பாதாள சாக்கடை வேண்டாம் என்று இருந்தவருக்கு மழை வந்து அவரை செவுளில் வந்து அறைந்தது. வீட்டை சுற்றி தண்ணீர் தேங்கி நான்கு நாள் ஆகியும் வற்றாமல் நின்றது. அந்த நேரம் பார்த்து குருசாமி வாடகைக்கு விட்டுள்ள வீட்டின் செப் டாங்கியிலிருந்தும் கழிவு நீர் தேங்கிக் கிடந்த தண்ணீருடன் கலந்து வாசனையை தூண்டியது... தெருப்பாதையை தனது பாதை என்று வழக்கு போட்ட குருசாமியின் மீது..தெருவில் பாதாளசாக்கடை தொட்டியும் சிமெண்ட் தளமும் போடாமல் விட்ட மாநகராட்சி மீதும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் போட்ட வழக்கின் தீர்ப்பும் சாதகமாக வந்தததும்... சரி இத்தோடு பிரச்சினை ஓய்ந்தது இம்சையும் குறைந்து விடும் என்று நிணைத்தார்.இருந்தாலும் ஒரு பக்கத்தில் தம்மைவிட அறிவிலும், ஆள் பலத்திலும் பண பலத்திலும் திட்டும் கெட்ட வாரத்தைகளில் எம்பில் எம்எல் பட்டம் வாங்கியவர்கள் அராஜகத்தில் வேர்டு லெவில் பட்டம் வாங்கியவர்கள் இம்சைகள் கொடுப்பதை அவ்வளவு இலேசில் விட மாட்டார்களே! என்றும் நிணைத்தார்..முயற்சி செய்து பார்ப்போம்.... முடியவில்லை என்றால் பின் வாங்கி விடுவோம் என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லி தன்னையே தேற்றிக் கொண்டார்...
தன்னை தேற்றிக் கொண்டது போலவே நிலைமை வந்தது. ஒருவழியாக பின் வாங்கிவிட்டாலும்..குருசாமியின் மருமகள்கள் மற்றும் குருசாமியின் வைப்பும் பொம்பள நாட்டாமையான காமாயியும் அவரின் மருமகள்கள் செப்பிய திட்டிய வார்த்தைகள்..அந்தத் தெருவைத் தாண்டி சென்றுவிட்டது.
இவற்றை த் தெரிந்த சிபிஎம்மை சேர்ந்த தோழர் இவரைப் பார்த்து ”என்ன.. வலி..... இம்சைகள்“அதிகமாக என்றார்...ஆமாம் என்றுவிட்டு நடந்த விபரத்தை ஆதியில் இருந்து கூறினார். அவரும் இவர் சொல்வதையும் இவர் தப்பித்து ஓட முடியாதபடி ஒவ்வொன்றாய் கேட்டுக் கொண்டே வந்தார்
நான் குடியிறுக்கும் வீடும் காலியிடமும் அய்யணன் அம்பலத்துக்கு சொந்தம் என்றும் , என் தாயாரும் நானும் வாடகை சரியாக செலுத்த வில்லையென்றும் வாடகைக்கு விட்டுள்ள வீடு பழுந்தடைந்துள்ளதென்றும் எங்களை வீட்டைவிட்டு காலி செய்து சொத்தை அவரிடம் ஒப்படைக்க கோரி வழக்கு போட்டார். எனக்கு வீட்டைபற்றியொ.. இடத்தை பற்றியோ எந்தவித ஆவணமும் இல்லாததால் வழக்கு முடிந்து தீர்ப்பு வந்தவுடன் வீட்டை விட்டு துண்டைக்காணோம், துணியக்காணோம் என்றுதான்...இருந்தேன். அந்த முடிவில்தான்...என் தெரு கோயிலின் பூசாரி குருசாமியும் அவரின் வைப்பு மற்றும்அவரது உறவினர்கள் வழக்கு நடக்கும் இடத்தை ஆக்கிரமித்து வீட்டைக் கட்டியபோது எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்தேன்...
ஆனால் அய்யணன் அம்பலம் போட்ட வழக்கு தள்ளுபடியானதால்... பின்புதான் எனக்கு ஓரளவு சிவில் விபரங்கள் தெரிய ஆரம்பித்தன.அதிலிருந்துதான் நான் குடியிறுக்கும் வீட்டிற்கான போராட்டமும் அதைத் தொடர்ந்த இம்சைகளின் தொந்தரவும் வரத் தொடங்கின்....வெளியில் வாடகைக்கு இருந்த தொழிலை வீட்டுக்கு மாற்றி அதை சாக்காக வைத்து கூரை வீட்டை ஓடு வீடாக மாற்றி ...போஸ் தோழர் தோழர் மூலம் மின்சார இணைப்பு..பெற்று தொழிலை இரவும் பகலுமாக செய்து வந்த போதுதான் அய்யணன் அம்பலம் உரிமையில் கோரட்டில் வழக்கு போட்டார் அந்த வழக்கு 22வருடமாக நடந்தது. அந்த வழக்கின் போது வழக்கு போட்ட அய்யணன் அம்பலம் செத்து அந்தாளோட மூத்த மகன் செத்து, வழக்கு நடத்திய வக்கிலும் செத்து ரெண்டு வருடத்துக்கு முன் என் தாயாரும் செத்து..கடைசியாக போன மார்ச் மாதத்திலதான் அய்யணன் அம்பலத்தின் ரெண்டாவது மகன் ஜெயராமன் வருகையின்மைக்காக டிஸ்மிஸ் பார் டிபால் ஆகிவிட்டது....
இதற்கிடையில் நான்..2010ல தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமா அய்யணன் அம்பலம் பெயரில் உள்ள வீட்டு ரசீதை என் தந்தை நாகன் பெயருக்கு மாற்றினேன்..அதிலிருந்து ஒவ்வொரு விடயமாக தகவல் அறியும் சட்டத்தின் மூலமாகவே நான் குடியிறுக்கும் வீட்டின் இடத்தின் ஆவணங்களை சேகரிக்க தொடங்கினேன்...எவ்வளவுக்கு எவ்வளவு ஆவணங்களை சேகரிக்க தொடங்கினேனோ.... அவ்வளவுக்கு மேலேயே இம்சைகளை அனுபவித்தேன்.. நீங்க சொல்வது மாதிரி..என்னைய மாதிரி எவனும் இவ்வளவு இம்சைகளை அனுபவித்திருக்க மாட்டான் என்பதும் ..அதே போல என்னையைப் போல தியாகியும் எவரும் இல்ல என்று சொல்வது உண்மைதான்......
குருசாமிக்கோ...மற்றும் அவர்களை சேர்ந்தவர்களுக்கோ..என் தந்தையின் உடன் பிறந்தார்களுக்கோ..நான் எந்த ஆவணமில்லாமல் இவ்வளவு வேலைகளையும் செய்வதாக நிணைத்துதான் எனக்கு மீண்டும் மீண்டும் தொடர்ந்து இம்சைகள் கொடுத்து வருகிறார்கள்.....
வீட்டு வரி ரசீதும் அவ்வளவு சீக்கிரத்தில் அவர்கள் மாற்றித் தரவில்லை. மாநகராட்சி அலுவலகத்தில் ஜெயராமனின் உறவினர்களான மூவேந்தர் முன்னேற்ற கட்சியினர் மூலம் பல தடைகள் கொடுத்தார்கள்...அன்று மாநகராட்சி உதவி ஆணையாளராக ... இப்போது மாவட்ட வருவாய் அலுவலராக இருக்கும் குணாளன் என்பவர் 8ன்கீழ் விதியைக் காட்டி முறைகேடாக என் தந்தை பெயரில் இருந்த வீட்டுவரியை அய்யணன் அம்பலத்துக்கு மாற்றியதை மறைத்தார். என் தந்தை பெயருக்கு மாற்றி தருவதையும் நான் கேட்ட தகவலையும் தர மறுத்தார்..
நானும் விடாப்பிடியாக பல பத்து தடவைக்கு மேல் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை வெவ்வேறு வழிகளில் பயன்படுத்தியால் பல உதவி ஆணையர்கள் கடந்து கடைசியா உதவி ஆணையாளராக இருந்த ரவிந்தர் என்பவரும் என் வீட்டுவழியாக சென்று பிள்ளைமார் சங்க பள்ளிகூடத்தில் படித்து ஏ ஓ வாக பணியாற்றிய மாரியப்பன் என்பவரும்தான் எனது மனுவின் உண்மை நிலையை அறிந்து நேர்மையாக முறைகேடாக மாற்றப்பட்டுள்ளதை எனக்கு தெரிவித்து நான் குடியிறுக்கும் வீட்டின் வரியை என்தந்தை நாகன் பெயருக்கு மைம்மாறு எதுவும் எதிர்பார்க்காமல் என்னை அலைக்கழிக்காமல் நேர்மையுடன் சட்டவிதிகளின் படி மாற்றி தந்தார்கள்...
ஏன் தான் இந்தியாவில் இப்படி கொடுமை (:
பதிலளிநீக்குஉலகில் எங்காவது ஒரு இடத்தில் சில நல்ல உள்ளங்கள் வாழத்தான் செய்கின்றன...
பதிலளிநீக்கு