சென்றது என போலீசாருக்கு எதிரான ஆதாரங்களை நாள்தோறும் மக்கள் அள்ளி வீசுகிறார்கள். இதுவரை எந்த போலீசார் மீதும் விசாரணை நடவடிக்கை இல்லை.
காவல்துறை தலைவர் ராஜேந்திரன், சென்னை கமிஷ்னர் ஜார்ஜ், கோவை கமிஷ்னர் அமல்ராஜ் மற்றும் வன்முறை சம்பவத்திற்கு காரணமான, தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் கோரியுள்ளனர். நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் போலீசோ பொய் மேலும் பொய் என்ற மோடி வித்தையை தமிழகத்தில் செயல்படுத்த முயன்று மூக்கறுபட்டு நிற்கிறது.
மாணவர்கள் போராட்டத்தில் ஊடுருவி விட்டனர் என்று சில அமைப்புகள் பெயர்களை சொல்லி பழிபோடும் போலீசார், ஊடுருவி என்ன செய்தார்கள்? என்பதைச் சொல்ல முடிய வில்லை. ஆனால் ஆர்எஸ்எஸ்., பாஜக, ஏபிவிபி அமைப்பை சேர்ந்த சிலர் ஊடுருவி மாணவர் போராட்டத்தை சீர்குலைக்க முயன்றதாக இணையதளங்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதை பற்றி போலீசார் பேச மறுக்கின்றனர்.
கலவர தினத்தன்று ஆயிரக்கணக்கான மாணவர்கள் மெரினாவில் இருந்தார்கள். ஜல்லிக் கட்டு நடத்த நிறைவேற்றப்பட்ட சட்ட நகலை தாருங்கள், கலைந்து செல்ல இரண்டு மணி நேரம் அவகாசம் வேண்டும் என போலீசு அதிகாரிகளிடம் கேட்டனர். ஏழு நாள் பொறுத்தவர்கள் இரண்டு மணிநேரம் பொறுக்க முடியாதா?
மாலையில் செய்த வேலையை காலையே செய்திருக்கலாமே. ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தமனை முன்பே அழைத்து வந்து பிரச்சினையை சுமூகமாக தீர்த்திருக்க முடியும் அதை விட்டு தடியடி ஏன் நடத்த வேண்டும்? கர்ப்பிணி பெண் வயிற்றில் ஏன் உதைக்க வேண்டும்? உணவு கொடுத்த மீனவர்களை ஏன் குப்பத்தில் புகுந்து தாக்க வேண்டும்? மாணவர்களுக்கு வந்த உணவு பெட்டியை போலீசார் ஏன் பறித்து திண்ண வேண்டும்? எதற்கும் காவல்துறையில் பதில் இல்லை. ஆனால் காக்கியின் உடம்பில் காவி புகுந்துள்ளது போலிசு அதிகாரிகளின் வார்த்தைகளில் வெளிப்படுகிறது.
தீர்ப்புகளால், சட்டங்களால் சாதிக்க முடியாததை மெரினாவில் மாணவர்கள் முன்னின்று நடத்திய மக்கள் போராட்டம் சாதித்தது. தினம்தோறும் விடிய விடிய லட்சக்கணக்கான மக்கள் கூடினர். மாணவர்களே தங்களை ஒழுங்குபடுத்தி கொண்டனர். பெண்கள் பாதுகாப்பாக இருந்தனர். சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது. காரணம் அங்கு போலீசு அதிகாரம் இல்லை. ஒருவார காலம் அதிகார போதையை இழந்தபோலீசார் அதிகாரத்தை மீண்டும் சுவைக்கவும் மக்களை அச்சுறுத்தவும் நடத்தப்பட்ட கலவரம் தான் இது.
குடி போதைக்கு அடிமையானவன் குடிப்பதற்கு எதையும் செய்வான்..6 வயது சிறுமியா..? 60 வயது மூதாட்டியா...? என பார்க்க மாட்டான்.ஒருவார காலம் அதிகார போதையை இழந்தபோலீசார் அதிகாரத்தை மீண்டும் சுவைக்கவும் மக்களை அச்சுறுத்தவும் நடத்தப்பட்ட கலவரம் தான் இது.
பண்பாட்டு அடையாளங்கள், இயற்கை வளங்கள், வாழ்வுரிமைகள், வாழ்வதாரங்கள், தாய் மொழி மீதான தாக்குதல் என அனைத்தையும் எதிர்த்துப் போராடி திகைத்த தமிழகத்தில், அனைவரும் பங்கேற்க நடந்த அமைதிப் போராட்டம், நம்பிக்கையும் மகிழ்ச்சியும் ஏற்படுத்தியது. சாதி மத பேதமின்றி, ஆண் பெண் அனைவரும் ஒற்றுமையாக போரடியதன் பலத்தை பங்கேற்ற அனைவரும் நேரடியாக உணர்ந்தனர். அதை கருக்கும் முயற்சி தான் போலீசாரின் தாக்குதல்.
காவிரி தொடங்கி கல்வி உரிமை வரை தமிழக மக்கள் போராட வேண்டிய பிரச்சினைகள் வரிசைகட்டி நிற்கின்றன.
காளைக்காக திரண்டவர்கள், போலீசு ராஜ்ஜியத்திற்கு எதிராகவும் திரள வேண்டும். போராட்டம் தான் நமக்கு நிரந்த பாதுகாப்பு போலீசு என்றைக்கும் பொது மக்களுக்கு ஆபத்தானது என்பதை மீண்டும் மீண்டும் போலிசே நிருபித்து வருகிறது. உரிமைகளுக்காக தொடரும் உறுதியான மக்கள் போராட்டம், போலீசு ராஜ்ஜியத்தை வீழ்த்தும் !

போலீசு ராஜ்ஜியம்…

எழுந்து நின்ற தமிழகமே ! எதிர்த்து நில் !

ஆர்ப்பாட்டம்

நாள் : 30.01.2017
நேரம் : காலை 10.30  மணி
இடம் : ஜெயம் தியேட்டர் அருகில்,  பழங்காநத்தம், மதுரை.
தொடர்புக்கு --85089 35536.. மக்கள் அதிகாரம் மதுரை மாவட்டம்

காளைக்காக திரண்டவர்கள், போலீசு ராஜ்ஜியத்திற்கு எதிராகவும் திரள வேண்டும். போராட்டம் தான் நமக்கு நிரந்த பாதுகாப்பு போலீசு என்றைக்கும் பொது மக்களுக்கு ஆபத்தானது என்பதை மீண்டும் மீண்டும் போலிசே நிருபித்து வருகிறது.

7 கருத்துகள்:

  1. //காவிரி தொடங்கி கல்வி உரிமை வரை தமிழக மக்கள் போராட வேண்டிய பிரச்சினைகள் வரிசைகட்டி நிற்கின்றன.//

    ஆனால் மாட்டோடு சண்டை போட்டு வீரத்தை காட்டும் ஜாதி பெருமை பண்பாட்டு அடையாளத்துக்கான விளையாட்டு வேண்டும் என்று போராடினார்களாம்!

    பதிலளிநீக்கு
  2. மக்களைக்காக்க வேண்டியவர்களின் செயல் வேதனை அளிக்கிறது

    பதிலளிநீக்கு
  3. அரசுக்கு நடுக்கம் எடுத்து விட்டதால் இவ்வளவு வெறியாட்டமும் !மெரினாவில் 144 தடை உத்தரவாம் !இளைஞர்கள் போராட்டம் என்றும் வெல்லும் :)

    பதிலளிநீக்கு
  4. உண்மை...போலீசின் அராஜகம் கண்டிக்க வேண்டிய விடயம்

    பதிலளிநீக்கு

“மார்ச் 8 உலக மகளிர் தினம்-”

                                                              கிளாரா ஜெட்கின். உண்மையான ஜனநாயகம், சமத்துவம் நோக்கி மனிதகுலத்தை முன்னெடுத்துச...