வெள்ளி 05 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-4



பிறந்ததிலிருந்து இன்று வரை அவருக்கு கவலை, துயரம், ஏக்கம், சந்தோசங்களைவிட...மற்றவர்களால் ஏற்படுத்தப்பட்ட, கொடுக்கப்பட்ட இம்சைகள்தான் அதிகம்....எவருடைய உதவி இன்றி அவருக்கு தெரிந்த வழியில் அந்த இம்சைகளை எதிர் கொண்டே வருகிறார் இம்சை கொடுப்பவர்களும் எந்தவித விதிமுறையின்றி, நேர்மையின்றியே தொடர்ந்து இம்சைகள் கொடுத்து வந்தார்கள்..அவரின் தாய் தந்தை காலத்திலிருந்து வாரிசு உரிமைப்படி இம்சைகளும் தொடர்ந்து வருகின்றன.

அவருடைய தாயார் சொல்வார் தெரு நாட்டாமையும் தெருக்கோயிலின் பூசாரியுமான குருசாமியின் அப்பா மூக்கன்  தெரு நாட்டாமையாக இருந்த போது கோயில் விவகாரத்தில் அவரின் தந்தையையும் அவரின் தாயையும் செருப்பால்  சட்சட்டென்று   அடித்துவிடுவானாம்...செல்போன் காலத்தில் வேடிக்கை பார்ப்பதோடு நில்லாமல் படம் பிடிக்கும் கூட்டம் இன்றைக்கு இருப்பது போல்தான் அன்றும் அந்தத் தெருவின் கூட்டமும் வேடிக்கை பார்த்து கண்களால் படம் பிடிப்பார்கள்....அவரின் தாய் தந்தை அடி வாங்கியதொடு ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆட்பட்டு அமைதியாக இருந்து விடுவார்கள்.

ஆனால் இவருடைய காலத்தில்   மூக்கன் மகன் குருசாமியையும்சரி... குருசாமியின் மகன்களான செல்லமணி மற்றும்  செல்லமணியின் தம்பி தம்பிகள் மனைவிமார்கள் படை கட்டி வந்தாலும் அடாவடியாக பொய் புகார் கொடுத்தாலும்  பலவித இம்சைகளை ஒருவர் மாற்றி விடாமல் கொடுத்து வந்தாலும் ஒத்தை ஆளாக இருந்து கடுமையாக போராடி எதிர்த்தே வந்துள்ளார்.

அவருடைய வீடு கூரை வீடாக இருந்த காலத்தில்...அவருடைய வீட்டீன் முன் உள்ள காலி இடத்தை அபகரிக்க முயன்றபோது..தாயும் மகனுமாக எதிர்த்ததினால் அன்று இரவே தன் வைப்பாட்டியும் வடிவேலுவின் மனைவியுமான பெத்தம்மாள் மூலம் தீவைத்து விட்டான் குருசாமி அன்று அந்தத் தெருவில் அரசாங்க வேலை பார்த்து வந்தவர்கள் குருசாமியும் வடிவேலு மட்டும்தான் குருசாமி மின்சார வாரியத்திலும் வடிவேலு போக்குவரத்து துறையிலும் இருந்தவர்கள்...அன்றைய பண பலத்தாலும் ஆள்பலத்தாலும் அவரையும் அவரின் தாயையும் தந்தையின் உடன் பிறந்த இருவரையும் மதுரை மத்திய சிறையில் தள்ளியவன்... இரண்டவது தடவை கூரை வீட்டுக்கு தீ வைத்த போது சுதாகரித்த அவர் அன்றைய காவல் நிலைய அதிகாரியிடம் சண்டையிட்டு அவரிடம் அடி வாங்கியதால் தாயுடன் அவரையும் பொய் வழக்கில் வழக்கு போட்டாலும் பணம் கொடுத்து தப்பிக்க நிணைத்த .குருசாமியுடன் வடிவேலு, பெத்தாம்மாள் அவர்களயும் சேர்த்து மதுரை மத்திய சிறைக்கு தள்ளச் செய்தார்

முதல் தீ வைப்பு சம்பவத்தின் போது.. பாதிக்கப்பட்டபோதும். குருசாமி,பெத்தம்மாள் இவர்களின் சதிராட்ட பணபலத்தால்தான முதன் முதலாக அவரும் அவரின் தாயாரும் சிறைக்கு சென்று வந்து அனுபவம் பெற்றார்கள். முதல் தீ வைப்பு வழக்கு அவருக்கு சாதகமாக இருந்தும் அவருடைய தந்தையின் சகோதாரர்களின் துரோகத்தால் அந்த வழக்கை அன்று அவர் வாபஸ் பெற வேண்டிய நிலை ஏற்ப்பட்டது....

ஆக..குருசாமியின் அப்பா மூக்கன் காலத்திலிருந்தே..அவர்களின் இம்சைகள் ஆலமர விழுதுகள் போல  தொடர்ந்து  வளர்ந்து வந்து கொண்டு இருக்கிறது...... குருசாமியின் குடும்பத்தார்கள் வாயில் வெட்டு குத்து என்று மிரட்டினாலும் வாயில் வடை சுட்டாலும் இவர் பதிலுக்கு வெட்டு குத்து என்ற கோதாவில் இறங்காமல்...சட்டபூர்வ சட்ட போராட்ட முறைகளைகே் கொண்டே தொடர்ச்சியாக தந்து கொண்டிருக்கும் இம்சைகளை சிலவகைகளை முறியடித்தும் பல வகைகளை தடுத்துமாக அணைத்து வகையான இம்சைகளை எதிர்த்து போராடிக் கொண்டே வருகிறார்

...........
அதிலொரு இம்சைதான் அவர் வீட்டுக்கு பாதாள சாக்கடை இணைப்பை கொடுக்க விடாமல் தடுத்தது...

5 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...