வெள்ளி 16 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-11

ஊரோடு ஒத்துபோ....தெருவோடு ஒத்துப்போ.... விட்டுகொடுத்தால் கெட்டுப் போவதில்லை ....போகும் போது என்னத்த கொண்டு போகப்போற.. என்று தெரிந்தோ...தெரியாமலோ... குள்ளநரிகளுக்கும்  குள்ளநரிகளின் பக்கிகளுக்கு   ஆதரவாக எனக்கு அறிவு உரை செப்பிய நல்ல உள்ளங்களுக்கு...... இந்த பதிவு



எனது அனுபவத்தில் கைத் தொழில்களில் சில சுளுவானவை, பல கஷ்டமானவை....எனது தாயாரின் பொருளாதாரத்தில் உயர்ந்த படிப்பு படிக்க முடியாமல் போனது எனது துரதிஸ்டம்தான். அரசு வேலைக்கு ஆசை படுவது என்பது எட்டாக் கனியாக இருந்த போதிலும் அதற்க்கான முயற்சி  செய்தும் முடியாமல் போனது எனது அதிர்ஷ்டம்....

நான் பத்தாவது படித்துக் கொண்டிருந்தற்கு முன்பே எனது கைகளும் விரல்களும் வேலை செய்வதற்ரிகுய கருவியாக விளங்கி விட்டாலும் எனது 50 வயதிற்குக்பின்தான் எனது சிந்தனையும் ஒரு கருவியாக பயன்பாட்டுக்கு வந்தன.

 சில சமயங்களில் நான் செய்யும் வேலைகளில் நுணுக்கமான வேலைகள் செய்வதற்கு எனது கைகளும் விரல்களும் திறனற்று இருப்பது போலவே எனது மூளையும் நுணுக்கமான சிந்தனை செய்வதற்கு சக்தியற்று இருந்திருக்கிறது... இது என்தாய் தந்தையின் கொடி வழியாக வந்ததா என்பது தெரியவில்லை.

அதற்கு ஒரு உதாரணமாக சொல்வதென்றால்...எனது வீட்டிற்கு பாதாள சாக்கடை இணைப்பு கொடுப்பதற்க்காக  பத்து பதினைந்தாயிரத்துக்கு மேல் செலவு செய்து உயர்நீதிமன்ற உத்தரவு பெற்றும்..ஆங்கில வழி தீர்ப்பினால் என்னவென்று முழுமையாக தெரியாமல்...பல வாக்கியங்கள் புரியாமல்..காவல் நிலையத்தில் பேசவும் முடியாமல்... அதுகள் சொல்வதும் புரியாமல் என் மீது வழக்கு போட்ட என்தெருவில் வசிக்கும் இரண்டு கால் குள்ள நரிகளின் தந்திரங்கள் தெரியாமல் குள்ள நரிகளுக்கு ஆதரவாக  பெண் உருவில் வரும் பக்கிகள் தகிடுதத்தங்களுக்கு பயந்து பின் வாங்கியுள்ளேன்.. என் தாய் மொழியில் நீதிமன்ற உத்தரவு இல்லாததும் ஒரு இம்சைதானே...

பெண் உருவில் இருக்கும் என் தெரு பக்களின் தகிடுதத்தங்கள்..இதுதான். கூட்டமாக வந்து என்னுடன் சண்டையிடுவது... நான் திருமணம் முடிக்காமல்
இருப்பதை பற்றி வசவு மொழிகளில் திட்டுவது..பின் கூட்டத்தில் ஒருவர் ..நான் கையை பிடித்து இழுத்தாக பொய்புகார் செய்வது... இது பழைய கதை பின்னால் இதை பதிவிடுகிறேன்.

இப்படியான வழிகளில் என்னை முடக்கும் குள்ள நரிகளை ,பொய்ப்புகார் கொடுக்கும் பக்கிகளை எதிர்க்க நுணுக்கமான சிந்தனையும் பலமும எனக்கு இல்லாததும் ஒரு இம்சைதான்...

என் உடல் உழைப்பு மாதிரியேதான் எனது சிந்தனையும் வளரந்திருக்கிறது. செக்கு மாடு போல என்று எடுத்துக் கொளளலாம். முப்பது வருடங்களாக செய்து வந்த வேலையிலிருந்து விலகி..திடிரென்று வேறு வேலை செய்ய முற்ப்பட்டால் தோன்றும் இம்சையைப் போல்தான்..வீடு  இடம், வழக்கு என்று அந்த வேலையை செய்யும் போது பல வகைப்பட்ட இம்சைகள் புதுசு புதுசாக முளைத்து வருகின்றன.... பழைய இம்சைகளுடன் புதிய இம்சைகளும் கை கோர்த்து வலம்    வருகின்றன...

வரும் இம்சைகள் எனக்கு இருக்கும் பலத்தை விட, எனக்கிருக்கும் அறிவைவிட ..அதிக பலத்துடன் இருக்கின்றன. பல வகைகளில்  தொடர்ந்து இம்சைகளை தருவதால்தான்  மீண்டும் தொடரும் இம்சைகள் என்று தலைப்பிட்டு எழுதி வருகிறேன். கேடு கெட்ட இந்த சமூகத்தில்  நான்

முதன் முதலில் என் வாழ்வுக்காக கைத் தொழிலில் செய்த போது ஏற்ப்பட்ட இம்சைகளை எதிர்க்கொண்டு  வந்தது போலவே....குள்ள நரிகளின். பக்கிகளின் இம்சைகளால் ஐய்யாயிரம்  தடவை தோற்றாலும்  ..என் சிந்தனை நிற்பதற்குள் ஒரு தடவையாவது ஜெயிப்பேன் என்பதை நானறிவேன்...

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

5 கருத்துகள்:

  1. வாழ்வில் எல்லாம் கடந்தே தீரவேண்டும் நண்பரே...

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்,

    www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

    உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

    நன்றி..
    தமிழ்US

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...