படித்ததில் பகிர்ந்தது... எது... எது...எதனால்..இந்த நிலைமை...???
பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு... சில கேள்விகள்; இந்தியா வாழ் மக்கள்
ஏழை என்பதற்காக அவமானப்படுத்த படுகின்றார்களா...?
இல்லை
சாதி என்பதற்காக அவமானப்படுத்த படுகின்றார்களா...?
ஏழை என்பதினால் தீண்டாமையை கடைபிடிக்கின்றார்களா..?
இல்லை
சாதி என்பதினால் தீண்டாமையை கடைபிடிக்கின்றார்களா..?
காங்கிரஸ் பிஜேபி கம்யூனிஸ்ட் மற்றும் திராவிட கட்சிகளில் ஏழை என்பதற்காக மாவட்ட செயலாளராக வர முடியவில்லையா..?
இல்லை
சாதி என்பதற்காக மாவட்ட செயலாளராக வர முடியவில்லையா..?
கோயிலில் சாமி கும்பிட சென்ற பாரத ஜனாதிபதியை எழை என்பதற்காக கோயிலுக்குள் அனுமதிக்கவில்லையா..?
இல்லை
சாதி என்பதற்காக அனுமதிக்கவில்லையா..?
ஏழை என்பதற்காக தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர் நியமனம் நடக்கின்றதா...?
இல்லை
சாதியை பார்த்து நியமனம் நடக்கின்றதா...?
தாமிரபரணி, பரமக்குடி போன்ற கலகத்தில் காவலர்கள் எழை என்பதற்காக படுகொலை செய்தார்களா..?
இல்லை
சாதி என்பதற்காக படுகொலை செய்தார்களா..?
கிராமங்களில் சாக்கடை கழிவு, குப்பை கழிவு போன்றவைகளை ஏழை என்பதற்காக அப்பகுதியில் சேமிக்கின்றார்களா..?
இல்லை
சாதி என்பதற்காக சேமிக்கின்றார்களா..?
ஏழை என்பற்காக ஆணவப்படுகொலைகள் நடக்கின்றதா..?
இல்லை
சாதி என்பற்காக ஆணவப்படுகொலைகள் நடக்கின்றதா..?
பெரும்பாண்மையான கிராமங்களில் குடிக்க தண்ணீர் கொடுக்க மறுப்பது ஏழை என்பதற்காகவா...?
இல்லை
சாதி என்பதற்காகவா..?
ஏழை என்பதற்காக தனி சுடுகாடா..? இல்லை
சாதி என்பதற்காக தனி சுடுகாடா..?
பல பஞ்சாய்த்து தலைவர்களை தேசிய கொடியை ஏற்ற பல கிராமங்களில் ஏழை என்பதற்காக மறுக்கின்றார்களா..? இல்லை
சாதி என்பதற்காக மறுக்கின்றார்களா..?
வட இந்தியாவில் மாட்டுகறியை வைத்திருந்தவர்களை ஏழை என்பதற்காக சித்தரவதை செய்து படுகொலை செய்தார்களா..?
இல்லை
சாதி என்பதற்காக சித்தரவதை செய்து படுகொலை செய்தார்களா..?
ஏழை என்பதற்காக மலக்கழிவுகளை சுத்தம் செய்ய வைக்கின்றார்களா..?
இல்லை
சாதி என்பதற்காக சுத்தம் செய்ய வைக்கின்றார்களா..?
இந்துகளை ஏழை என்பதற்காக கோயில் அர்ச்சகராக முடியவில்லையா..? இல்லை
சாதி என்பதற்காக கோயில் அர்ச்சகராக முடியவில்லையா..?
எந்த அடிப்படையில் லல்லூ சிறையில் இருக்கின்றார்..? எந்த அடிப்படையில் ஊழல் செய்த நீரவ் மோடி, மல்லையா தண்டனை பெறாமல் தப்பி ஓட முடிகின்றது..? சாதி என்பதற்காகவா..? இல்லை பணக்காரன் என்பதற்காகவா..?
தகுதி-திறமை இருந்தும், ஏழை என்பதற்காக உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக வர முடியவில்லையா..?
இல்லை
சாதி என்பதற்காக உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக வர முடியவில்லையா..?
முக்கியமான கேபினட் மந்திரிகள் பணக்காரன் என்பதற்காக ஒதுக்கப்படுகின்றதா..?
இல்லை
சாதி என்பதற்காக ஒதுக்கப்படுகின்றதா..?
அரசு நிர்வாகத்தில் தகுதியும் திறமையும் இருக்கின்ற அதிகாரிகள் காத்திருப்பு பட்டியலில் வைத்திருப்பதற்கான காரணம் சாதியா..?
இல்லை அவர் ஏழையா..?
கீழ வென்மணியில் ஏழை என்பதற்காக 44 நபர்களை படுகொலை செய்தார்களா..? இல்லை
சாதி என்பதற்காக 44 நபர்களை படுகொலை செய்தார்களா..?
கொடியன்குளத்தில் ஏழை என்பதற்காக ஆட்சியர்களின் உத்தரவின் பெயரில் காவல் துறையினர் கிராமத்தை சூறையாடினர்களா?
இல்லை
சாதி என்பதற்காக கிராமத்தை சூறையாடினர்களா?
கண்டதேவியில் ஏழை என்பதற்காக கோவில் தேரையிழுக்க விடவில்லையா..?
இல்லை
சாதி என்பதற்காக கோவில் தேரையிழுக்க விடவில்லையா..?
பெண்களை சாதி என்பதற்காக கற்பழித்து படுகொலை செய்கின்றார்களா..?
இல்லை
ஏழை என்பதற்காக கற்பழித்து படுகொலை செய்கின்றார்களா..?
***************
இந்தியாவில் உயர் சாதியில் இருக்கின்ற ஏழைகளுக்கு நடக்கக்கூடிய வன்முறையோ..! அடக்குமுறையோ..! சித்தரவதையோ..! ஏதாவுது ஒரு உதாரணத்தை சுட்டி காண்பிக்க முடிந்தால், நானும் உங்களுடன் சேர்ந்து கொண்டு சமூகத்தை, பொருளாதார அளவு கோலாக வைக்க சொல்லி போராட வருகின்றேன்..!!!
எங்கேயாவது உயர் சாதி ஏழை பெண்னை கூட்டமாக சேர்ந்து கற்பழித்த உதாரணத்தை சுட்டிக்காட்ட முடியுமா..?
எங்கேயாவது உயர் சாதி ஏழை மக்கள் தீண்டாமை கொடுமைக்கு அகப்பட்டதுண்டா..?
இந்தியாவில் பொருளாதார அளவுகோலாக வைப்பது மிகப்பெரிய மோசடித்தனம்..!!!
இதை நாம் அனுமதித்தால் பட்டியல் இன/பழங்குடி இனம் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கிடைக்கப் பெறுகின்ற அனைத்து பங்கினையும், வரும் காலங்களில் போலி
சான்றிதழ்கள் மூலம் கபலிகரம் செய்யப்போவது உறுதி..!!!
அரசியல் சாசன சட்டத்தில் சமூக மற்றும் கல்வியில் பின்பதங்கியிருக்கின்றவர்களுக் கான பிரதிநித்துவம் என்று இருந்தும், தற்போது அரசு நிர்வாகத்தில் சுமார் 70% த்தனர் உயர்சாதிகள் கைப்பற்றி இருப்பது எப்படி..? பொருளாதார அளவு கோலை வைத்துவிட்டால் கேட்கவே வேண்டாம்..!!! ஒட்டு மொத்த பிரதிநித்துவத்தையும் கைப்பற்ற போவது உறுதி..!!!
இந்து மதம் இல்லாத நாடுகளில், பெருளாதாரத்தை அளவுகோலாக வைக்க சொல்லி போராடுவது, சட்டமியற்ற சொல்லுவது ஏற்புடையது. ஆனால் இந்தியாவில் இந்து மதம் இருக்கின்ற வரை சாதி ஏற்றதாழ்வு நீடித்திருக்கும். சாதி ஏற்ற தாழ்வு இருக்கின்ற வரை, தீண்டாமை கொடுமைகளும், அடக்குமுறைகளும் கீழ் சாதிகளுக்கு மட்டுமே நடந்து கொண்டிருக்கும்..!!!
இந்து மதம் இருக்கின்ற வரை, இடஒதுக்கீட்டில் பொருளாதார ஏற்ற தாழ்வை அளவுகோலாக கொண்டுவருவது, சாதியின் பெயரால் வஞ்சிக்கப்படுகின்ற 85% (SC/ST/OBC) மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்தாக முடியும். என் சமூகமே உறங்கியது போதும். விழித்துக்கொள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை