சனி 17 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-16






 அண்ணே..நீங்க...ஏண்ணே....கலியாணமே..பன்னிக்கல......

“அது  பெரிய கதையடா...”

“ பெரிய கதையா... பராவாயில்லைண்ணே.... விட்டு விட்டு சொல்லுங்கண்ணே...”

“நான் ஏன்? கலியாணம் முடிக்கலைன்னு.. கண்டிப்பா... நீங்க தெரிஞ்சுருகனுமா...?? ”

“பழகிட்டோம்..தெரிஞ்கிட்டா....நாள பின்னக்கி..” உதவுமில்லண்ணே...”

“ ஒனக்குதான் ரெண்டு, மூணு இருக்கே..! பின்னே எதுக்கு என் கதைய கேட்குற..”


“அய்யோ..அவன  விடுப்பா....கேட்கத்தெரியாம கேட்குறான்...நா..தெரிஞ்சுக்றேன்... எனக்கு சொல்லு,  ”

நீங்க தெரிஞ்சு என்ன செய்யப் போறீங்க..”

என்கிட்டேயே...ஒன்னப் பத்தி தப்பா பேசுகிறவன்கிட்டயிம்.. பேசுகிறவ கிட்ட எதித்து பேசுவேன்ல....”

”நீங்கசொன்னா...நம்பவா போறாங்க.....”

“நம்புறாங்களோ... நம்பலயோ....நாங்க  உண்மையை சொல்வோம்ல...”

“ ஏண்ணே... காதல் தொல்வியாண்ணே....”..

டேய்...காதல்  தோல்விண்ணா......அண்ணே..நம்கிட்ட  பேசிகிட்டு..இருப்பாராடா...”

“ நீ எத வச்சுடா..அண்ணன காதல் தோல்வின்னு சொல்ற...”

“ அண்ணே..தாடியும் மயிறுமா... காட்சி யளிக்கிறத பாத்துதான்  ”

“ அண்ணன் தாடி வச்சயிருக்கிறது காதல் தோல்வி இல்லடப்பா....”அது வேற இரகசியம்டப்பா...”


“ அந்த ரகசியம் என்னவோ்்்?ஃ

“அத அண்ணனிடமே ...கேளுங்கடா....”

“ இந்தா...அய்யா.... நீங்களா..எதையாவது நிணச்சு  தெருக்காரங்கே..இம்சை சொடுக்கிற மாதிரி.... நீங்களும் எனக்கு இம்சை கொடுக்காதீங்கப்பா...” நான் தாடி வச்சுயிருக்கிறதுக்கு காதல் தோல்வியும் இல்ல..கீதல் தோல்வியும்...இல்ல.... மாநகராட்சி கொழாயில... நாலு நாளய்க்கு ஒரு தடவைதான் தண்ணி விடுறான்...அதனால டெய்லி குளிக்க முடியல.... எங்காவது அவுட்டருல போகும்போது தண்ணிய கண்டா குளிப்போம்ல...., அப்படி கண்ட தண்ணியில  குளிக்கும்போது சலதோசம் பிடிக்காம இருக்கிறதுக்குதாண்ய்யா..நா....தாடி வச்சுருக்கேன்... வேறு ஒரு இரகசியம் இல்ல அய்யா...”

“ நிஜமாகவா..அண்ணே.....”

“ ஏ...சத்தியம் அடிச்சு சொன்னாதான்  நம்புவிய்யா...”

“டேய்  தாடி வச்சா..சேவிங் பன்ற வேல மிச்சமிடா.....”

“ அதோட காசும் மிச்சடா...”

“ அண்ணனுக்குத்தான் எந்த செலவும் கிடையாதே...”


“பீடி, சிகரெட், காபி, டீ, எதுவும் சாப்பிடுவது கிடையாது...

” என்ன வலி... அவ்வளவு  கஞ்சனா..நீ...?

என்னண்ணே.... நான் டீ குடிக்காலாட்டியும் உங்களுக்கு வாங்கித்தரலையா..? மற்றவர்களுக்கு நா... எதுவும் வாங்கித்தரலியா....?ஃஃ” சொல்லுங்க.....”

“ சே..சே..... சும்மா. ஒன்னய சொல்லி இவன.லந்து செய்தேன்...”

“ யாரு இவனா.... போண்ணே...போ... நல்ல கதைய கெடுத்த போ....” வயித்த வலிய போக்குவதற்கு  ஒருத்தி கிட்டே ஆயிர ரூபா கொடுத்து ஏமாந்திருக்காண்ணே....”

” அட....அப்பேர்பட்ட வள்ளலாடா.... வயித்த வலிக்கு ஆஸ்பத்திரிக்கு போகாம.. ஏன்டா..அவட்ட கொடுத்து ஏமாந்த.....”

“ அது பெரிய கதண்ணே....”

சரி....அவனோட வயித்த வலி கதைய..கேட்கவா... இவரோட கலியாணம் முடிக்காத கதைய கேட்கவா...?.... 

“அண்ணேனுக்கு..இவனோட கத தெரியும்.....”

“ எப்படிடா...”
நாங்கதான் சொன்னோம்... அண்ணன் கதையாகவே..பிளாக்கருல எழுதிட்டாரு..”....

“என்ன..”

“ ஆமண்ணே.... வயித்த வலி தீர மருத்துவம் சொன்ன மருத்துவர் அல்லாத பெண்” என்ற தலைப்புல” இவரு ஆயிரம் ரூபா கொடுத்து ஏமாந்த கதய  எமுதியிருந்தண்ணே....”

“ ஆ...அப்படியா... பத்தியா.... ஓங்கதைய சொல்லாம.... அடுத்தவன் கதைய சொலல்லுறியே அண்ணே.......”

“எங்க ஓடிடப்போறேன்.... நாளப்பின்ன சொல்றேன்...”

“ ஆமா..அப்படித்தான் சொல்லுவீங்க... ஒரு வாரம் கழிச்சு  பார்க்றகுப்போ...கேட்டா வேலை அதிகம் அதனால வர முடியல...என்பிங்க...”

வேல இல்வேன்னா  வரமலா போறேன்... சொல்லுங்க..... இப்ப வந்து இவ்வளவு நேரமா..உங்ககிட்ட பேசல...... நீங்கதான் என்னக் கண்டவுடன்  ஆளுக்கு ஒரு திசை பக்கமா  ஓடுறிங்க......”  என் கதைய அடுத்து சொல்றேன்... வயித்து வலி தீர..அயிரம் ரூபா  கொடுத்து ஏமாந்த.கதைய. அண்ணனக்கு சொல்லங்கப்பா..சொல்லங்க....


....!!!!!!........???????.......,?ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ










2 கருத்துகள்:

“மார்ச் 8 உலக மகளிர் தினம்-”

                                                              கிளாரா ஜெட்கின். உண்மையான ஜனநாயகம், சமத்துவம் நோக்கி மனிதகுலத்தை முன்னெடுத்துச...