பக்கங்கள்

Tuesday, December 26, 2017

மீண்டும் தொடரும் இம்சைகள்-2


காவல் நிலைய புகார்முடிந்தது என்று அவர் இருமாந்து இருந்த நிலையில் மறுநாள் காலையில் குருசாமியும் அவரின் இரண்டாவது மகன் முருகேசனின் மனைவியுமான கண்ணகியும் இரண்டு வேலை ஆட்களுடன் வந்து  கணேசனின் வீட்டுக்கு அருகில் அவர் இடத்துகுள் ஏற்கனவே பதித்திருந்த பாதாள சாக்கடையை  தோண்ட ஆரம்பித்தனர். அந்த தெருப்பாதையை தனது பாதை என்று அவர் மீது வழக்கு போட்டவர்கள். சிமெண்ட்தளம் பாதாள சாக்கடை குழாய் பதிக்க கூடாது என்று தடுத்தவர்கள். மீண்டும் தோண்டுவதைக் கண்டு அதிர்ச்சியானர்..


பாதாள சாக்கடை குழாய் இணைப்பு கொடுக்கிறேன் என்று பல தடவை தோண்டி , இரு சக்கர வாகனத்தில் அவர் செல்ல முடியாதவாறு தெருவையே பள்ளமாக்கி விட்டார்கள்.. அவரிடத்தில் தோண்டுவதோடு அல்லாமல் மேலும் பள்ளமாக்கி விடுவார்களே என்று பயந்தவர்.. அவர்கள் வேலை செய்வதை படம் பிடித்து மாநகராட்சியின் புகார் தளமான வாட்ச் அப்பில் அனுப்பினார். வேலைக்கு வந்தவர்களிடம்  பிரச்சினையின் விவரத்தை சொல்லிய போது வேலைக்கு வந்த ஆட்கள் அடைப்பு மண்ணை மட்டும் எடுக்க வந்ததாக சொன்னார்கள்.  சரி  என்றவர் மாநகராட்சியின் அனுமதி கடிதம் வாங்கியுள்ளீர்களா? என்று கேட்ட போது இதுக்கெல்லாம் வாங்க அவசியமில்லை என்றார்கள்...அவர்களை செல்போனில் படம் பிடிப்பிதைக் கண்டவுடன் அவர்கள் வேலை செய்யாமல் இடத்தை காலி செய்தனர்...


பின் இரண்டு மணி நேரம் கழித்து வந்த வேலையாட்கள்.. ஏயிடம் அனுமதி வாங்கியதாக சொன்னார்கள். மாநகராட்சி ஏ.யிடம் அவர் போனில் விசாரித்தபோது. அடைப்பு மண்ணைத்தான் அள்ளுகிறார்கள் பள்ளமாக்கவில்லை என்று கூறினார். சரி என்று விட்டு  வேலை விசயமாக வெளியே சென்றுவிட்டு மாலை வரும்வரையிலும் குருசாமியின் மருமகள் கண்ணகி மூத்த மகன் செல்லமணி ஆகியோர்தெருவையே மறித்து அடுத்தவர் இடத்தை ஆக்கிரமித்து முறைகேடான  தங்களது பாதாள சாக்கடையை நன்றாக பாதுகாப்பாக அவருடைய இடத்தில் போட்டுக் கொண்டு இருந்தனர்..அவர் எதுவும் பிரச்சினை செய்யாமல் இருப்பதற்கு அடியாள் படையையும் பாதுகாப்பாக நிறுத்தி இருந்தனர்.


தாம் பிரச்சினை செய்தால் அடிதடியாக மாறும் பிரச்சினை வேறு திசைக்கு போகும் என்பதை ஊகித்த அவர்   பொறுமையை கடைபிடித்து பின் வாங்கி  கண்டும் கானாமல் ஒதுங்கிவிட்டார்..


மண்ணை அள்ள வந்த வேலையாட்கள்( முக்காடு போட்டு இருப்பவர் குருசாமி)வன்மத்தால் பள்ளமாக்கப்பட்ட  தெரு

  

4 comments :

 1. இதற்கு முடிவுதான் என்ன ?

  ReplyDelete
 2. இந்தக் கொடுமையை யாரிடம் சொல்லி அழுவது.

  ReplyDelete
 3. அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்

  எனது புத்தாண்டு பதிவு : ஒரு நொடி சிந்திப்போம்...
  http://saamaaniyan.blogspot.fr/2017/12/blog-post.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடவும்

  நன்றியுடன்
  சாமானியன்

  ReplyDelete

” கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்பட்டுவிட்டது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க”.........!!