ஞாயிறு 25 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-12

 என்ன வலி  ஆளையே காணோம்....என்னாச்சு என்றார் நண்பர்.....

உள்ளே போயிட்டு இப்பத்தான் வெளியே வருகிறேன் நண்பரே.. என்றபோது... இன்னும் அந்த பிரச்சினை தீரவில்லையா என்றார்
“ என்ன பிரச்சினை  என்று நான் அவரை திருப்பிக்கேட்டேன்...

அதுதானாப்பா  உன் வீட்டுக்கு பாதாளசாக்கடை இணைப்பு கொடுக்க விடாமல் தடுக்கும் செல்ல மணியும் அவன் அப்பன் குருசாமியும் பிரச்னைதானே...

“அந்தப்பிரச்சினையை பற்றிதான் மாநகராட்சி ஆணையருக்கு  புகார் கொடுத்ததால் அவர்கள் சர்வேயரை கொண்டு அளந்து முடிவு எடுப்பதாக சொல்லி விட்டார்கள் என்றேன்...

அப்புறம் எந்த பிரச்சினைக்கு  மாமியார் வீட்டுக்கு போயிட்டு வந்தே என்றார்

“எனக்கு மாமியாவே இல்லையே , நான் எந்த மாமியா வீட்டுக்கு போவேன் என்றபோது....என்னை கூர்ந்து பார்த்த நண்பர்...அப்பா என்னை சோதிக்காத.. என்ன விபரமுன்னு சொல்லு” என்றார்..

சனிக்கிழமை காலையில் சன் டீவி பாத்தீங்களா? என்று கேட்டபோது, ஆமா..எனக்கு அது ஒன்னுதான் குறைச்சல் என்றார்..

பொது பிரச்சினைக்காக   போராட்டம் செய்ததால் கைது செய்து, சிறையில் அடைக்கப்பட்டு மூன்று நாட்களுக்கு பின் கன்டிசன் பினையில் விடுவிக்கப்பட்டு, காலையில் காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு , வீட்டுக்க வந்தவுடன் வேலையில் முழ்கிவிட்டதனால்  தாங்களால்  என்னை பார்க்க முடியவில்லை என்றேன்...

எந்த பிரச்சினைக்கு என்றபோது...காவிரி வழக்கில்  தமிழகத்திற்கு உச்ச நீதி மன்றம் செய்த வஞ்சகத்தை எதிர்த்து என்றபோது....

ஆமாமா... நியூஸ் பேப்பரில் படித்தேன் மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த  24 பேர் கைது என்று... அது நீங்கதானா..என்றார்...  ஆமாம் என்றபோது...

எங்கே போனாலும் உன்னை இம்சைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்குதே...! என்று ஆச்சரியப்பட்டவர்.....எப்படியப்பா..இவ்வளவு இம்சைகளை தாங்கிக்கிற என்று கேட்டார்......


கடைசியாக  ...” வாழ்க்கையே போராட்டம்தான்...”   என்றுரைத்துவிட்டு அவரிடம் விடை பெற்றேன்...

3 கருத்துகள்:

  1. வாழ்க்கையில் போராட்டம் இருக்கலாம் சரியே. ஆனால் போராடுவதே வாழ்க்கையாகிப் போனதுதான்!

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான் நண்பரே
    வாழ்வு என்றாலே போராட்டம்தான்

    பதிலளிநீக்கு
  3. வாழ்வு முழுவதும் இம்சைகள் தொடரத்தான் செய்யுமோ...

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...