கனவில் வீரன்..நிஜத்தில் கோழை.
என் தந்தையின் உடன் பிறந்தவர் கள் மூன்று பேர்கள்.. எனக்கு விபரம் தெரிந்த காலத்திலிருந்து அவர்களுடன் சண்டை..பிரச்சினைதான்... என் தந்தை இறந்துவிட்ட பிறகு என் தாய்க்கு இவர்களாலும் சுற்றி குடியிருந்தவர்களாலும் தொடர்ந்து பிரச்சினைதான்.... அந்த பிரச்சினை என் தாயோடு சேர்ந்து எனக்கும் தொடர்ந்து பிரச்சினையாக இருந்து வந்தது... ஆரம்பத்தில் அடிதடியாகி எல்லாம் இருந்தது..வழக்கம் போலவே அவர்களிடம் அடி வாங்கிவிட்டு பேசாமல் அமைதியாகி விடுவேன்..... இந்த தொந்தரவு தாயிடமிருந்து எனக்கு வந்தது மாதிரி... என் சித்தப்பன்களிடமிருந்து என் சித்தப்பனின் மகன்களிடம் பற்றி தொடர்ந்தது.... இதில் கடைசி சித்தப்பனின் இரண்டாவது மகன் பெயர் குமார்..அவன் முஸ்லிம் பெண்ணை காதலித்து திருமணம் செய்து ராஜா முகம்மதுவாக மாறிவிட்டான்.... அவனின் பெயர் ராஜா முகம்மது என்பதே நடந்து பிரச்சினையின் போதுதான் எனக்கு தெரிய வந்தது.
ராஜா முகம்மதுவின் அப்பா பெயர் ஆண்டி....அவனும் தன் தந்தையைப்போல் இரவானதும் அரசு மதுபானக்கடையில் தண்ணியை வயிற்றில் நிரப்பிக் கொண்டு தள்ளாடி தள்ளாடி வந்து என் வீட்டுக்கருகில் நின்று என்னையும் என் தாயையும் என் தமக்கையையும் இதில் எழுத முடியாத அளவுக்கு திட்டுவான். என் அக்காவின் பிள்ளைகளையும் திட்டி தீப்பான்... இப்படியே இரவு ரெண்டு .மூன்று மணி வரையும் அவன் ஓய்ந்து சரிகிற வரையும் திட்டுவான்... இதை யாரும் கண்டுக் கொள்ள மாட்டார்கள்....சம்பந்தபட்ட நானே கண்டு கொள்ள மாட்டேன்... ஏனென்றால் அரசு சாராய கடையின் வியாபாரம் பாதிக்காமல் காவல் காக்கும் போலீசைப்பற்றி தெரிந்திருந்ததால்.... குடிகாரானின் வசவுகளைப் பற்றி அதட்டிக் கொள்வதில்லை...என் அக்காவின் பிள்ளைகளிடம் ஏற்கனவே பல தடவை சொல்லி விட்டதால் அவர்களும் கண்டு கொள்வதில்லை....இப்படி குடித்துவிட்டு கத்தி கத்தியே..அவன் செத்து போயிட்டான்... என் வீட்டார்களுக்கு... நிம்மதியாக இருந்தாலும் எனக்கு நிம்மதியில்லை....
அதுக்கு காரணம் இதுதான்... என் தாய்க்கு கொடுத்து வந்த தொந்தரவு எனக்கும் தொடருவதால்.... குடிகாரனின் வாரிசும் தொடரும் என்பதால்தான் ... அப்படி நான் தப்பாகவில்லை....அப்பனுக்கு பிள்ளை தப்பாக பிறக்கவில்லை என்பது போல... மதம்மாறி திருமணம் முடித்த குடிகாரனின் இளைய மகனும் மூத்த மகனும் குடித்துவிட்டு என்னையும் என் தமக்கையையும் திட்டி தீர்ப்பது தொடர் கதையாக தொடரந்தது.
கண்டும் காணாமல் ஒதுங்கியே இருந்த எனக்கு ஒரு நாள் அதிகாலையில கணவு வந்தது... அந்தக் கணவில்......
அன்று ஞாயிற்றுக் கிழமை ரம்ஜான் தினம் ...என்னதான் விடுமுறை தினமாகட்டும் கொண்டாட்ட திணமாக இருந்தாலும்..வேலை இல்லாத நாட்களே எனக்கு விடுமுறை தினம்.....இந்த தினம் எப்பொழுதாவுததான் கிடைக்கும் முன்பெல்லாம் ஒரு வேலை வந்தால் சட்டுபுட்டுன்னு முடித்து கொடுத்து விடுவேன்.. இப்போது வேலையாட்கள் பற்றாக்குறை மிஷின் கோளாறு...மற்றும் இன்ன பிற போக.. எனக்கும் வயது குறைந்து கொண்டே செல்வதால் முன்ன மாதிரி விரைவாக செய்ய முடியவில்லை என்பதால் ரெண்டு நாளில் முடிக்க வேண்டிய வேலைகள் நான்கு நாட்களாக ஆகிவிடுகிறது. அதனால்தான் எனக்கு விடுமுறை என்பதெல்லாம் கிடையாது.
அன்றும் வழக்கம் போல் வழக்கம்போல் வேலைகளை முடித்துவிட்டு இரவு 12 மணிக்குமேல் அசதியில் இரவு சாப்பிடாமல் உறங்கிவிட்டேன்.....அன்றைய தினம் வழக்கம் போலவே.. குடிகாரனின் மகன் ராஜா முகம்மது போதையுடன் திட்ட ஆரம்பித்தான்... அந்த திட்டு வழக்கம் போலவே கேடு கெட்டவையாகவும் இருந்தாலும் வந்து விழும் வார்த்தைகள் புதிது புதிதாகவும் அருகில் கேட்பது போல் இருந்தது. குறிப்பாக என்னை பற்றியதாக இருந்தது... நான் திருமணம் முடிக்காமல் இருப்பதை குறிப்பிட்டு வந்தது.
“ டேய்...ஓம்போதே.....பொட்டப்பயலே...... ஏண்டா...வீட்டுக்குள்ள ஒளிஞ்சுருக்கே..வெளியில வாடா.....”என்றபடியே என் தாயைப்பற்றி அவதுாறக பேசினான்.....என் தாய் இறந்தபோது நான் அவர்களை கூப்பிடவில்லை.... ஆனால் அவர்கள் வராமல் இருந்ததற்கு மிகவும் இழிவான காரணத்தை பிரயோகித்தான்.....எதையும் கண்டுக் கொள்ளாத நான் செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்திவிட்டு எழுந்து வெளியே வந்தேன்... என் மருமகன்.மருமகள் தடுத்த போது....ஒன் பாத் செல்வதாக சொல்லி விட்டு வெளியே வந்தேன். கிழக்கு பக்கமுள்ள பாத் ரூம்க்கு சென்று பாட்டு பாடி விட்டு திரும்புகையில் .என் எதிரில் வந்து நின்றான்.....திக் கென்றது எனக்கு நான் சுதாகரிப்பதற்குள் கையில் வைத்திருந்த கட்டையோ மட்டையோ எதுவென்று தெரியவில்லை என் மண்டையை பொளந்து விட்டான்....அவன் அடித்த அடியில் என் மண்டை வின்வின்னென்று வலித்தது.... என்னை அடித்த அடியிலும் போதையிலும் என் தலையில் அடித்த கட்டை அவன் கையிலிருந்து கீழே விழுந்தது.
அவன் அடித்த அடியில் வலி தாங்காமல் கோபம் கொண்டு அவனை திருப்பி அடிப்பதற்க்காக பொருட்களை தேடிய போது அவன் அடித்த மரக்கட்டை கிடந்தது. அதை எடுத்து பலம் கொண்ட மட்டும் அடித்து விளாசி விட்டேன். கீிழே விழுந்த அவனை பர பரவென்று இழுத்துச் சென்று அவன் வீட்டுக்கு சற்று அருகில் போட்டுவிட்டு வீட்டுக்குள் வந்துவிட்டேன்...
சற்று நேரம் கழித்து அடி விழுந்த தலையை தடவிக் கொண்டே பாத் ரூம் பக்கம் சென்று கை,கால் முகம் கழுவிக் கொண்டு துண்டால் துடைத்துக் கொண்டு அமர்திருந்த போது.....
என் மருமகள் பதறியிடித்தபடி வேகமாக வந்து கதவை சாத்தினார்... என்ன? ஏது? என்று கேட்டபோது.... நான் அடித்த அடியில் அவன் இறந்துவிட்டதாக அவனின் தாய் மனைவி அண்ணன் அண்ணனிள் மனைவி அழுது புலம்பி ஒப்பாரி வைப்பதாக சொன்னார்..
நானும் பதற்ற மடைந்து கண் விழித்த போது எனது தூக்கம் கலைந்து இருதய ஓட்ட துடிப்பு பலமாக இருந்தது. மணியை பார்த்த போது அதிகாலை மணி 6 யை காட்டியது... கண்டது கனவாக இருந்தாலும் நிஜமாகவே எனக்கு பதற்றமும் பயமும் தொற்றிக் கொண்டது. நான் கண்ட கனவு பலித்து விடுமோ ?? என்று
தொடரும்...
அதிகாலை கனவு பலிக்கும் என்பார்களே... நண்பரே
பதிலளிநீக்குகவலை வேண்டாம் நண்பரே
பதிலளிநீக்குகனவுகள் நிழல்கள்தான் எப்பொழுதுமே