புதன் 22 2019

அதிகாலை கனவு-21.

கனவால் தப்பித்த கதை...




பெரும்பாலும் எனக்கு வரும் கனவுகள்  எல்லாம்  என்னை பயமுறுத்தும் நிகழ்வுகளாகவே வந்து தொலைக்கின்றன... சில சமயம் கவலையை அள்ளி தெளித்து விடுகின்றன...அதோடு பெரும் குழப்பத்தை தோற்றுவித்துவிடுகின்றன்.

என் தந்தையின் தந்தை பெயர் ஆறுமுகம். ஆறுமுகத்தின் தந்தையின் பெயர் ஆறுமுகம். ஆக ஆறுமுகத்தின் மகன் ஆறுமுகத்திற்கு ஒரு பெண்ணும் நாலு ஆண் மகன்களும் பிறந்தன... மூத்த மகளுக்கு மூன்று ஆண்களும் ஐந்து பெண்களும் உள்ளனர். இரண்டாவது ஆண்மகனுக்கு  அதாவது என் அப்பாவுக்கு நானும் என் அக்காவும், ஆறுமுகத்தின் மூன்றாவது மகனுக்கு இரண்டு பெண்களும் ஒரு ஆணும், நலாவதுக்கு மூன்று பெண்களும் ஒரு ஆணும், ஐந்தாவது ஆணுக்கு இரண்டு மகன்களும் ஒரு பெண்ணும்... 

ஆறுமுகத்தின் மகன் ஆறுமுகத்திற்கும் செல்லம் மகனான பண்டாரத்திற்கும் பாகப்பிரிவினை ஏற்பட்டு எனக்கு கிடைத்த இடத்தை நாளாது தேதிவரை எந்தவித வில்லங்கமும் இல்லாமல் அனுபவித்து வந்த இடத்தை நான் தங்களுக்கு  ரூபாய் 200க்கு கிரையமாக எழுதிக் கொடுக்கிறேன்.  என்று என் தந்தையார் வேலை செய்த பண்ணையார் ..தற்போது குடியிறுக்கும் வீட்டிலிருந்து என்னையும் என் தாயையும் வெளியேற்றக்கோரி முன்சீப் கோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கில் கிரையமாக பெற்ற பத்திரத்தை ஆவணமாக இணைத்துள்ளார்.. அந்த இடம் கிரையம் ஆவதற்கு  முன்பே என் தந்தையார் பெயரில் கிஸ்தி வரியும் வுீட்டு வரியும் இருந்ததால். நானும் என் தாயும் அந்த வீட்டில் குடியிறுக்க முடிந்தது.

எங்களை வெளியேற்ற அடிதடியும், பொய் வழக்கும்.... வீட்டில் தீ வைக்கும் சம்பவமும்  காலம் கடத்தாமல் கனகச்சிதமாக நடந்தேறியது....

அன்றைய நாளில் இதே போல்தான் என் கனவில் என் வீட்டில் தீ வைத்துவிட்டு செல்வது   போல் திடுக்கிட்டு முழித்து நானும் தாயும் தப்பிக்க முடிந்தது.... அந்தக் கனவு  ..அடுத்து...

2 கருத்துகள்:

  1. கனவுகள் ஏன் பயங்கரமாய் இருக்க வேண்டும்?அல்லது கனவுகளைக்கண்டு நாம் ஏன் பயம் கொள்ள வேண்டும்? நினைவுகளின் பிரதிபலிப்புதான் கனவு என்பார்கள்!

    பதிலளிநீக்கு
  2. நல்ல தூக்கத்தில்தான் கனவு வரும் என்கிறார்கள்...எது உண்மை ஆராய்ந்துதான் முடிவுக்கு வர வேண்டும்

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...