வியாழன் 11 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-6

ஆதிக்க சாதிகளின் இம்சைக்கு குறைந்தது இல்லை. சொந்த சாதிகளின் இம்சைகள்..  அதனால்தான்....எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து எதற்கும் சாதியை பயன்படுத்துவதுமில்லை..யாராவது கேட்டாலும் சாதியை சொல்லுவதுமில்லை.....

சரி..அந்தக் கதை இருக்கட்டும்.... நடந்த சமபவத்தை கேளுங்க.....பூசாரி குருசாமி தெரு பாதையை தனது இடம் என்று சொல்லி வழக்கு போட்டது உங்களுக்கு.. அந்தாளு..வழக்கு விசாரணைக்கு வராமல் போனதால் எனக்கு எக்ஸ்பார்ட்டியாச்சு... அந்த தீர்ப்புகளை கொண்டு போயி என் வீட்டுக்கு சாக்கடை இணைப்பு கொடுங்கடான்னு கேட்டுப்போனா..இந்த தீர்ப்ப வச்சு இன்னொரு தீர்ப்பு அதாவது உத்தரவு வாங்கி வரச் சொன்னாங்கே....2013ல் வழக்கு போட்டு ரெண்டு மாதத்திற்கு முன்புதான் எனக்கு சாதகமாக ஆச்சு..அந்த தீர்ப்ப கொண்டு வந்து தர்ரேன் படிச்சு பாருங்க...

அந்தத் தீர்ப்ப காட்டி  மாநகராட்சி உதவி பொறியாளரை ப் பார்த்தா...அவரு லைசென்ஸ் பிளம்பர வச்சு நீங்க போடுங்க..என்றார்..பிளம்பர பாத்து  எவ்வள ஆகுமுன்னு கேட்டா  அம்பதாயிரம் ஆகுமுன்னு சொன்னான்...டேய்  அய்யா..வக்கீல்  பீசே அவ்வளவு கொடுக்கலைடான்னு கேட்டா... அண்ணே..சாமான் வேலைக் கூலி எல்லாம் சேத்து அவ்வளவு ஆனும்னுண்ணேன்னுங்கே.....

திரும்ப உதவி பொறியாளரை பார்த்து, என்ன சார்.. அம்பதாயிரம் கேட்குறாங்க சார் என்ற போது  அவ்வளவு ஆகாதே...! என்றார்...ரெண்டு மாசம் கழித்து ஒரு நண்பர்   மூலமா....குறைந்த செலவில் பொருட்கள் பைப்பு எல்லாம் வாங்கி வேலையை ஆரம்பிக்கும் போது... குருசாமி வீட்டாள்கள் வந்து வேலை செய்பவர்களை தடுத்து சண்டையிட்டதோடு...பயங்கரமான வசவுகள்.... அந்த வசவுகளை பொறுக்கமாட்டாமல் வேலை யாட்கள் வேலையை  நிறுத்த...குருசாமி ஆட்கள் 100க்கு போன் பன்ன வந்தவர்கள்.... குருசாமியிடம் கையூட்டு பெற்று வேலை செய்யக்கூடாதுன்னு ... என்ன மிரட்ட வந்த போலீஸ்காரனிடம்  தீர்ப்பு ஆணையை காட்டி   காவல் நிலையத்தில்  அனுமதி பெற்றுதான் வேலை செய்கிறேன் என்றபோது... என்னிடம் அவர்கள் சொல்லவில்லை நீங்கள் வேலையை தொடராதிங்கள்... என்று விட்டு தன் பெயரைக்கூட சொல்லாமல் மறைந்துவிட்டான்...மீண்டும்   வேலையை தொடங்க  நான்கடப்பாறையை தொட்டதுதான் தாமதம்... என் சித்தப்பன் மனைவி, அவனின் மருமகள் மகன்கள் ஒரு கூட்டமும்..குருசாமியின் கூட்டமும்  சேர்ந்து ஒரே வசவு மழைதான்...அந்த வசவு மழைதான் உங்க வீடு தெருவு...வரைக்கும் ஒலித்தது.

அன்று இரவு ஏழு மணிக்கு காவல் நிலையம் சென்ற போது... தெரு விலுள்ள ஒரு பொம்பள பாக்கி இல்லாம வந்துட்டாங்க....ரெண்டு மணி நேரம் காத்திருந்து நான் கேட்டபோது..பைபாஸ் ரோட்டில் இருக்கும் போக்குவரத்து மண்டல அலுவலகத்தில்  வேலை நிறுத்த போராட்டம் அங்கு சென்றுவிட்டார்கள்... வருவது சந்தேகம்தான் என்றார் ஏட்டையா.....  அதோடு தொடர்ச்சியாக வேலை நிறுத்தமும் போராட்டமும் தொடங்கியதால் நானும் காவல் நிலையம் செல்லவில்லை.....

எனக்கு என்ன அந்த தெருவில குடியிருக்க  ஆசையா..... வேறு போக்கிடம் இல்லை என்பதால் இவ்வளவு போராட்டம்....மெயின் ரோட்டுல பல வீடுகள் விலைக்கு வருது... குறைந்தது ஐம்பது லட்சம்.... அந்த ஐம்பது லட்சத்துக்கு எங்கே போவேன்.... நீங்க விளையாட்டுக்கு சொல்ற மாதிரி எல்லாம் ரூபாய அச்சடிக்க முடியாது.... வேலை செய்த கூலியையே  இழுத்தடிச்சு கொடுக்குற நிலையில  நான் எப்படி?

நீங்கள் சொல்வதும் ஒரு காரணமாக இருக்கலாம்...அடுத்த வேளைக்கு கஞ்சி இல்லாதவன் ஒரு தொழில தொடங்கி அக்கா பிள்ளைகள வளர்த்து..மூனு டூவிலர் வைத்து  தலை வணங்காமல் வளர்ந்து வருவதுதான்.....கஞ்சிக்கு இல்லாமல் கஷ்டப்பட்டபோதும்... நான் எங்க தெருக்காரர்களிடமோ...என் உறவக்கார்களிடேமோ  கஞ்சிக்கு போய் நின்றதில்லை என்பது உங்களுக்கே தெரியும்....

என் தாய் இறந்த போது என் தாய் வழி உறவினர்களை தவிர..மற்ற யாரும் வரவில்லை.. நானும் அவர்களுக்கு சொல்லவும் இல்லை.... நண்பர்கள் தோழர்கள் சூழு என் தாயாரை நல்லடக்கம் செய்தேன்...என்பதான் உங்களுக்கு தெரியுமே...........நாலு குடும்பமாக இருந்தவர்கள்  இன்று நாற்பது கூட்டமாக பல்கி பெருகி இருந்தாலும்..அநியாயமா வெல்லும்..

குருசாமிக்கும் அந்தாளின் கூட்டத்துக்கும் ஆயிரம் வழி இருந்தாலும் எனக்கு ஒரு வழி இல்லாமலா போய்விடும் அந்த  நேர்வழியை தேடும் போது அ...ந்த வழி என்னைக் கண்டு ஓடியா ஒழிந்துவிடும் ......!!!!!!!!!!!!!!!

2 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...