திங்கள் கிழமை காலை தாமதமாக எழுந்தேன்... மணி பத்து மேல் ஆகிவிட்டது. குளித்து ரெடியாக மணி பதினொன்று ஆகிவிட்டது. சாப்பிட நேரமில்லாதால்... வீட்டிலிருந்து கிளம்பி பஸ் நிறுத்தத்திருற்கு வந்தால் ரெடியாக ஆட்டோ ஒன்று நின்றது.. எப்போதும் ஆட்டோவில் செல்லும் பழக்கமில்லை... இருந்தாலும் அவசரம் கருதி ஆட்டோவில் சென்றேன்..
குறிப்பிட்ட இடத்தில் இறங்கிவிட்டு ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்தை பார்த்தபோது முழக்கமிட்டுக் கொண்டு இருந்தனர்.. ஓரிருவர் பேசி முடித்துவிட்டு பின் இடையில் முழக்கமிட்டுக் கொண்டு இருந்தது தெரிந்து. கூட்டத்தோடு கூட்டமாக நானும் கலந்து கொண்டேன்.
கூட்டம் முடிந்து வீட்டுக்கு வருவதற்க்காக பஸ் நிறுத்த்த்தில் அமர்ந்திருந்தபோது....என்னுடன் பசுமலையில் மேல்நிலைப்பள்ளியில் படித்த நண்பர் என்னை அடையாளம் கண்டு என்னைப்பற்றி நலம் விசாரித்தார்.... அன்று முழுவதும் அவருடன் இருந்துவிட்டு இரவு வீடு வந்து சேர்ந்த பிறகு சாப்பிடுவதையும் மற்ந்து தூங்கிவிட்டேன்....
மறுநாள்.. கணனி என்று ஒன்று உண்டு என்பதையும் நான் பதிவர் என்பதையும் மறந்துவிட்டேன்..... மறுநாள் காலையில் நினைவு வந்து கணனியை திறந்தபோது... அதுவும் எனக்கு போட்டியாக தன்னை மறந்துவிட்டது..... கணனி மருத்துவரை அழைத்து வந்து திரும்பவும் ஓ.எஸ் போட்டப்பிறகுதான் அதற்கு நினைவு வந்தது. எனக்கும் நினைவு வந்தது பதிவு எழுத வேண்டும் என்று........
.நல்லவேளை திடிரென்று வந்த மறதி திடிரென்று மறைந்து விட்டது.. தப்பித்தேன்....
அப்பாடா.....!
பதிலளிநீக்குஇதெல்லாம் எதிர்க்கட்சியின் சதிதான் நண்பரே
பதிலளிநீக்குஆகா
பதிலளிநீக்குபதிவு எழுத மறந்ததைப் பற்றி ஒரு பதிவா
அருமை
என் மடிக்கணணியும் கோமா ஸ்டேஜில் உள்ளது ,நேரம் கிடைக்கவில்லை ,சீக்கிரம் கிளினிக் கொண்டுசெல்ல வேண்டும் :)
பதிலளிநீக்குநல்லவேளை, வலிப்போக்கருக்கு இப்போதாவது மறதி சென்று நினைவு வந்தது.
பதிலளிநீக்குதன்மான வீரர்களின் மாட்டுசண்டை போராட்டத்தையடுத்து அரசு மக்கள் பணிகளை தீவிரமாக ஆரம்பித்துள்ளது.ஜல்லிக்கட்டில் பங்கேற்கவுள்ள காளைகளை பதிவு செய்யும் பணிகள் ஆரம்பம்.
திடிரென்று வந்த மறதி கூடச் சற்றுச் சிந்திக்க வைக்கிறதே!
பதிலளிநீக்குமீண்டும் வந்தது மகிழ்ச்சி.
பதிலளிநீக்குஓபிஎஸ் கோஷ்டியோ, சசிகலா கோஷ்டியோ உங்களை கடத்திட்டு சென்று இருப்பார்களோ என்று பயந்து விட்டேன் :)