பக்கங்கள்

Sunday, May 26, 2019

அதிகாலை கனவு-22

கண் மூடும் வேளை......

கண்ணை மூடினதும்
கும்மிருட்டாய் இருந்தது
அதனால் எதையும்
கண் கொண்டு
பார்க்க முடியவில்லை.

அந்த கும்மிருட்டில்
ஒலியையாவது  கேட்கலாம்
என காதை
விழித்து கேட்டால்
 நிசப்தமாக இருக்கிறது
அதனால் காதும்
கேட்காமல் போனது

மூச்சு விடும்
சத்தமாவது
தெரிகிறதா என்று
மூக்கையாவது தொட்டு
பார்த்தால் அய்யோ
மூக்கையே காணவில்லை

குரல் கொடுத்தாவது
பார்ப்போம் என்றால்
பல்லெல்லாம் விழுந்து
குரல் எழும்ப
மறுக்கிறது..ஆ..ஆ
வென்று பதறி
கண்விழித்து எழுந்தால்
எல்லாம் கனவென்று
தெரிகிறது. சேவென்று
சொல்லி மீண்டும்
படுத்து கண்
மூடினால் இருட்டாகத்தான்
 எல்லாம் தெரிகிறது.

அட..நான்
என்ன பூனையா...???.


4 comments :

 1. ஹா.. ஹா.. பூனை கதையாகிப் போச்சே...

  ReplyDelete
  Replies
  1. அந்த நிலைமைக்கு போயிருச்சுங்கோ.....

   Delete
 2. ஆகா
  கனவுகள் தொடரட்டும்

  ReplyDelete
  Replies
  1. ஆசிரியர் சொல்வது போல் நடக்கிறேன்..

   Delete

.........