பக்கங்கள்

Wednesday, January 03, 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-3

கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனால்... அங்கிருந்து பல கொடுமைகள் குத்தாட்டம் போட்டு வந்துச்சாம் என்பது மாதிரி.. பிரச்சினை வேண்டாம் என்று ஒதுங்கி போனவனை தடுத்து பிரச்சினை பன்னினான் ஒருவன்.. பிரச்சினையைக் கண்டு பயந்தால் நம்மை இவர்கள் தொலைத்து கட்டிவிடுவான்கள் என்று  நிணைத்து இவரும் தயராக இருந்தார்.

அவர் எதிர்த்து தயராக இருப்பது தெரிந்ததும் அடியாள் படை  படிப்படியாக பின் வாங்கியது... அந்தப்படையில் இருந்த ஒருவன்... குடிபோதையில் தாறுமறாக அவரை திட்டி தீர்த்தான்... குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு என்ற அனுபவத்தில் இவர் பேசாமல் இருந்தார். அந்தக் குடிகாரின் வசவுகளை ஒலிப்பதிவு செய்து  குடிகாரனின் உறவினர் ஒருவருக்கு போட்டு காட்டி போலீசில் புகார் செய்யப் போகிறேன் என்றார்.

மறுநாள் காலையில் மாநகராட்சி உதவிப் பொறியாளரை போய் பார்த்தார். குருசாமி என்பவர் தெருப்பாதையை தன் பாதை என்று போட்ட வழக்கின் தீர்ப்புரையைக் கொண்டு.. பணத்தை தயார் செய்துவிட்டேன் என் வீட்டுக்கு பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்க வேண்டும் என்றார். தேவையானவைகளை சாமான்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் நாளை இணைப்பு கொடுத்து விடலாம் என்றார்

அன்று இரவே பாதாள சாக்கடை இணைப்புக்கு தேவையான எல்லா சாமான்களையும் வாங்கி  விட்டார் காலையில் மாநகராட்சி உரிமம் பெற்ற பிளம்பரின் வேலை ஆட்களுடன் வேலை தொடங்கிய போது... அவரின் வீடு மற்றும் இடம் சம்பந்தமாக வழக்கு போட்டு 22வருடமாக நிலுவையில் இருந்து நான்கு மாதங்களுக்கு முன் டிஸ்மிஸ் டிபால் ஆன வழக்கின் வாதி செத்துப்போன அய்யணன் அம்பலத்தின் மகன் ஜெயராமன்.. பாதாளசாக்கடை இணைப்பு வேலையை தடுத்தான்... அவனுக்கு தெரிந்த உறவுக்கார போலீசை கூப்பிட்டு வேலையை தடுத்தான்...ஜெயராமனின் உடன் வந்த போலீசுகாரரின் பெயரை கேட்டு  பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கலாம் என்ற நீதிமன்ற தீர்ப்பை படித்து பார்க்க கொடுத்த போது... நீங்கள் இருவரும் சண்டை போட்டுக் கொள்ளாமல் தடுப்பதற்கே வந்துள்ளேன். நீங்கள் காவல் நிலையத்திற்கு சென்று பிரச்சினையை தீர்த்துக் கொள்ளுங்கள். என்று சொல்லி விட்டு மாயமாய் மறைந்து போய்விட்டார்.

காவல் நிலையத்த்தில் அய்யணன் அம்பலம் மகன் கொடுத்த புகாருக்கு பதில் சொல்லி.. ஜெயராமின் வழக்கு டிஸ்மிஸ் ஆன தீர்ப்புரையை உதவி காவல் ஆய்வாளரிடம் காட்டினார். படித்துப் பார்த்த உதவி காவல் ஆய்வாளர். ஜெயராமனிடம் நீங்கள் மேல் முறையீடு செய்து இருக்கிறீர்களா என்று கேட்டார். ஜெயராமன் ஆமாம் என்றான்.. அதை காட்டுங்கள் என்றார். கையை விரித்தான் ஜெயராமன்....உடனே உதவி காவல் ஆய்வாளர் கை செய்கையால் ஓடிப்போயிரு என்றார். இவரைப் பார்த்து  வேலையை செய்யுங்கள் என்று அனுப்பினார்

வீட்டுக்கு வந்து போய்விட்ட வேலைக்காரர்களை திரும்ப அழைத்து வந்து வேலையை தொடங்கிய போது... குருசாமி, குருசாமி மகன் செல்லமணி, மற்றும் அவன் குடும்பத்தார்கள் அனைவரும் வரிசைகட்டி நின்றார்கள்.

.
குறிப்பு..  சதியின் காரணமான  போன் இணைப்பு வயர் வழக்கம்போல.. துண்டிக்கப்பட்டு..இன்றுதான் இணைப்பு கிடைத்தது... பதிவு தொடரும்

2 comments :

.........